மாடித் தோட்டம் – Part-4 நாற்று எடுத்தல் (Video – Nursery Tray)

எனது இரண்டாவது வீடியோ பதிவு. வளர்ப்பு ஊடகம் தயார் செய்து பைகள் எல்லாம் ரெடியானதும் அடுத்தது விதைப்பது தான். அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். நர்சரி ட்ரே பற்றி ஏற்கனவே இந்த பதிவுவில் எழுதி இருந்தேன். மேலும் சில தகவல்கள் சேர்த்து, செய்முறை விளக்கத்தோடு இந்த வீடியோ பதிவை கொடுக்கிறேன்.    Youtube URL : https://www.youtube.com/watch?v=-a6WnTntZ4g

மாடித் தோட்டம் – Part-3 (Video – வளர்ப்பு ஊடகம்)

போன பதிவின் ஒரு வீடியோ தொகுப்பாய் இந்த பதிவை கொடுக்கிறேன். சும்மா ஒரு வீடியோவை எடுத்து போடலாம் என்று ஆரம்பித்து, வெறுமனே வளர்ப்பு ஊடகம் மட்டும் இல்லாமல் மாடித்தோட்டம் பற்றி விளக்கம் கொடுக்க சில விவரம் சேர்த்து எடிட்டிங், டப்பிங் என்று வேலை பெரிதாகி போனதால் இந்த பதிவு தாமதமாகி போனது. முதன் முதலாய் மாடித் தோட்டம் ஆரம்பிக்க தேவையான தகவல்களை முடிந்த அளவுக்கு இந்த வீடியோ தொகுப்பில் கொடுத்திருக்கிறேன். தவிர தீபாவளிக்கு சென்னை (மடிப்பாக்கம்) வேறு…

மாடித் தோட்டம் – Part-2 (Growing Media – வளர்ப்பு ஊடகம்)

விகடனில் எனது ப்ளாக் பற்றி பார்த்து வந்த சில அழைப்புகளை வைத்து இன்றைய ‘மாடித்தோட்டம்’ நிலவரம் பற்றி நிறைய புரிந்து கொள்ள முடிந்தது. ‘பிதாமகன்’ சூர்யா ரேஞ்சில் ‘வாங்க சார். வாங்க. விட்டா கிடைக்காது. போனா வராது’ என்று மாடித் தோட்டம் அமைத்துக் கொடுக்க கிளம்பி இருக்கும் கூட்டம் ஒரு புறம், 36 வயதினிலே பார்த்து விட்டு எப்படியும் சில கல்யாண வீட்டு ஆர்டர்களை பிடித்தே தீருவது என்று கூட்டம் மறுபுறம். இவர்களுக்கு இடையில் என்னை போல…

மாடித் தோட்டம் – Part-1 (தொடங்குவதற்கு முன்)

(புதிதாய் மாடித் தோட்டம் மற்றும் வீட்டுத் தோட்டம் ஆரம்பிக்கும் நண்பர்களுக்காக இந்த குறுந்தொடரை ஆரம்பிக்கிறேன். இது உங்களுக்கு சிறிதளவாவது பயன்பட்டால் சந்தோசமே) விகடனிலும் புதியதலைமுறையிலும் எனது ப்ளாக் பற்றி வந்த கட்டுரைகளை பார்த்து வந்த நிறைய அழைப்புகளில் இருந்து சில விஷயங்கள் புரிந்தது. ‘மாடித் தோட்டம்’ என்பது ஊடங்களில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. எங்கு பார்த்தாலும் ‘ஆர்கானிக்’ ‘இயற்கை விவசாயம்’ என்ற கூக்குரல்கள். இங்கே வாங்கும் காய்கறி எல்லாமே விஷம். நீங்களே காய்கறியை வீட்டில் விளைவித்தால்…