மாடித் தோட்டம் – சில டிப்ஸ்

மாடித் தோட்டம் என்றவுடன் நிறைய பேர் நிழல் வலை அமைத்தால் தான் செய்ய முடியுமா என்று கேட்கிறார்கள். முதல் மாடி என்றால் நிழல் வலை தேவை இல்லை. நான் இரண்டு வருடங்களாக நிழல் வலை இல்லாமல் தான் மாடியில் செடிகள் வளர்த்துக் கொண்டிருந்தேன். காற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் உயரமாய் வளரும் வெண்டை, கார்ன் மாதிரி செடிகள் மற்றும் கொடிகள் வளர்க்க முடியாது. அதனால் நிழல் வலை அமைக்க வேண்டியதாகிவிட்டது. மற்றபடி நிழல் வலை இல்லாமல் தாரளமாக தோட்டம் ஆரம்பிக்கலாம். இரண்டாம், மூன்றாம் மாடி என்று போகும் போது வெயில் அதிகமாக இருந்தால் நிழல் வலை தேவைப்படும். நிழல் வலை அமைக்கும் போது காற்றின் தாக்கத்திற்கு ஏற்ற மாதிரி கட்டமைப்பை உறுதியாக அமைத்துக் கொள்ளுங்கள்.

எனது பசுமைக் குடில் தோட்டம் ஒரு வருடத்தைக் கடந்து வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கிறது. போன வருடம் பிப்ரவரியில் முடித்து முழுமையா தோட்டத்தை ஆரம்பித்திருந்தேன். இது வரை கற்றுக் கொண்ட சில விஷயங்கள் புதிதாக தோட்டம் ஆரம்பிப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

பலமான காற்று பலவற்றை தாங்கி இது வரை பெரிதாக சேதாரம் ஏதும் இல்லாமல் தோட்டம் நன்றாகவே இருக்கிறது. இரண்டு இடங்களில் மட்டும் வலை கம்பியில் காற்றில் உரசி கிழிந்து விட்டது. அதற்கு முக்கிய காரணம் ஹார்ட்வேர் கடையில் வாங்கி பயன்படுத்திய Cable Ties (Tags).

நன்றாக உழைக்கும், பிடித்து லாக் செய்து விட்டால் காலத்திற்கும் அப்படியே இருக்கும் என்று நினைத்து மொத்த தோட்டத்திலும் கட்ட வேண்டிய இடத்தில் எல்லாம் Tag வைத்து கட்டி விட்டது பெரிய தவறாக போய்விட்டது. வெயிலில் எல்லா Tag-ம் இத்து போய், ஆறு மாதத்தில் எல்லாமே தானாகவே பிரிந்து போய் விட்டது. வலை எல்லாம் அந்தரத்தில் கட்டாமலேயே விட்டது மாதிரி ஆகி, கம்பியில் உராய்ந்து கிழிய ஆரம்பித்தது.

இன்னொன்றையும் செய்திருக்கலாம். உராய்வினால் கிழிந்து விடக்கூடாது என்று தான் உருளை கம்பிகளாய் அமைத்தோம். அந்த கம்பிகளை சுற்றி ஒரு சுற்று நிழல் வலையில் மிச்சமாய் கிடந்ததை சுற்றி கட்டி அதன் மேல் வலையை அமைத்திருந்தால், உராய்வு இருந்தாலும் சேதம் இருந்திருக்காது.

கிட்டத்தட்ட எல்லா Tag-ம் வாயை பிளக்க, நிழல் வலைக்கு கட்ட என்று கிடைக்கும் பச்சை நிற கயறு வாங்கி எல்லா இடத்திலும் கட்டி சரி செய்தேன். எல்லா இடத்திலும் பெரிய ட்ரே வைத்து விட்டதால் ஏணி வைத்து ஏற இடம் இல்லை. முடிந்த அளவுக்கு இருக்கும் இடைவெளியில் ஏணியை வைத்து இப்போது வலை எந்த காற்று வந்தாலும் அசைவது இல்லை.

இந்த பச்சை கயறு நிழல் வலை அமைப்புக்கென்றே கிடைப்பது தான். UV Treated என்பதால் எந்த வெயிலிலும் இத்து போகாது. இது நிறைய இடத்தில் பயனுள்ளதாக இருக்கிறது. கட்டுவதற்கு தேவையான இடத்தில் எல்லாம் (செடிகளை கம்பில் பிடித்து கட்ட, திராட்சையை சுற்றி வலையை கட்ட) இந்த கயறு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இது கிலோ Rs.450 ஆகிறது. அரைக் கிலோ வாங்கினால் இரண்டு மூன்று வருடங்களுக்கு வரும். ஒரு முறை கட்டிய பிறகு அதையே எடுத்து மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதிலே இரண்டு மூன்று வகை இருக்கிறது. இதில் தடிமன் குறைவான கயிர் போதுமானதாக இருக்கிறது.

இன்னொன்று, நிழல் வலை அமைக்கும் போதே இரண்டு இடங்களிலாவது வெளியில் இருந்து வண்ணத்துப் பூச்சிகளும், தேனிக்களும் வந்து போவது மாதிரி ஓபனிங் வைப்பது மிக அவசியம். இதைப் பற்றி ஏற்கனவே கூறி இருக்கிறேன். நிறைய பேர் நிழல் வலை என்றவுடன் பூச்சி தொல்லை இருக்காதா என்கிறார்கள். அமைத்துப் பாருங்கள். தெரியும். பூச்சிகள் எல்லாம் வந்து சாமி ஆடிவிட்டு போகும். தரை தோட்டத்தை விட அதே செடிக்கு மாடியில் தான் அதிக பூச்சிகள் வருகிறது. பூச்சி எல்லாம் வராத அளவுக்கு அமைக்க வேண்டும் என்றால் கண்ணாடி எல்லாம் வைத்து Green House தான் அமைக்க வேண்டும்.

