வீட்டுத் தோட்டம் – சொட்டு நீர் பாசனம் (Drip Kit)

Welcome to ‘தோட்டம்’ 
நண்பர்களுக்கு வணக்கம். போன பதிவில் கூறியபடி, சில கோவை நண்பர்கள் தோட்டத்தை பார்க்க தங்கள் ஆவலை தெரிவித்து இருந்தார்கள். செப்டம்பர் 13-ஆம் தேதி ஞாயிற்றுகிழமை ஓரளவு விளைச்சளோடு தோட்டம் பார்க்க சரியாக என்று இருக்கும் என்று நினைக்கிறேன். செப்டம்பர் 13-ஆம் தேதி, ஞாயிறு காலை பத்து மணி முதல் ஒரு மணி வரை விருப்பம் இருக்கும் நண்பர்கள் வரலாம். உங்கள் வரவை thooddamsiva@gmail.com க்கு உங்கள் மொபைல் எண்ணோடு ஒரு மடல் அனுப்பி உறுதி செய்து கொள்ளுங்கள். தோட்டத்திற்கு வழியை உங்கள் மடலுக்கு பதிலாக அனுப்புகிறேன்.

 
வரும் நண்பர்கள், உங்கள் எதிர்பார்ப்பை கொஞ்சம் குறைவாகவே வைத்து வாருங்கள் (இல்லன்னா ஷங்கர் படம் மாதிரி புஸ்ஸுன்னு போயிரும்). இங்கே பெரிய Shade Net எல்லாம் கட்டி, பெரிய பெரிய பாத்திகளில் ஒரு முப்பது கத்தரி, முப்பது மிளகாய் செடி என்று எல்லாம் காண முடியாது. மூன்று பேர் கொண்ட குடும்பத்துக்கு என்ன தேவையோ அவ்வளவு குறைவான செடிகளே இருக்கும். ஆனாலும் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவில் எல்லா செடிகளையும் பார்க்காலாம் 🙂
வீட்டுத் தோட்டம் – சொட்டு நீர் பாசனம்

 

