2017 – சீசன்-2 (ஜூலை – டிசம்பர்)

அக்ரி இன்டெக்ஸ் 2017 (14 – 17 July 2017)

இந்த வருடம் அக்ரி இன்டெக்ஸ் நாளும் நெருங்கி விட்டது. கோவை கொடிசியா வளாகத்தில் அடுத்த வாரம் வெள்ளி முதல் திங்கள் வரை (14 – 17 July 2017). கோவை நண்பர்கள் கண்டிப்பாக சென்று பாருங்கள். விவசாயம், தோட்டம் சம்பந்தமாக நிறைய தகவல்களை பெற முடியும். இந்த முறை பெரிதாக ஏதும் வாங்க திட்டம் இல்லை. சென்று பார்த்தால் தான் தெரியும்.

2017  –  சீசன்-2 (ஜூலை – டிசம்பர்)

ஒரு வழியாக கோடை முடிந்து புதிய சீசனை தோட்டத்தில் தொடங்கி இருக்கிறேன். போன வருடம் மாதிரியே இந்த வருடமும் மழை போக்கு காட்டிக் கொண்டிருக்கிறது.

தை பட்டத்தை (ஜனவரி) விட ஆடிப் பட்டம் (ஜூலை) நிறைய விசயத்தில் கை கொடுக்கும். நாம் என்ன தான் பார்த்து பார்த்து நீர் ஊற்றினாலும், மழை கொஞ்சமாவது சாரலை தெளித்து போகும் போது செடிகளின் குதுகலமே தனி. அதன் வளர்ச்சியும், விளைச்சலும் நாம் செயற்கையாக என்ன செய்தாலும் கொண்டு வர முடியாது.

தோட்டத்தில் இந்த சீசனின் புதிய சேர்க்கை என்றால் புதிதாக அமைத்திருக்கும் இரண்டு பந்தல்கள் தான். அடிப்படை காய்கறிகளில் பாதிக்கு பாதி கொடி வகைகள் தான். பாகல், புடலை, பீர்க்கன், சுரைக்காய், அவரை, தட்டை என்று நிறைய கொடிகளுக்கு பந்தல் தேவைப்படுகிறது. வீட்டைச்சுற்றி காலியாய் இருந்த எல்லா இடத்தையும் செடிகளை கொண்டு நிரப்பியாகி விட்டது. ரொம்ப யோசித்து இரண்டு இடங்களில் நிரந்தர பந்தல் அமைத்து விட்டேன். ஓன்று மாடியில், படி ஏறியதும் இருந்த காலி இடத்தை மாடி தோட்டம் அமைப்போடு இந்த பந்தலையும் அமைத்து விட்டேன். இன்னொன்று கீழே செப்டிக் டேங் மேலே இருந்த காலி இடம். இதோடு ஒரு அடி இடைவெளி இல்லாமல் நிரப்பியாகி விட்டது.

பொதுவாக கொடி வகைகள் பையில் வளர்க்காமல் தரையில் வளர்க்கும் போது நல்ல விளைச்சல் கொடுக்கும். மாடியில் போட்டிருக்கும் பந்தலுக்கும் கீழே தரையில் இருந்து மேலே கொடியை ஏற்றி பார்க்கலாம் என்று திட்டம். அவ்வளவு உயரம் (கிட்டத்தட்ட 25 அடி இருக்கும்) ஏற்ற முடியுமா என்று தெரியவில்லை. சுரைக்காய் மாதிரி பெரிய கொடிகளை கொண்டு சென்று விடலாம் என்று சுரை தான் கீழே போட்டு முளைத்து நிற்கிறது. மற்றொரு பந்தலுக்கு புடலை போட்டு விட்டிருக்கிறேன்.

இந்த சீசனுக்கு பெரிதாக விதை ஏதும் வாங்கவில்லை. ஏற்கனவே தோட்டத்தில் இருந்து எடுத்த விதைகளே போதுமானதாக இருந்தது. குடை மிளகாய், நூல்கோல், பேபி கார்ன் மட்டும் வாங்கிய ஹைப்ரிட் விதை. மற்ற எல்லாமே போன சீசனில் இருந்து எடுத்த நாட்டு விதைகளும், வாங்கி வைத்திருந்த நாட்டு விதைகளும் தான்.

மிளாகாய் தான் கடந்த இரண்டு சீசனாக படுத்தி எடுக்கிறது. ஓன்று கூட சரியாக விளைச்சல் கொடுக்கவில்லை. ஒன்றாவது காய்த்து அதில் இருந்து விதை எடுத்துக் கொள்ளலாம் என்று முயற்சித்து ஒன்றும் பலன் இல்லை. விதைகளும் காலாவதியாகி விடும் என்பதால் இருக்கும் அத்தனையையும் போட்டு விட்டிருக்கிறேன்.

இந்த சீசனின் பட்டியல் இது தான்,

கத்தரி (Long Purple)

கத்தரி (மணப்பாறை – Round Purle)

கத்தரி (வெள்ளை)

நாட்டு தக்காளி

நாட்டு தக்காளி (மதுரை)

முட்டி மிளகாய்

தோடு மிளகாய்

சம்பா மிளகாய்

குண்டு மிளகாய்

சீனி மிளகாய்

காந்தாரி மிளகாய்

முள்ளங்கி (வெள்ளை)

முள்ளங்கி (சிவப்பு)

வெண்டை

சீனி அவரை (கொத்தவரை)

அவரை

காராமணி (தட்டை)

சுரை

புடலை

பாகல்

மிதி பாகல் (பாகல் – சிறியது)

பீர்க்கன்

பீன்ஸ்

குடை மிளகாய்

நூல்கோல்

பேபி கார்ன்

Advertisements

2 thoughts on “2017 – சீசன்-2 (ஜூலை – டிசம்பர்)

  1. இந்த வருட சீசன் வெற்றிகரமாக பலன் கிடைக்க எனது வாழ்த்துக்கள்…..15 ம் தேதி அக்ரி இன்டெக்ஸ் வருகிறேன் ., நீங்கள் வந்தால் சந்திக்கலாம் நண்பரே.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s