நான் முன்பு சொன்னது மாதிரி 35% Shade Grade தான் சரியாக இருக்கும். 50% Shade செடி செழிப்பாக வளர உதவும். ஆனால் விளைச்சல் கிடைக்காது.

காற்றின் தாக்கம் அதிகமாக இருந்தால், அந்த திசையில் காற்று அதிகமாக வீசுமோ அந்த பக்கம், பக்கவாட்டில் வலை அமைக்காமல் Sheet Metal வைத்து அமைத்தால் வலை அமைப்பு நீண்ட காலம் சேதாரம் இல்லாமல் இருக்கும்.

கொஞ்சம் தோட்டம் பக்கம் பார்க்கலாம். இந்த கோடை வெயிலைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. சொந்த ஊருக்கு வேறு கோடை விடுமுறைக்கு ஒரு வாரம் செல்ல வேண்டிய இருப்பதால் பெரிதாக ஏதும் புதிய செடிகள் வைக்கவில்லை. ஜூன் மாதத்தில் தான் எல்லாவற்றையும் ஆரம்பிக்க வேண்டும். தரை தோட்டத்தில் இந்த முறை புதிதாய் ஒரு கத்தரி ஓன்று சேர்ந்திருக்கிறது. காய்கறிகளில் கத்தரியில் மட்டும் தான் ஒரு நூறு வகை இருக்கும் போல. எல்லாவற்றையும் தோட்டத்தில் வளர்க்க ஆசை தான். ஆனால் அத்தனையையும் வளர்த்து குடும்பமாய் உட்கார்ந்து கத்தரிகாயாக சாப்பிட்டுக் கொண்டிருக்க முடியாது. இருந்தாலும் முயற்சிக்கும் கத்தரியில் நமக்கு பிடித்த கத்தரியை விதை எடுத்து நிரந்தரமாய் வருடா வருடம் வளர்த்துக் கொள்வதுண்டு.

இந்த முறை வாங்கிய நாட்டு விதைகளில் இந்த கொத்துக் கத்தரியும் இருந்தது. ஒரு காம்பில் மூன்றில் இருந்து ஐந்து கத்தரி என்று கொத்து கொத்தாய் காய்க்கிறது. கத்தரி பார்ப்பதற்கும் ஊதா நிறத்தில் பளபள என்று அழகாய் இருக்கிறது. நமது நிரந்தர பட்டியலில் வைத்துக் கொள்ளலாம் என்று ஒரு கொத்தை விதைக்கு விட்டிருக்கிறேன்.

நமது திராட்சை கொடியின் தற்போதைய நிலவரத்தை பார்த்தால், மூன்றாவது முறையாக காய்த்து பழமும் இந்த கோடையில் பறித்துக் கொண்டிருக்கிறோம். இரண்டாவது விளைச்சல் முடிந்ததும் மொத்தமாய் வெட்டி கவாத்து செய்யலாம் என்று எண்ணம் இருந்தது. பிறகு அடிக்கும் வெயிலை பார்த்து கவாத்து செய்கிறேன் என்று கழுத்தை வெட்டிய கதையாக ஆகிவிட கூடாது என்று அப்படியே விட்டுவிட்டேன்.

மூன்றாவது சீசனிலும் புதிதாய் தளிர்கள் வந்து ஓரளவுக்கு நன்றாகவே காய்த்து, இப்போது பழம் பறித்துக் கொண்டிருக்கிறோம். பந்தல் முழுவதும் அடர்த்தியாக படர்ந்து பச்சை பசேல் என்று இந்த கோடையையும் என் வீட்டை குளிர்ச்சியாக்கி விட்டது இந்த திராட்சை. இந்த சீசன் முடிந்ததும் ஜூனில் கவாத்து செய்து விட வேண்டும்.

Advertisements

8 thoughts on “மாடித் தோட்டம் – சில டிப்ஸ்

 1. அருமை அண்ணா. உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

  Like

 2. சூப்பர் சிவா..

  தொடர் நடவடிக்கை தான் அனைத்துக்கும் பிரதானம்.
  அந்த அடிப்படையில், நிழல் வலை, திராட்சை குறித்து தொட்டு விட்டீர்கள்.
  கொத்து கத்திரி நாட்டு ரகமா? ஹைப்ரீடா? ஏதுவாக இருந்தாலும் சரி.
  எனக்கு முள் கத்திரி மற்றும் இந்த கொத்து கத்திரி விதை அனுப்ப முடியுமா?
  சென்ற வாரம் ௨ நாட்கள் கோவையில் இருந்தேன். வேறு பணிகள் இருந்ததால் தங்களை சந்திக்க இயலவில்லை.

  அன்புடன்
  இராமன், தாசில்தார் (பணி நிறைவு),
  40 /23 , வெங்கட அய்யர் தெரு, மண்ணடி,
  சென்னை- 600001

  Like

 3. Super Siva, where you buy the seeds, Please give me the address and mobile number.

  Thanks with regards,
  vallaumuthu M.

  Like

 4. சார் கத்தரிக்காய் செடியில் பூ உதிர்ந்து விடுகிறது

  Like

 5. அது போக அசுவினி பூச்சிகள் தொல்லை வேப்ப எண்ணெய் அடித்து விட்டு பார்த்தேன்
  போக மாட்டேன் என்கிறது

  Like

 6. Sir I’m Interested to MAADI THOTTAM I Want Basic Details I From Erode Inga vidhaikal,cab,ect….idhu ellam enga kidaikkum solluga please….

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s