மாடித் தோட்டத்திற்கு சிலர் சொட்டு நீர் பாசனம் (Drip irrigation) அமைக்கிறார்கள். நான் ebay தளத்தில் சில Drip irrigation செட் பார்த்திர்க்கிறேன். 50 செடிகள், 100 நூறு செடிகள் என்று ஒரு செட்டாக கிடைக்கிறது. போன மாதம் அக்ரி இன்டெக்ஸ்-ல் KSNM Drip irrigation செட் ஓன்று பார்த்து வாங்கி வந்ததை சொல்லி இருந்தேன். 50 Sq.Meter, 100 Sq.Meter என்று செட் வைத்திருந்ததை பார்த்து சந்தேகம் வந்தாலும், “For Kitchen Garden என்று போட்டிருந்ததால், வாங்கி தான் பார்க்கலாமே என்று வாங்கி வந்தேன். வந்து பார்த்த போது சில பொருட்கள் இல்லாமல் இருந்தாலும், KSNM கம்பெனியில் இருந்து அழைத்து தவறு நடந்து விட்டதாக கூறி இரண்டு வாரத்தில் இன்னொரு செட் இலவசமாகவே அனுப்பி வைத்திருந்தார்கள். அதோடு விளக்க சி.டி ஒன்றும் கூட அனுப்பி வைத்திருந்தார்கள். 
விளக்க சி.டி பார்த்த போது தான் இது விவசாயிகள் பயன்படுத்தும் சொட்டு நீர் பாசனத்தின் மினியேச்சர் செட் என்று. அதாவது 50 Sq. Meter அளவுக்கு இடம் இருந்தால் அதில் ஒரு மீட்டர் இடைவெளியில் பத்து மீட்டர் நீளத்திற்கு ஐந்து Drip Tape அமைத்து, அந்த Drip Tape-ல் அரை மீட்டருக்கு ஒரு துளை அமைத்து சொட்டு நீர் பாசனம் செய்வது. 50 Sq. Meter-ல் மொத்தம் ஐம்பது செடி நடுவது மாதிரி ஒரு அமைப்பு. கீழே உள்ள படத்தை பார்த்தால் புரியும்.  (Images from KSNM demo CD)
 ksnm-1ksnm2
இதில் கொடுக்கப்பட்டுள்ள 50 Sq. Meter என்பது கிட்டதட்ட 500 சதுர அடி இடம். அடிக்கு ஒரு செடி வைத்தாலும் நான் 500 செடி வைத்து கொள்வேன் 🙂 . ஒரு பெரிய தோட்டமே போட்டு விடலாம். தவிர இப்படி லட்டு மாதிரி 50 Sq. Meter-ல் சதுரமாய் இடம் எல்லாம் என்னிடம் இல்லை. 
500 ரூபாய் (Agri Index Rate Rs.450) கொடுத்து வாங்கியாகி விட்டது, இதை எதாவது உருப்படியாய் மாற்றலாம் என்று யோசித்தபோது தான் ஒரு ஐடியா வந்தது. இதை லேசாய் மாற்றி சுற்றி இருக்கும் மரங்களுக்கு நீர் பாய்க்க பயன்படுத்தினால் என்று தோன்றியது. மரங்களுக்கு சொட்டு நீர்  பாசனம் எல்லாம் வேலைக்காகாது. அதனால் Drip Trap-ல் இருக்கும் துளைகளை எல்லாம் (45 cm spacing) ஒரு insulation Tape வைத்து அடைத்து விட்டு,  T-Connector-ஐ வைத்து ஒவ்வொரு மரத்துக்கும் நேரடியாக பைப் மாதிரி செட் செய்து விட்டேன். என்னிடம் இரண்டு செட் இருந்ததால் மொத்தம் பத்து T-Connector வைத்து பத்து மரங்களுக்கு ஒரே நேரத்தில் நீர் பாய்வது மாதிரி செய்து விட்டேன்.
Drip Tape வைத்து அமைக்கும் போது முடிந்த அளவுக்கு நிலம் ஒரே மட்டத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தவிர, Drip Tape எங்கும் மடங்காதவாறு அமைக்க வேண்டும். நாம் Drip Tape-ஐ நேர் கோட்டில் இருந்து மறு திசைக்கு திருப்ப வேண்டிய இருந்தால், ஒரு T-Connector-ம் ஒரு End Cap-ம் வைத்து திருப்பி விடலாம் ( L – Connector ஏதும் இருக்கிறதா என்று தெரியவில்லை. இருந்தால் பயனுள்ளதாக இருக்கும் )
இந்த பத்து மரங்களுக்கும் இதே அமைப்பை PVC பைப் கொண்டு அமைப்பது என்றால் செலவும் அதிகமாகும், வேலையும் அதிகம். இந்த Drip Kit அமைக்க மிக எளிதாக இருக்கிறது. சும்மா தேவையான நீளத்திக்கு Drip Tape வைத்து T-Connector வைத்து  கோர்த்துக் கொண்டே போக வேண்டியது தான்.   
இதை அமைத்தப் பிறகு தண்ணீரை திறந்து விட்டுவிட்டு வேறு வேலைகளை பார்க்க முடிகிறது. அனால் வழக்கத்தை விட நிறைய தண்ணீர் செலவான மாதிரி ஒரு உணர்வு. சின்ன பைப்பில் இருந்து நீர் மெதுவாக விழுவதால் நீர் பரவாமல் ஒரே இடத்திலேயே உறிஞ்சப்பட்டு விடுகிறது. மொத்தமாய் பாத்தி முழுவதும் ஈரமாக நிறைய நீர் செலவாவது போல தெரிகிறது. இன்னும் சில முறை பார்த்துவிட்டு முடிந்தால் எல்லா மரங்களுக்கும் இதே போல செட் செய்து விட்டால் நிறைய நேரம் மிச்சமாகும். தரையில் வைக்கும் செடிகளுக்கு கூட இதை போல ஒரு அமைப்பை செய்தால் பயன்படலாம்.
KSNM Drip Kit தரத்தை பற்றி கூற வேண்டும் என்றால், T-Connector, End Cap எல்லாவற்றின் தரமும் மிக நன்றாக இருக்கிறது. T-Connector-ல் உள்ள Lock & Valve மிக உறுதியாக இருக்கிறது.  துளையே இல்லாமல் Drip Tape கிடைத்தால் நம் விருப்பபடி பாசனத்தை  அமைக்க ஏதுவாக இருக்கும். T-Connector ஒவ்வொன்றும் தனியாக என்ன விலை சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. கோவையில் அவர்கள் கம்பெனி போய் விசாரித்து, தோட்டத்தில் இந்த பாசன திட்டத்தை விரிவு படுத்தினால் கூறுகிறேன். 

