மீன் அமிலம் மற்றும் சீசன் விளைச்சல்

மீன் அமிலம் இந்த சீசனில் முதன் முதலாய் மீன் அமிலம் முயற்சித்தேன். இதுவும் பஞ்சகாவ்யா மாதிரி ஒரு வளர்ச்சி ஊக்கி தான். பஞ்சகாவ்யா நாமே தயாரிக்க கொஞ்சம் கடினம் (நாட்டு மாட்டின் சாணம், கோமியம் என்று இங்கே நகரத்தில் எங்கே தேடுவது). நாமே தயாரிக்க கூடியது மாதிரி ஓன்று இருந்தால் நன்றாக இருக்குமே என்று தேடி கிடைத்த தகவல்களை பட்டியலிட்ட போது மீன் அமிலம் எளிதாக இருந்தது.

2015- சீசன்-2 (ஜூலை-டிசம்பர்) – அறுவடை (பகுதி – 2)

குட்டி மஞ்சள் தக்காளி பார்ப்பதற்கு செர்ரி தக்காளி (Cherry Tomato) மாதிரி இருந்தாலும் இது நாட்டுத் தக்காளி தான். நண்பர் பரமேசிடம் வாங்கிய விதைகளில் இதுவும் ஓன்று. நான் ‘குட்டி’ என்பதை சரியாக கவனிக்காமல் ‘மஞ்சள் தக்காளி’ என்பதை மட்டும் படித்து நிறைய செடிகளை போட்டு விட்டிருந்தேன். கொத்து கொத்தாய் பூக்கும் போதே இது சாதாரண தக்காளி மாதிரி இல்லையே என்று கொஞ்சம் சந்தேகம் வந்தது. பிறகு விதை பாக்கெட்டை படித்து பார்த்ததில் ‘குட்டி மஞ்சள் தக்காளி’…

2015- சீசன்-2 (ஜூலை-டிசம்பர்) – அறுவடை (பகுதி – 1)

ஒரு வழியாக ஜூலையில் தொடங்கிய சீசன் ஒரு முடிவுக்கு வருகிறது. அடுத்தது ஜனவரி (தை) சீசனுக்கான திட்டமிடல் போய்க் கொண்டிருக்கிறது. இப்போது தான் விதைகள் எல்லாம் ஆர்டர் செய்து கொண்டிருக்கிறேன். அடுத்த சீசனை தொடங்குவதற்கு முன் இந்த சீசன் அறுவடை பற்றி ஒரு முடிவுரை கொடுத்து விடலாம். இந்த சீசனை பற்றி சொல்வதென்றால் ‘சுமார்’ என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது. சில செடிகள் ஹிட் லிஸ்டிலும், சில ஃபளாப் லிஸ்டிலும்…

2015- சீசன்-2 (ஜூலை-டிசம்பர்) – Part – 2 (பூ மற்றும் பிஞ்சி)

ஜூன் மாதத்தில் தொடங்கிய இந்த சீசன் செடிகளின் தற்போதைய நிலவரத்தை பார்க்கலாம். நிறைய பேர் இந்த ஆடி பதினெட்டில் (ஆடிப்பெருக்கு) விதைத்து இந்த சீசனை ஆரம்பித்து இருப்பீர்கள். நான் பொதுவாக மே மாதத்திலேயே ஆரம்பித்து விடுவேன். ஆடிக்கு காத்திருப்பதில்லை. செடிகள் எல்லாம் இப்பொது பூத்து பிஞ்சி பிடிக்க ஆரம்பித்து இருக்கின்றன. தோட்டத்தின் தற்போதைய நிலவரம்,   வெண்டை, அவரை செடிகளில் இன்னும் ஒரு வாரத்தில் காய் பறிக்கலாம். இன்னும் ஒரு மாதத்தில் கத்தரி, தக்காளி, மிளகாய் செடிகளில்…

2015 – சீசன்-2 (ஜூலை-டிசம்பர்) – Part – 1 (நடவு)

இந்த சீசனில் முடிந்த அளவுக்கு நாட்டு ராகங்களாக நட இருக்கிறேன். நண்பர் பரமேசிடம் வாங்கிய நாட்டு விதைகளையும், முன்பு வாங்கி இருந்த சில ஹைப்ரிட் விதைகளையும் மே இறுதி வாக்கில் Nursery Tray-க்களில் நட்டு விட்டேன். கிட்டத்தட்ட எட்டு Tray-க்கள், நானுறு விதைகள். இதில் இந்த சீசனது பட்டியல் இது தான், வெண்டை (நாட்டு வகை) செடி அவரை (நாட்டு வகை) தக்காளி (நாட்டு வகை) மஞ்சள் தக்காளி (நாட்டு வகை) ஹைப்ரிட் தக்காளி (DIY Kit-ல்…

2014 சீசன்-2 (ஜூன்) – பகுதி-6 (விளைச்சல் – கொடிகள் & English Vegetables)

இந்த சீசனின் மிக பெரிய சொதப்பல் இந்த ஏரியா தான். மூன்று பந்தல் தயார் செய்தும் ஒன்றிலும் சாதிக்க முடியவில்லை. புடலை, பாகல், சுரை, பீர்க்கங்காய் என்று அனைத்தையும் முயற்சி செய்து அதனையும் ஊற்றிக் கொண்டது. ஒரு பக்கம் மற்ற காய்கறிகள் எல்லாம் எந்த பிரச்சனையும் இல்லாமல் வந்தாலும் கொடி என்னமோ சரியாய் வருவதில்லை.   செடிகள் பொதுவாய் சரியான வெயில், நல்ல மண், சரியான தண்ணீர் இருந்தால் வளர்ந்து விடும். வளர்ந்த பிறகு பூப்பதிலும், பிஞ்சி…

2014 சீசன்-2 (ஜூன்) – பகுதி-5 (விளைச்சல் – அடிப்படை காய்கறிகள்)

பதிவுக்கு போவதற்கு முன்பு, கோவை நண்பர்களுக்கு ஒரு தகவல். இந்த வாரம் (இன்றும், நாளையும் – 13, 14 Sep 2014) இங்கே Vijaya Trade Center-ல் (சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகில்) அக்ரி எக்ஸ்போ ஓன்று போய் கொண்டிருக்கிறது. Grow Bags, Coir Pith Bock, Seeds கிடைக்கும். முடிந்தால் போய் பாருங்கள்.   இந்த சீசனை தொடங்கி மூன்று மாதம் முடிந்து விட்டது. கொஞ்சம் தோட்டம் பக்கம் போய் தற்போதைய நிலவரம், அறுவடை பற்றி…