தோட்ட உலா – ஏப்ரல் 2017

மஞ்சள் வழக்கமாக பொங்கலுக்கு என்று சில மஞ்சள் செடிகளை வளர்ப்பதுண்டு. சின்ன வயதில் இருந்தே பொங்கல் படையல் என்றால் வீட்டில் காய்த்துக் கிடக்கும் சில காய்கறிகளை பறித்து வந்து வைத்தால் ஒரு சந்தோசம். நமது அறுவடை அது தான். இந்த முறை ஒரு மஞ்சள் செடியை பொங்கலுக்கு பிறகும் அப்படியே விட்டு வைத்திருந்தோம். பெப்ரவரி வாக்கில் செடியை பிடுங்கி பார்த்த போது அசந்து போய்விட்டோம். ஒரே ஒரு செடியில் இவ்வளவு மஞ்சள் (ஈர கிழங்கின் எடை இரண்டு…

என் வீட்டுத் தோட்டத்தில் – திராட்சை

நான் சிறுவனாக இருந்த போதெல்லாம் பெரியவர்கள் ‘கேரட் சாப்பிடுல கண்ணுக்கு நல்லது’ ‘கொய்யாப்பழம் சாப்பிடுப்பு உடம்புக்கு நல்லது’ இப்படி தான் சொல்வார்கள். ஆனால் இப்போதெல்லாம் ‘நவ்வாப்பழம் சாப்பிடுங்க சுகருக்கு நல்லது’ ‘கொய்யாப்பழம் சாப்பிடுங்க இரத்த கொதிப்புக்கு நல்லது’ என்று எல்லாவற்றையும் நோயை வைத்து தான் கூறுகிறார்கள். மக்கள் எல்லோரும் எந்த பழத்தை, காய்கறியை பார்த்தாலும் அது எந்த நோய்க்கு நல்லது என்று தான் பார்க்கிறார்கள். நமது வாழ்க்கைத்தரம் எப்படி உயர்ந்து கொண்டே போகிறது என்பதற்கு இதை விட…

தோட்ட உலா – செப்டம்பர் 2016

காராமணி / தட்டைகாய் கொடியில் காய்ப்பதை எல்லாம் செடியில் காய்க்க வைக்கும் ஆராய்ச்சி பெரிய அளவில் போகிறது போல. செடியில் புடலையும், பாகலும் காய்த்தால் நன்றாக தான் இருக்கும். நாமும் வழக்கமாய் கொடியில் வாங்கும் ஆப்பை தவிர்க்கலாம்.

எனது மாடித் தோட்டம் – Tour

எனது மாடித் தோட்டத்தை சுற்றி சிறிய பயணம் ஒரு வீடியோ தொகுப்பாக இந்த பதிவில் கொடுக்கிறேன். லேப்டாப்-ல் சிறிய டெக்னிகல் பிரச்னை. மைக் வேலை செய்யவில்லை. எனவே எனது வழக்கமான கேமிராவில் எடுத்து டப்பிங் செய்ய இயலவில்லை.

தோட்ட உபகரணங்கள்

விதைகள் எப்படியோ அப்படித்தான் தோட்ட உபகரணங்களும் நமக்கு. விவசாய கண்காட்சிகளில் நம்மை விட்டால் ஏதாவது வாங்கியே ஆக வேண்டும். இல்லாவிட்டால் அன்றைய விசிட் ஏதோ குறையோடு முடிந்தது போலவே தோன்றும். அதிலும் புதிதாய் தோட்டம் ஆரம்பிக்கும் போது சொல்லவே வேண்டாம்.

அக்ரி இன்டெக்ஸ் 2016

கோவையின் மிகப் பெரிய விவசாய மற்றும் தோட்டக்கலை கண்காட்சி அக்ரி இன்டெக்ஸ், போன வாரம் இனிதே நிறைவடைந்தது. வழக்கம் போல ப்ளாக் நண்பர்களின் சந்திப்பு, விதைகள் மற்றும் தோட்டம் பொருட்கள் சில வாங்குவது என்று சனி, ஞாயிறு என்று இரண்டு நாளும் கொடிசியா வளாகத்தில் தான்.

தோட்ட உலா – ஜூலை 2016

லேப்டாப் பழுதாகி போனதால் கடந்த இரண்டு வாரமாக புதிய பதிவுகள் ஏதும் எழுத முடியவில்லை. அதனால் இந்த பதிவு கொஞ்சம் தாமதமாகி விட்டது.