தோட்டத்து விருந்தாளிகள்

தோட்டத்தில் விதை போடுகிறோம், செடி வளர்க்கிறோம். அறுவடை செய்கிறோம். அதை சமைத்து சாப்பிடும் போது ஒரு பெரிய சந்தோசம். அதிகமாய் வரும் போது அதை சொந்த பந்தங்களுக்கு கொடுக்கிறோம். அதிலும் ஒரு சந்தோசம். அதையும் தாண்டி இவ்வளவு பசுமையாய் செடியும் மரங்களுமாய் உருவாக்கிய இடத்தில் சில பறவைகளுக்கும், அணில்களுக்கும் கொஞ்சம் இடமும் உணவும் கொடுத்தால் இன்னும் சந்தோசம் தானே.   விவசாயம் என்பதே பிற உயிர்களுக்கும் உணவளிப்பதாக இருக்க வேண்டும் என்று மறைந்த நம்மாழ்வார் ஐயா கூறுவார்.…

அணில் (ANIMAL) Watching

வீட்டில் செடி, மரம் நிறைய இருப்பதால் அணில், குருவி, காக்கா என்று ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும்.. சில நேரம் பறவைகள் வெயில் தாங்க முடியாமல் வீட்டில் ரோஸ் தொட்டியில் தேங்கி நிற்கும் தண்ணீரில் குளித்துக் கொண்டிருக்கும். நிறைய அணில்கள் வீட்டில் காக்காவுக்கு வைத்த சாப்பாட்டிற்கு அதோடு சண்டை போட்டுக் கொண்டிருக்கும். இப்படி நிறைய காட்சிகளை பார்க்கலாம்.  ஒரு நாள் பொழுது போகாமல் அணிலுக்கு உணவு வைப்பது மாதிரி ஓன்று செய்யலாம் என்று ஆரம்பித்தேன். முன்பு வளர்த்த…