2017 – சீசன்-2 (ஜூலை – டிசம்பர்) – பகுதி -2

கவனித்திருப்பீர்கள். தற்போது கொஞ்சம் Youtube வீடியோக்களில் கவனம் செலுத்த ஆரம்பித்து இருக்கிறேன். மொத்த மக்கள் கூட்டமும் இப்போதெல்லாம் Youtube, Facebook என்று ஓடிக் கொண்டிருக்கிறார்கள். நாம் என்ன தான் எழுதினாலும் எல்லாமே விஷுவலாகவே மூளைக்கு கொடுத்து பழகி விட்டார்கள். தோட்டம் என்று எதை எதையோ வீடியோ என்று போடுகிறார்கள். நாம் செய்வது சிலருக்காவது பயன்படட்டும் என்று ‘ThoddamSiva’ என்ற சேனலை ஆரம்பித்திருக்கிறேன். https://www.youtube.com/thoddamsiva சேனல் நன்றாகவே போய்க் கொண்டிருக்கிறது. பதிவு என்றால் ஒரு மணி நேரத்தில் எழுதி…

வீடியோ – அறுவடை – மரவள்ளிக்கிழங்கு

மீண்டும் ஒரு வீடியோ பதிவு. இந்த மாதம் அறுவடை செய்த மரவள்ளிக்கிழங்கு. நிறைய நண்பர்கள் எழுதுவதை நிறுத்தி விட்டீர்களா என்று கேட்டார்கள். அப்படி ஒன்றும் இல்லை. சில வேளைகளில் கொஞ்சம் பிசி ஆகிவிட்டேன். இந்த சீசன் பற்றிய ஒரு பதிவு எழுத வேண்டும். விரைவில் எழுதுகிறேன். வீடியோ பார்த்து உங்கள் கருத்துகளை கூறுங்கள்.

வீடியோ – கொத்தமல்லி மற்றும் வெந்தயக்கீரை

புதிதாக ஒரு வீடியோ தயாரித்து youtube channel-ல் ஏற்றி இருக்கிறேன். கொத்தமல்லி மற்றும் வெந்தயக்கீரை வளர்ப்பதில் வரும் சின்ன சின்ன சந்தேகங்களை விடையோடு இந்த வீடியோவில் கொடுத்துள்ளேன். பாருங்கள். எனது  youtube channel முகவரி, https://www.youtube.com/thoddamsiva  

2017 – சீசன்-2 (ஜூலை – டிசம்பர்)

அக்ரி இன்டெக்ஸ் 2017 (14 – 17 July 2017) இந்த வருடம் அக்ரி இன்டெக்ஸ் நாளும் நெருங்கி விட்டது. கோவை கொடிசியா வளாகத்தில் அடுத்த வாரம் வெள்ளி முதல் திங்கள் வரை (14 – 17 July 2017). கோவை நண்பர்கள் கண்டிப்பாக சென்று பாருங்கள். விவசாயம், தோட்டம் சம்பந்தமாக நிறைய தகவல்களை பெற முடியும். இந்த முறை பெரிதாக ஏதும் வாங்க திட்டம் இல்லை. சென்று பார்த்தால் தான் தெரியும். 2017  –  சீசன்-2…

மாடித் தோட்டம் – சில டிப்ஸ்

மாடித் தோட்டம் என்றவுடன் நிறைய பேர் நிழல் வலை அமைத்தால் தான் செய்ய முடியுமா என்று கேட்கிறார்கள். முதல் மாடி என்றால் நிழல் வலை தேவை இல்லை. நான் இரண்டு வருடங்களாக நிழல் வலை இல்லாமல் தான் மாடியில் செடிகள் வளர்த்துக் கொண்டிருந்தேன். காற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் உயரமாய் வளரும் வெண்டை, கார்ன் மாதிரி செடிகள் மற்றும் கொடிகள் வளர்க்க முடியாது. அதனால் நிழல் வலை அமைக்க வேண்டியதாகிவிட்டது. மற்றபடி நிழல் வலை இல்லாமல்…

தோட்ட உலா – ஏப்ரல் 2017

மஞ்சள் வழக்கமாக பொங்கலுக்கு என்று சில மஞ்சள் செடிகளை வளர்ப்பதுண்டு. சின்ன வயதில் இருந்தே பொங்கல் படையல் என்றால் வீட்டில் காய்த்துக் கிடக்கும் சில காய்கறிகளை பறித்து வந்து வைத்தால் ஒரு சந்தோசம். நமது அறுவடை அது தான். இந்த முறை ஒரு மஞ்சள் செடியை பொங்கலுக்கு பிறகும் அப்படியே விட்டு வைத்திருந்தோம். பெப்ரவரி வாக்கில் செடியை பிடுங்கி பார்த்த போது அசந்து போய்விட்டோம். ஒரே ஒரு செடியில் இவ்வளவு மஞ்சள் (ஈர கிழங்கின் எடை இரண்டு…

என் வீட்டுத் தோட்டத்தில் – திராட்சை

நான் சிறுவனாக இருந்த போதெல்லாம் பெரியவர்கள் ‘கேரட் சாப்பிடுல கண்ணுக்கு நல்லது’ ‘கொய்யாப்பழம் சாப்பிடுப்பு உடம்புக்கு நல்லது’ இப்படி தான் சொல்வார்கள். ஆனால் இப்போதெல்லாம் ‘நவ்வாப்பழம் சாப்பிடுங்க சுகருக்கு நல்லது’ ‘கொய்யாப்பழம் சாப்பிடுங்க இரத்த கொதிப்புக்கு நல்லது’ என்று எல்லாவற்றையும் நோயை வைத்து தான் கூறுகிறார்கள். மக்கள் எல்லோரும் எந்த பழத்தை, காய்கறியை பார்த்தாலும் அது எந்த நோய்க்கு நல்லது என்று தான் பார்க்கிறார்கள். நமது வாழ்க்கைத்தரம் எப்படி உயர்ந்து கொண்டே போகிறது என்பதற்கு இதை விட…