வீட்டுத் தோட்டம் பயிற்சி வகுப்புகள் – ஒரு பார்வை

இப்போது ‘வீட்டுத் தோட்டம்’ ‘மாடித் தோட்டம்’ பற்றி பயிற்சி வகுப்புகளை நிறைய  பார்க்க முடிகிறது. அதை பற்றி ஒரு சின்ன கண்ணோட்டம். நான் இது வரை கலந்து கொண்ட இரண்டு பயிற்சி வகுப்புகளையும் வைத்து பார்த்தால் ஓன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. அங்கே வருபவர்களுக்கு எதையும் சொல்லிக் கொடுப்பதில்லை என்பதில் தெளிவாகவே இருக்கிறார்கள். Coir Pith-ஐ காட்டுகிறார்கள. ஆனால் அது எங்கு கிடைக்கும், விலை எவ்வளவு, எப்படி பயன்படுத்த வேண்டும், என்ன என்ன கலந்து பயன் படுத்த…

அக்ரி இன்டெக்ஸ் (Agri Index) 2013

நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்த வருட அக்ரி இன்டெக்ஸ் (Agri Index 2013),  இரண்டு வாரங்களுக்கு முன்பு (July 12 – 14) ரொம்ப சிறப்பாகவே முடிந்தது. ஞாயிறு காலை 9 மணிக்கெல்லாம் குடும்பமாய் கிளம்பி விட்டோம். கொடிசியா வளாகத்தில் Hall A, B, C முழுக்க நூற்றுக்கணக்கான ஸ்டால்கள். போன வருடம் பார்த்த நிறைய ஸ்டால்களை இந்த வருடமும் பார்க்க முடிந்தது. வழக்கம் போல வளாகத்துக்கு வெளியே கால்நடை வளர்ப்பு, தேனீ வளர்ப்பு மற்றும்…