மாடித் தோட்டம் – சில டிப்ஸ்

மாடித் தோட்டம் என்றவுடன் நிறைய பேர் நிழல் வலை அமைத்தால் தான் செய்ய முடியுமா என்று கேட்கிறார்கள். முதல் மாடி என்றால் நிழல் வலை தேவை இல்லை. நான் இரண்டு வருடங்களாக நிழல் வலை இல்லாமல் தான் மாடியில் செடிகள் வளர்த்துக் கொண்டிருந்தேன். காற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் உயரமாய் வளரும் வெண்டை, கார்ன் மாதிரி செடிகள் மற்றும் கொடிகள் வளர்க்க முடியாது. அதனால் நிழல் வலை அமைக்க வேண்டியதாகிவிட்டது. மற்றபடி நிழல் வலை இல்லாமல்…

எனது மாடித் தோட்டம் – Tour

எனது மாடித் தோட்டத்தை சுற்றி சிறிய பயணம் ஒரு வீடியோ தொகுப்பாக இந்த பதிவில் கொடுக்கிறேன். லேப்டாப்-ல் சிறிய டெக்னிகல் பிரச்னை. மைக் வேலை செய்யவில்லை. எனவே எனது வழக்கமான கேமிராவில் எடுத்து டப்பிங் செய்ய இயலவில்லை.

தோட்டம் 2.0 (பகுதி-4)

எனக்கு வீட்டை சுற்றி வெயில்படும் இடத்தில் எல்லாம் ஏதாவது ஒரு செடியோ, மரமோ இருக்க வேண்டும். நான் இப்போது தோட்டத்தில் செய்யும் மாற்றங்களை பார்த்து, நடக்கவாவது கொஞ்சம் இடத்தை விட்டு வையுங்க என்று கொஞ்சம் கலவரத்துடன் வீட்டில் சொல்லி வைத்தார்கள்.

தோட்டம் 2.0 (பகுதி-3)

மாடித் தோட்டத்தை மாற்றிய கையோடு கீழே தரை தளத்தில் உள்ள பாத்திகளிலும் சில மாற்றங்களை செய்ய முடிவு செய்தேன். போன சீசனில் தரையில் உள்ள செடிகள் அவ்வளவு செழிப்பாய் வரவில்லை. தோட்டம் பார்க்க வந்த இசக்கிமுத்து தம்பி கூட தரை ரொம்ப இறுகி போய் இருக்கிறது அண்ணா, சரி செய்யலாமே என்று கேட்டான். இருமடிப் பாத்தி பற்றி நம்மாழ்வார் புத்தகத்தில் படித்திருக்கிறேன். மேல் மண் ஒரு அடி ஆழத்திற்கு தனியாக எடுத்து வைத்து, கீழ் மண்ணை கடப்பாரை…

தோட்டம் 2.0 (பகுதி-2)

Part-1 ShadeNet அமைத்தல்        ShadeNet பற்றி ஏற்கனவே ஓரளவுக்கு விவரங்கள் சேகரித்து வைத்திருந்தேன். பொதுவாக நிறைய பேர் 50% Shade தான் போடுகிறார்கள். இதை பொதுவாக எல்லா நர்சரிகளிலும் பயன்படுத்துகிறார்கள். செடி வளர்க மிக சிறந்ததாக இருக்கிறது (நர்சரிகளில் செடிகளை விளைச்சல் எடுக்கும் வரை வளர்க்க தேவை இல்லை).

தோட்டம் 2.0 (பகுதி-1)

தோட்டம் இணையதளத்தை ஒரு புதிய தளத்தில் ஆரம்பித்த கையோடு தோட்டத்தையும் ஒரு புதிய தளத்திற்கு மாற்றி அமைத்திருக்கிறேன். இது ஒரு நீண்ட பயணமாகவே இருந்தது. அதை சில தொடர்களாக உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

மாடித் தோட்டம் – அடிப்படை காய்கறிகள்

இதுவரை மாடியில் கீரை, முள்ளங்கி போன்ற எளிதான காய்கறிகள் தான் வைத்திருக்கிறேன். முக்கிய காய்கறிகளான தக்காளி, கத்தரி, மிளகாய் எல்லாம் மாடியில் முயற்சித்ததில்லை. கீழே தரையில் தான் வளர்த்திருக்கிறேன்.   இந்த முறை முதன் முறையாக எல்லாவற்றையும் மாடி தோட்டத்திற்கு மாற்றினேன். இதில் முக்கியமாக நான் கவனிக்க நினைத்த விஷயம், நம் வழக்கமான Coir Pith Media எப்படி இந்த செடிகளுக்கு ஊட்டச்சத்து தேவைகளை கொடுக்கிறது என்பது தான். கண்டிப்பாய் சில சவால்கள் வரும் என்று எதிர்பார்த்தேன்.…