மற்றபடி, மாடித் தோட்டத்திற்கு சொட்டு நீர் பாசனம் அவசியமா என்றால், எனக்கு பெரிதாய் அதில் உடன்பாடு இல்லை. ஒரு Mugதண்ணீர் எடுத்து, நம் உள்ளங்கை நனைய செடிகளுக்கு ஊற்றி விடும் போது ஒரு சந்தோசம் இருக்கத் தான் செய்கிறது. கொஞ்சம் நேரம் ஆகும். ஆனால் எனக்கு கிடைக்கும் நல்ல விளைச்சலுக்கு அதுவும் ஒரு காரணமாக எனக்கு தோன்றும். இருந்தாலும், ஊருக்கு போகும் போது செடிகளை எப்படி பார்த்துக் கொள்வது என்ற கேள்வி இருக்கத் தான் செய்கிறது. Timerவைத்து, சொட்டு நீர் பாசனம் எல்லாம் அமைக்க வழி இருக்கிறது. கொஞ்சம் செலவு ஆகும். ஊருக்கு போகும் ஒரு வாரம் மட்டும் சமாளிக்க இது பயன்படலாம். அப்படி ஏதும் அமைத்தால் பிறகு கூறுகிறேன்.

01-t-connector02-end-cap03-drip-tape04-t-connector-connected05-end-cap-connected06-connection-to-main-hose07-entire-setd1d2d3d5d6d7

ஜூன்-டிசம்பர் சீசன் – Updates

 இந்த சீசனின் அறுவடையை ஆரம்பித்தாகி விட்டது. வெண்டை, செடி அவரை, கத்தரியில் காய் பறிக்க ஆரம்பித்து விட்டோம். தக்காளி, மிளகாய் எல்ல்லாம் இன்னும் கொஞ்சம் பிஞ்சாக இருக்கிறது.
கத்தரியில் நான்கு வகை. அத்தனையும் நாட்டு வகை என்பது இந்த சீசனின் சிறப்பு. சில படங்கள் கீழே. அடுத்த பதிவில் விவரமாய் கூறுகிறேன்.
123456

27 thoughts on “வீட்டுத் தோட்டம் – சொட்டு நீர் பாசனம் (Drip Kit)

  1. கண்ணு பட போகிறது. சுத்தி போட சொல்லுங்கள். அருமை.ஆவலுடன் அடுத்த பதிவை எதிர் பார்த்து காத்திருக்கிறேன்

    Like

  2. 🙂 இந்த படங்களை பார்த்து மற்றவர்களுக்கும் ஒரு ஆர்வம் வருகிறதே. கண்பட்டால் படட்டும் 🙂

    Like

  3. வணக்கம் அண்ணா . கத்திரிக்காய் பார்க்க மிக அருமையாக உள்ளது. நாங்கள் பஞ்ச காவ்யா தயாரித்துள்ளோம். அதை தினமும் கலக்கிவிட வேண்டுமா அல்லது கேனில் ஊற்றி வைத்து விடலாமா ? (மதுரையில் இருந்து செந்தில்)

    Like

  4. பஞ்சகாவியா தயாரிக்கும் முயற்சிக்கு வாழ்த்துக்கள். பஞ்சகாவ்யாவை தினமும் இரண்டுமுறை நன்றாக கலக்கி விடவேண்டும். காற்று புகுமாறு ஒரு கேனில் வையுங்கள். அப்படியே ஊற்றி வைக்க வேண்டாம். நல்ல நிழலில் வைக்கவும்.

