தோட்ட உலா – ஏப்ரல் 2017

மஞ்சள் வழக்கமாக பொங்கலுக்கு என்று சில மஞ்சள் செடிகளை வளர்ப்பதுண்டு. சின்ன வயதில் இருந்தே பொங்கல் படையல் என்றால் வீட்டில் காய்த்துக் கிடக்கும் சில காய்கறிகளை பறித்து வந்து வைத்தால் ஒரு சந்தோசம். நமது அறுவடை அது தான். இந்த முறை ஒரு மஞ்சள் செடியை பொங்கலுக்கு பிறகும் அப்படியே விட்டு வைத்திருந்தோம். பெப்ரவரி வாக்கில் செடியை பிடுங்கி பார்த்த போது அசந்து போய்விட்டோம். ஒரே ஒரு செடியில் இவ்வளவு மஞ்சள் (ஈர கிழங்கின் எடை இரண்டு…

தோட்ட உலா – செப்டம்பர் 2016

காராமணி / தட்டைகாய் கொடியில் காய்ப்பதை எல்லாம் செடியில் காய்க்க வைக்கும் ஆராய்ச்சி பெரிய அளவில் போகிறது போல. செடியில் புடலையும், பாகலும் காய்த்தால் நன்றாக தான் இருக்கும். நாமும் வழக்கமாய் கொடியில் வாங்கும் ஆப்பை தவிர்க்கலாம்.

தோட்ட உலா – ஜூலை 2016

லேப்டாப் பழுதாகி போனதால் கடந்த இரண்டு வாரமாக புதிய பதிவுகள் ஏதும் எழுத முடியவில்லை. அதனால் இந்த பதிவு கொஞ்சம் தாமதமாகி விட்டது.

தோட்ட உலா – மார்ச் 2015

முதலில் முன்பு குடைமிளகாயில் சிவப்பு குடைமிளகாய் வருமா என்று ஒரு செடியை பற்றி சொல்லி இருந்தேன் இல்லையா. அந்த செடி அருமையாய் காய்த்தது. படம் கீழே, மா கோடை ஆரம்பித்து விட்டது. மார்ச்சிலேயே வெயில் கொடுமைக்கு அடிக்கிறது. கோவை என்றால் குளுமை என்ற காலம் எல்லாம் போய்விட்டது. இருந்தாலும் சென்னையயோ, நெல்லையையோ ஒப்பிட்டு பார்த்தால் கோவை கொஞ்சம் குளுமையாகவே இருக்கிறது (ஒரு முறை திருநெல்வேலிக்கு போய் விட்டு வந்தால் கோவை எவ்ளோ நல்லா இருக்கு என்று தோன்றும்).…

தோட்ட உலா – ஜனவரி 2015

அரை நெல்லி முதலில் இந்த வருடம் முதன் முதலாய் காய்க்க துவங்கி இருக்கும் அரை நெல்லி மரம். இந்த மரத்தை பற்றி முன்பு ஒரு பதிவில் ஒரே ஒரு காய் மட்டும் காய்த்தது பற்றி எழுதி இருந்தேன். அடுத்த முறை மூன்று காய் காய்த்தது. பிறகு ஒன்பது காய் கொண்ட ஒரு கொத்து. இப்படி மூன்று சீசன் போய் விட்டது. என்னடா இது இப்படி காய்க்குதே, ஒரு வேலை வச்ச கன்று சரி இல்லையோ, வெட்டி தான்…

தோட்ட உலா – மே 2014 (Summer Special)

மா சம்மர் ஸ்பெஷல் என்றால் மாம்பழம் இல்லாமலா?. எங்க வீட்டு மாமரம் மூன்றாவது வருடம் காய்கிறது. முதல் வருடம் வெறும் மூன்று காய் என்று ஆரம்பித்து, போன வருடம் ஒரு பதினைந்து காய்த்தது. இந்த வருடம் ஐம்பதை தாண்டி விட்டது. இவ்வளவுக்கும் இந்த வருடம் குறைந்தது ஒரு நூறு பிஞ்சாவது உதிர்ந்து இருக்கும். அதையும் தாண்டி இவ்வளவு காய்திருப்பது ஆச்சரியம் தான். எல்லா வருடமும் ஏதாவது ஒரு ஜீவன் வந்து எங்களுக்கு ஒரு மாங்காய் கூட மிச்சம்…

தோட்ட உலா – டிசம்பர் 2013

அடுத்த சீசன் – ஜனவரி To ஜூன் அடுத்த சீசனுக்கான காய்கறி தோட்டம் தயாராகி கொண்டிருக்கிறது. வழக்கம் போல ஒரு பட்டியல் போட்டு, ஒவ்வொரு காய்கறிக்கும் இட ஒதுக்கீடு போட்டு ஒரு Layout தயார் செய்தேன். பொதுவாய் டிசம்பர், ஜனவரி-ல் நாற்று எடுத்து விட்டால் வளர்ந்து மார்ச் வாக்கில் காய்க்க ஆரம்பிக்கும். ஏப்ரல் – ஜூன் வரை நல்ல  விளைச்சல் கிடைக்கும் (காய்கறியை பொறுத்து). நல்ல வெயில் காலம் என்பதால் விளைச்சல் நன்றாகவே இருக்கும். 2014– க்கான…