தோட்டம் – கேள்வி-பதில் – Part-2

எனக்கு வரும் பொதுவான கேள்விகளுக்கான பதில்கள் ஒரு சிறிய தொகுப்பாய். பதிவின் படத்திற்கு புதிய பந்தலில் வந்து கொண்டிருக்கும் திராட்சை கொத்து 😀 Advertisements

மீன் அமிலம் மற்றும் சீசன் விளைச்சல்

மீன் அமிலம் இந்த சீசனில் முதன் முதலாய் மீன் அமிலம் முயற்சித்தேன். இதுவும் பஞ்சகாவ்யா மாதிரி ஒரு வளர்ச்சி ஊக்கி தான். பஞ்சகாவ்யா நாமே தயாரிக்க கொஞ்சம் கடினம் (நாட்டு மாட்டின் சாணம், கோமியம் என்று இங்கே நகரத்தில் எங்கே தேடுவது). நாமே தயாரிக்க கூடியது மாதிரி ஓன்று இருந்தால் நன்றாக இருக்குமே என்று தேடி கிடைத்த தகவல்களை பட்டியலிட்ட போது மீன் அமிலம் எளிதாக இருந்தது.

என் வீட்டுத் தோட்டத்தில் – நூல்கோல் (Knol Khol)

கொஞ்சம் இடைவெளிக்கு பிறகு என் வீட்டுத் தோட்டத்தில் இருந்து ஒரு புதிய காய்கறி. ஒரு வித்தியாசமான காய்கறி. பூ பூத்து காய்க்கும் பொதுவான காய்கறிகளுக்கு இடையே காலி ஃப்ளவர் மாதிரி வெறும் பூவே உணவாய், முட்டை கோஸ் மாதிரி வெறும் இலையே பந்து போல ஒரு காய்கறியாய், சில வித்தியாசமான காய்கறிகள் சில உண்டு. அந்த வகையில் இந்த நூல்கோலும் உண்டு.

தோட்டம் 2.0 (பகுதி-4)

எனக்கு வீட்டை சுற்றி வெயில்படும் இடத்தில் எல்லாம் ஏதாவது ஒரு செடியோ, மரமோ இருக்க வேண்டும். நான் இப்போது தோட்டத்தில் செய்யும் மாற்றங்களை பார்த்து, நடக்கவாவது கொஞ்சம் இடத்தை விட்டு வையுங்க என்று கொஞ்சம் கலவரத்துடன் வீட்டில் சொல்லி வைத்தார்கள்.

தோட்டம் 2.0 (பகுதி-3)

மாடித் தோட்டத்தை மாற்றிய கையோடு கீழே தரை தளத்தில் உள்ள பாத்திகளிலும் சில மாற்றங்களை செய்ய முடிவு செய்தேன். போன சீசனில் தரையில் உள்ள செடிகள் அவ்வளவு செழிப்பாய் வரவில்லை. தோட்டம் பார்க்க வந்த இசக்கிமுத்து தம்பி கூட தரை ரொம்ப இறுகி போய் இருக்கிறது அண்ணா, சரி செய்யலாமே என்று கேட்டான். இருமடிப் பாத்தி பற்றி நம்மாழ்வார் புத்தகத்தில் படித்திருக்கிறேன். மேல் மண் ஒரு அடி ஆழத்திற்கு தனியாக எடுத்து வைத்து, கீழ் மண்ணை கடப்பாரை…

தோட்டம் 2.0 (பகுதி-2)

Part-1 ShadeNet அமைத்தல்        ShadeNet பற்றி ஏற்கனவே ஓரளவுக்கு விவரங்கள் சேகரித்து வைத்திருந்தேன். பொதுவாக நிறைய பேர் 50% Shade தான் போடுகிறார்கள். இதை பொதுவாக எல்லா நர்சரிகளிலும் பயன்படுத்துகிறார்கள். செடி வளர்க மிக சிறந்ததாக இருக்கிறது (நர்சரிகளில் செடிகளை விளைச்சல் எடுக்கும் வரை வளர்க்க தேவை இல்லை).

தோட்டம் 2.0 (பகுதி-1)

தோட்டம் இணையதளத்தை ஒரு புதிய தளத்தில் ஆரம்பித்த கையோடு தோட்டத்தையும் ஒரு புதிய தளத்திற்கு மாற்றி அமைத்திருக்கிறேன். இது ஒரு நீண்ட பயணமாகவே இருந்தது. அதை சில தொடர்களாக உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.