    Like

  5. வணக்கம் அண்ணா.வாழ்த்துக்கள் நன்றாக விளைந்துள்ளது.நாங்கள் போட்ட கத்திரி,தக்காளி செடிகள் இப்போது ஒரு கட்டத்தில் வளர்ச்சி நின்று விட்டதுபோல் தெரிகிறது (கத்திரி-4 இன்ச்,தக்காளி-6) முளைத்து 1.5 மாதம் ஆகிறது ஆலோசனை விளக்கமும் கூறவும் அண்ணா.திருப்பூர் சரவணக்குமார்.

    Like

  6. ஏதோ சத்துக் குறைவு போல தெரிகிறது. வெயில் எவ்வளவு நேரம் தினமும் செடியில் படும்? படம் இருந்தால் அனுப்புங்கள். பார்ப்போம்.

    Like

  7. திறந்தவெளியில் தான் செடி இருந்தது.இப்போது crow bag ல் நீங்கள் சொல்லிய முறையில் கீரைவிதை போட்டுள்ளேன்.தேங்காய் நார்,மண்புழு உரம்,செம்மண் கலவையில்.முதன் முறையாக இவ்வகையில் போட்டுள்ளதால் தங்களின் மேலான ஆலோசனைகளை கூறவும் அண்ணா.திருப்பூர் சரவணக்குமார்.

    Like

  8. கீரை நன்றாக வரும் எந்த பிரச்னையும் இருக்காது. தொடக்கத்தில் நீர் ஊற்றும் போது மட்டும் கொஞ்சம் கவனமாக நாற்றுகள் அவ்வளவாக பாதிக்காதவாறு ஊற்றுகள். கீரைக்கு முதலில் போட்ட உரமே போதும். இடையில் மறுபடி உரம் போடவேண்டியது இல்லை.

    Like

  9. சுண்டைக்காய் விதை கிடைப்பது கடினம் தான். நான் முடிந்தால் இங்கே செடியில் எடுக்க முடியுமா என்று பார்த்து சொல்கிறேன். நீங்கள் கடையில் கிடைக்கும் சுண்டைக்காய் வற்றலை வாங்கி போட்டு பார்க்கலாமே. அதுவும் காய்ந்த விதை தான். மதுரையில் Coir Pith எங்கு கிடைக்கிறது என்று கூற முடியுமா?

    Like

  10. நஞ்சில்ல நாட்டு கத்திரிக்காய் பார்க்க மிக அருமையாக உள்ளது. ருசியும் அருமையாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.

    Like

  11. ஆமாம் நண்பரே, அதிலும் அந்த முள் கத்தரி (பச்சை) அருமை. விதைக்கு ஒரு கத்தரிக்காயை விட்டு வைத்திருக்கிறேன் 🙂

    Like

  12. திரு சிவா நாம் அகஸ்டின் சென்னை.. தங்கள் வலை பூவை பார்த்துதான் 2 மாதத்திற்க்கு முன் வீட்டு தோட்டம் போட்டேன்இப்போது எப்படி உள்ளது என படத்தை உங்களுக்கு அனுப்புகின்றேன்.. முடிந்தால் உங்கள் பக்கத்தில் போடுங்கள்

    Like

  13. மிக்க மகிழ்ச்சி நண்பரே. கண்டிப்பாக உங்கள் தோட்டம் படங்களை (முடிந்தால் மற்ற விவரங்களையும் – பொருட்கள் எங்கு வாங்கினீர்கள், எவ்வளவு ஆனது, என்ன புதிதாய் முயற்சிக்கிறீர்கள், என்னவெல்லாம் விதைத்திருக்கிறீர்கள்) அனுப்புங்கள். மற்ற நண்பர்களுக்கும் பயன்படும்.

    Like

Leave a comment