2017 – சீசன்-2 (ஜூலை – டிசம்பர்)

அக்ரி இன்டெக்ஸ் 2017 (14 – 17 July 2017) இந்த வருடம் அக்ரி இன்டெக்ஸ் நாளும் நெருங்கி விட்டது. கோவை கொடிசியா வளாகத்தில் அடுத்த வாரம் வெள்ளி முதல் திங்கள் வரை (14 – 17 July 2017). கோவை நண்பர்கள் கண்டிப்பாக சென்று பாருங்கள். விவசாயம், தோட்டம் சம்பந்தமாக நிறைய தகவல்களை பெற முடியும். இந்த முறை பெரிதாக ஏதும் வாங்க திட்டம் இல்லை. சென்று பார்த்தால் தான் தெரியும். 2017  –  சீசன்-2…

மாடித் தோட்டம் – சில டிப்ஸ்

மாடித் தோட்டம் என்றவுடன் நிறைய பேர் நிழல் வலை அமைத்தால் தான் செய்ய முடியுமா என்று கேட்கிறார்கள். முதல் மாடி என்றால் நிழல் வலை தேவை இல்லை. நான் இரண்டு வருடங்களாக நிழல் வலை இல்லாமல் தான் மாடியில் செடிகள் வளர்த்துக் கொண்டிருந்தேன். காற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் உயரமாய் வளரும் வெண்டை, கார்ன் மாதிரி செடிகள் மற்றும் கொடிகள் வளர்க்க முடியாது. அதனால் நிழல் வலை அமைக்க வேண்டியதாகிவிட்டது. மற்றபடி நிழல் வலை இல்லாமல்…

எனது மாடித் தோட்டம் – Tour

எனது மாடித் தோட்டத்தை சுற்றி சிறிய பயணம் ஒரு வீடியோ தொகுப்பாக இந்த பதிவில் கொடுக்கிறேன். லேப்டாப்-ல் சிறிய டெக்னிகல் பிரச்னை. மைக் வேலை செய்யவில்லை. எனவே எனது வழக்கமான கேமிராவில் எடுத்து டப்பிங் செய்ய இயலவில்லை.

என் வீட்டுத் தோட்டத்தில் – நூல்கோல் (Knol Khol)

கொஞ்சம் இடைவெளிக்கு பிறகு என் வீட்டுத் தோட்டத்தில் இருந்து ஒரு புதிய காய்கறி. ஒரு வித்தியாசமான காய்கறி. பூ பூத்து காய்க்கும் பொதுவான காய்கறிகளுக்கு இடையே காலி ஃப்ளவர் மாதிரி வெறும் பூவே உணவாய், முட்டை கோஸ் மாதிரி வெறும் இலையே பந்து போல ஒரு காய்கறியாய், சில வித்தியாசமான காய்கறிகள் சில உண்டு. அந்த வகையில் இந்த நூல்கோலும் உண்டு.

தோட்டம் 2.0 (பகுதி-2)

Part-1 ShadeNet அமைத்தல்        ShadeNet பற்றி ஏற்கனவே ஓரளவுக்கு விவரங்கள் சேகரித்து வைத்திருந்தேன். பொதுவாக நிறைய பேர் 50% Shade தான் போடுகிறார்கள். இதை பொதுவாக எல்லா நர்சரிகளிலும் பயன்படுத்துகிறார்கள். செடி வளர்க மிக சிறந்ததாக இருக்கிறது (நர்சரிகளில் செடிகளை விளைச்சல் எடுக்கும் வரை வளர்க்க தேவை இல்லை).

தோட்டம் 2.0 (பகுதி-1)

தோட்டம் இணையதளத்தை ஒரு புதிய தளத்தில் ஆரம்பித்த கையோடு தோட்டத்தையும் ஒரு புதிய தளத்திற்கு மாற்றி அமைத்திருக்கிறேன். இது ஒரு நீண்ட பயணமாகவே இருந்தது. அதை சில தொடர்களாக உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.