அக்ரி இன்டெக்ஸ் 2016

கோவையின் மிகப் பெரிய விவசாய மற்றும் தோட்டக்கலை கண்காட்சி அக்ரி இன்டெக்ஸ், போன வாரம் இனிதே நிறைவடைந்தது. வழக்கம் போல ப்ளாக் நண்பர்களின் சந்திப்பு, விதைகள் மற்றும் தோட்டம் பொருட்கள் சில வாங்குவது என்று சனி, ஞாயிறு என்று இரண்டு நாளும் கொடிசியா வளாகத்தில் தான். Advertisements

பசுமை விகடனில் தோட்டம்

பசுமை விகடனில் இருந்து இரண்டு மாதத்திற்கு முன்னமே அழைத்து தோட்டம் பற்றி கேட்டார்கள். அப்போது தான் சீசனை ஆரம்பித்து இருந்ததால் செடிகள் எல்லாம் சிறியதாக இருப்பதால் பெரிதாய் ஏதும் செடிகளை பார்க்க முடியாது, ஒரு இரண்டு மாதம் கழித்து படம் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறி இருந்தேன். இரண்டு வாரங்களுக்கு முன்பு வந்து சின்னதாய் ஒரு பேட்டியும் எடுத்து, குடும்பத்தோடு படமும் எடுத்து சென்றார்கள். இந்த வாரம் பசுமை விகடனில் வந்திருக்கிறது. நண்பர்கள் முடிந்தால் பசுமை…

புதிய தலைமுறை மற்றும் அக்ரி இன்டெக்ஸ் 2015

புதிய தலைமுறை இதழில் நான் போன வாரம் புதிய தலைமுறை இதழில் ‘பசுமைப் பக்கங்கள்’ என்ற தலைப்பில் எனது கட்டுரை வந்துள்ளது (அந்த கட்டுரையில் எனது பங்கு மிக குறைவு தான். தருமபுரி வேளாண் உதவி இயக்குனர் திரு.மதுபாலன் அவர்களின் கட்டுரை என்று தான் சொல்லவேண்டும்). எனக்கு இந்த வாய்ப்பு அளித்த புதிய தலைமுறை குழுவுக்கும், சின்னதுரை அவர்களுக்கும் எனது நன்றி.     அமைந்தால் எல்லாமும் நன்றாக மொத்தமாய் அமையும் போல. போன வாரம் விகடன். இந்த…

விகடனில் ‘தோட்டம்’ வலைப்பூ

நண்பர்களுக்கு வணக்கம். இந்த வாரம் அவள் விகடன், வீட்டுத்தோட்ட சிறப்பிதழாக வந்திருக்கிறது. அதில் ‘பூத்துக் குலுங்க வழிகாட்டும் ‘தோட்டம்’ வலைப்பூ’ என்ற தலைப்பில் எனது தோட்டம் ப்ளாக் பற்றி ஒரு பக்கத்திற்கு கொடுத்திருக்கிறார்கள். இந்த வாரம் அவள் விகடன் முடிந்தால் வாங்கி பாருங்கள். விகடனில் இருந்து என்னை தொடர்பு கொண்டு வீட்டுத்தோட்ட சிறப்பிதழாக வரும் இதழ் வர இருப்பதாக கூறி நமது ப்ளாக் பற்றி விவரம் கேட்டார்கள். இந்த சீசன் செடிகள் இப்போது தான் நாற்றாக நிற்பதால்…

தகவல் – தோட்டம் பொருட்கள் (சென்னை)

எனக்கு வார இறுதியில் நமது ப்ளாக் நண்பர்களிடம் இருந்து வரும் அழைப்புகளில் முக்கால்வாசி சென்னையில் இருந்து தான் வருகிறது. தமிழ்நாட்டில் முக்கால்வாசி பேர் சென்னையில் தான் இருக்கிறார்கள் போல 🙂. நிறைய பேர் மாடித் தோட்டம் பற்றி தான் ஆர்வமாய் கேட்கிறார்கள். முக்கியமாக Grow Bags, மண்புழு உரம் மற்றும் Coir Pith எங்கே வாங்கலாம் என்று கேட்கிறார்கள். கோவையில் தோட்டம் சம்பந்தமாக எங்கே என்ன கிடைக்கும் என்று என்னிடம் நிறைய விவரங்கள் இருக்கிறது (நண்பர்கள் மூலமாகவும்,…

தகவல் – தோட்டம் – 2015 Plans

நண்பர்கள் எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். இந்த 2015 நம் எல்லோருக்கும் இனிதாய் அமையட்டும். இந்த 2015-ல் தோட்டத்தில் நிறைய முயற்சிக்க நினைத்திருக்கிறேன். தோட்டம் பற்றி நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் (முக்கியமாக பூச்சி கட்டுப்படுத்துதல்), அப்புறம் எனது கனவு மாடித் தோட்டம் அமைப்பது இப்படி நிறைய. இந்த வருடத்தின் முதல் பதிவாய், சின்னதாய் ஒரு அறிவிப்பு. அதற்கு முன், பொதுவாய் இணையத்தில் ஒருவர் அறிமுகம் ஆகும் போது எப்படி அழைப்பது என்று ஒரு தயக்கம் இருக்கும். என்னை சிலர்…

தகவல் – அக்ரி இன்டெக்ஸ் 2014 (Agri Intex 2014)

அக்ரி இன்டெக்ஸ் பற்றி போன வருட பதிவுகளில் நிறைய எழுதி இருக்கிறேன். வீட்டு தோட்டம் ஆர்வம் இருக்கும் கோவை வாசிகளுக்கு வருடா வருடம் வரும் ஒரு திருவிழா மாதிரி தான் இது. தோட்டம் பற்றி, விவசாயம் பற்றி, செடிகள் பற்றி நிறைய விசயங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். முன்பு தோட்டத்திற்க்கு தேவையான நிறைய பொருட்களுக்கு அக்ரி இன்டெக்ஸ் ஸ்டால்களை நம்பி தான் இருந்தேன். அக்ரி இன்டெக்ஸ் ஸ்டால்கள் மூலம் தெரிந்து கொண்ட விஷயங்கள் ஏராளம்.   நமது…