வீடியோ – அறுவடை – மரவள்ளிக்கிழங்கு

மீண்டும் ஒரு வீடியோ பதிவு. இந்த மாதம் அறுவடை செய்த மரவள்ளிக்கிழங்கு. நிறைய நண்பர்கள் எழுதுவதை நிறுத்தி விட்டீர்களா என்று கேட்டார்கள். அப்படி ஒன்றும் இல்லை. சில வேளைகளில் கொஞ்சம் பிசி ஆகிவிட்டேன். இந்த சீசன் பற்றிய ஒரு பதிவு எழுத வேண்டும். விரைவில் எழுதுகிறேன். வீடியோ பார்த்து உங்கள் கருத்துகளை கூறுங்கள். Advertisements

என் வீட்டுத் தோட்டத்தில் – திராட்சை

நான் சிறுவனாக இருந்த போதெல்லாம் பெரியவர்கள் ‘கேரட் சாப்பிடுல கண்ணுக்கு நல்லது’ ‘கொய்யாப்பழம் சாப்பிடுப்பு உடம்புக்கு நல்லது’ இப்படி தான் சொல்வார்கள். ஆனால் இப்போதெல்லாம் ‘நவ்வாப்பழம் சாப்பிடுங்க சுகருக்கு நல்லது’ ‘கொய்யாப்பழம் சாப்பிடுங்க இரத்த கொதிப்புக்கு நல்லது’ என்று எல்லாவற்றையும் நோயை வைத்து தான் கூறுகிறார்கள். மக்கள் எல்லோரும் எந்த பழத்தை, காய்கறியை பார்த்தாலும் அது எந்த நோய்க்கு நல்லது என்று தான் பார்க்கிறார்கள். நமது வாழ்க்கைத்தரம் எப்படி உயர்ந்து கொண்டே போகிறது என்பதற்கு இதை விட…

என் வீட்டுத் தோட்டத்தில் – நூல்கோல் (Knol Khol)

கொஞ்சம் இடைவெளிக்கு பிறகு என் வீட்டுத் தோட்டத்தில் இருந்து ஒரு புதிய காய்கறி. ஒரு வித்தியாசமான காய்கறி. பூ பூத்து காய்க்கும் பொதுவான காய்கறிகளுக்கு இடையே காலி ஃப்ளவர் மாதிரி வெறும் பூவே உணவாய், முட்டை கோஸ் மாதிரி வெறும் இலையே பந்து போல ஒரு காய்கறியாய், சில வித்தியாசமான காய்கறிகள் சில உண்டு. அந்த வகையில் இந்த நூல்கோலும் உண்டு.

என் வீட்டுத் தோட்டத்தில் – சொடக்கு தக்காளி

தேவையான காய்கறிகள் விளைவிப்பது தவிர்த்து வீட்டுத் தோட்டத்தின் இன்னொரு முக்கிய பங்கு குழந்தைகளுக்கு இயற்கை மீது ஈடுபாடு கொண்டு வருவது. அதற்காக குட்டீஸ்களுக்கு தோட்டத்தில் வைத்து பாடம் எல்லாம் எடுத்தால் ஓடி விடுவார்கள். அவர்களை செடிகள் மீதான ஈடுபாட்டை அவர்களுக்கு பிடித்த விசயங்களை தோட்டத்தில் கொண்டு வருவதன் மூலம் உருவாக்கலாம். எங்க வீட்டுக்கு வரும் குட்டீஸ் முதலில் கொய்யா மரத்தை பார்ப்பார்கள். பிறகு மணத்தக்காளி பழுத்து கிடந்தால் அதை பறிப்பார்கள். அடுத்தது சொடக்கு தக்காளி செடியை உலுப்பி…

என் வீட்டுத் தோட்டத்தில் – கார மிளகாய் (Hot Pepper)

நாம ஏதாவது கண்காட்சி போனால், வீட்டுக்கு ஏதாவது வாங்குகிறோமோ இல்லையோ ஒரு ஐநூறு ரூபாய்க்காவது விதைகள் வாங்கினால் தான் வெளியே வருவது. அதிலும் இந்த ஹைப்ரிட் விதை பாக்கெட் நிறைய படம் பார்த்தே விதை பாக்கெட்டுகள் நம் கைகளில் வந்துவிடும். அது நமக்கு வேண்டிய காய்கறியா, நம்ம ஊருக்கு ஒழுங்கா வருமா என்பதெல்லாம் இரண்டாவது தான். அப்படித்தான் இந்த Hot Pepper விதையும். மிளகாய் பச்சை, ஆரஞ்சு, சிவப்பு என்று ஒரு கலவையாக மெழுகு போல அடுக்கிய…

என் வீட்டுத் தோட்டத்தில் – சின்ன வெங்காயம்

வெங்காயம், பொதுவாய் வீட்டுத் தோட்டத்தில் பேசப்படாத ஓன்று. மாடித் தோட்டம் என்றால் தக்காளி, கத்தரி, மிளகாய், அவரை, வெண்டை என்ற அளவில் முடித்துக் கொள்வோம். வெங்காயத்தை ஒரு முக்கிய காய்கறியாக யாரும் பெரிதாய் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் நம்மை நிறைய நேரம் தலைச்சுற்ற விடுவது வெங்காயம் விலை தான். நிறைய நேரங்களில் ஊடங்களில் தவறாமல் இடம் பெறும் ஓன்று வெங்காயம் விலை. சில நேரம் கிலோ பத்து ரூபாய் என்று அடிமாட்டு விலைக்கு விற்கும் வெங்காயம், பல…

என் வீட்டுத் தோட்டத்தில் – வெள்ளரிப்பழம்

முலாம்பழத்தை அடுத்து இந்த சீசனின் அடுத்த புது வரவு. இது வெள்ளரிக்காய் பதிவாக வரவேண்டியது, பழமாகி போனது ஒரு சின்ன குழப்பத்தில். அந்த குழப்பத்தால் ஒரு அருமையான பழத்தை பல வருடங்களுக்கு பிறகு ருசிக்க முடிந்தது.   இந்த ஜூன் சீசன் தொடக்கத்தில் வெள்ளரியையும், சுரைக்காயையும் ஒரு பாத்தியில் போட்டு விட்டிருந்தேன். வெள்ளரி நன்றாக பிடித்து வளர்ந்து வந்தது. சுரைக்காய் இலையும் கிட்டதட்ட வெள்ளரி இலை போலவே இருந்ததால் பெரிதாய் இரண்டுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. வெள்ளரி பூத்தாலும் பூ…