About me

சிறுவயதில் ஒரு கிராமத்தானாய் இயற்கைக்கும் எனக்கும் பெரிதாய் இடைவெளி இருந்ததில்லை. வீடுகளில் உரக்குழிகளில் மழைக்காலங்களில் வளர்ந்து நிற்கும் கத்தரி, தக்காளி செடிகள் தான் எனது முதல் தோட்டத்தின் நாற்றுகள். அதிலும் இரண்டு செடிகளை எடுத்துப் போய் பள்ளிக்கூடத்தில் நண்பனிடம் பகிர்ந்து கொள்வதில் நிறைய சந்தோசம் இருந்தது. எதையும் கற்றுக்கொள்ளாமலேயே மனசில் ‘தாய் மண்ண பிரிச்சிடாதேடா’ என்று வேரோடு ஒட்டி இருக்கும் மண்ணையும் இருக்கமாய் பற்றிக்கொள்ளும் நேசம் இருந்தது. வளர்ந்ததும் படிப்பு, வேலை என்று வழக்கமான வாழ்க்கை சூழலில் தூரமாய் போன அந்த இயற்கையை ஓரளவுக்கு நெருங்கும் எனது சிறு முயற்சியே எனது தோட்டம்.

என்னை பற்றி சொல்லவேண்டும் என்றால், முழு பெயர் சிவராஜா. வளர்ந்தது, பள்ளி, கல்லூரி படிப்பு எல்லாம் திருச்செந்தூர் அருகில் நாசரேத்தில் (Margoschis school, Margoschis college 1993-1996 ). பொறியியல் படிப்பு சென்னையில் (MIT, Chrompet, 1996-1999). பிறந்த வருடம் 1976. வேலை, இங்கே கோவையில் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில்.

பெரிதாய் தோட்டம் பற்றி எழுத தொடக்கத்தில் திட்டம் இல்லை என்றாலும், ஏற்கனவே வலைப்பூ எழுதிய பழக்கத்தில் ஆரம்பித்தது தான் எனது தோட்டம் வலைப்பூ. எனது எழுத்துக்களை ரசித்து பாராட்டி, நேரம் செலவிட்டு தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்ட உங்களை போன்ற நண்பர்கள் கூட்டம் ஏராளம்.

இந்த ‘தோட்டம்’ என்னை போன்ற தோட்டத்தில் ஆர்வமுள்ள நண்பர்களை இணைக்கும் ஒரு சிறிய ஊடகமாய் இருந்தாலே போதும். தோட்டம் நுணுக்கங்களை இன்னும் கற்றுக்கொள்வோம். கற்றுக்கொண்டதை மற்ற நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வோம். போக வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது என்பதெல்லாம் ரொம்ப பெரிய வார்த்தை. வாழ்க்கை இயற்கையாய், இயற்கையோடு போனாலே போதும். அதன் சில தடயங்களின் பதிப்பாக இந்த ‘தோட்டம்’ இருக்கும்.

அன்புடன்,
‘தோட்டம்’ சிவா

Advertisements

One thought on “About me

  1. Hello i am new to this. my name is thamayanthi. i am in canada. i would like to make gardening this summer. whats you tips. i am planning to put milagai, thakkali, keerai, carrot. manathakali.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s