தோட்ட உலா – ஏப்ரல் 2017

மஞ்சள்

வழக்கமாக பொங்கலுக்கு என்று சில மஞ்சள் செடிகளை வளர்ப்பதுண்டு. சின்ன வயதில் இருந்தே பொங்கல் படையல் என்றால் வீட்டில் காய்த்துக் கிடக்கும் சில காய்கறிகளை பறித்து வந்து வைத்தால் ஒரு சந்தோசம். நமது அறுவடை அது தான். இந்த முறை ஒரு மஞ்சள் செடியை பொங்கலுக்கு பிறகும் அப்படியே விட்டு வைத்திருந்தோம். பெப்ரவரி வாக்கில் செடியை பிடுங்கி பார்த்த போது அசந்து போய்விட்டோம். ஒரே ஒரு செடியில் இவ்வளவு மஞ்சள் (ஈர கிழங்கின் எடை இரண்டு கிலோ வந்திருக்கும்). இவ்வளவையும் வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று யோசித்த போது பேசாமல் மஞ்சளை காய வைத்து பொடி செய்து பார்த்தால் என்ன என்று தோன்றியது. வழக்கம் போல கூகிள் செய்து விவரங்களை சேர்த்துக் கொண்டேன்.

மஞ்சளை நாம் மரவள்ளி கிழங்கை அவிப்பது போல நிறைய நீர் விட்டு அவித்து எடுத்துக் கொள்ள வேண்டும் (முக்கால் மணி நேரம் அவிக்க வேண்டும். ஒரு சிறிய குச்சியை கொண்டு குத்தி பார்த்தால் கிழங்கு அவிந்து பதமாக இருக்க வேண்டும்). அதை சிறிய துண்டுகளாக வெட்டி வெயிலில் இரண்டு நாள் காய வைத்து, பிறகு நிழலில் ஒரு இரண்டு வாரம் காய வைக்க வேண்டும். பிறகு எடுத்து மிக்சியில் அரைத்து சலித்து எடுத்துக் கொண்டால் சமையலுக்கு மஞ்சள் பொடி தயார்.

மொத்த மஞ்சளில் இருந்து கால் கிலோ மஞ்சள் பொடி கிடைத்தது. கடையில் வாங்கும் மஞ்சளை விட நிறம் அடர் மஞ்சளாய் அருமையாக இருந்தது.

பியர் தக்காளி

முன்பு ஒரு முறை நண்பர் ஒருவர் சிங்கப்பூரில் இருந்து விதைகள் வாங்கி வந்திருந்தார் என்று கூறி இருந்தேன். அதில் ஓன்று இந்த பியர் தக்காளி (Pear Tomato). பார்ப்பதற்கு ஏதோ கலர் கலராய் மிட்டாய் கடைகளில் வைத்திருக்கும் ரசகுல்லா மாதிரியே இருக்கிறது.

நண்பர் ஒருவர் இதை பார்த்து GMO (Genetically Modified) –வா இருக்கப் போது, பார்த்துக்கோங்க என்று கலவரத்தை ஏற்படுத்தி விட்டு போய் விட்டார். இப்போதெல்லாம் விதை தேர்வில் நிறைய யோசிக்க ஆரம்பித்து இருக்கிறேன். கிட்டதட்ட ஹைப்ரிட் விதைகள் வாங்குவதை நிறுத்து விட்டேன். அடுத்ததாய் விதைகள் வாங்குவதையே நிறுத்த வேண்டும். நமது தோட்டத்தில் இருந்து  நாமே ஒவ்வொரு சீசனில் இருந்தும் விதைகளை எடுத்துக் கொள்வது நல்லது. அதற்கு நல்ல நாட்டு வகை அமைய வேண்டும். சில செடிகள் முன்பே நல்ல வகை கிடைத்து நான் எனக்கு தேவையான விதைகளை எடுத்துக் கொள்கிறேன். மற்ற செடிகளுக்கும் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். விவரமாய் வேறு ஒரு பதிவில் எழுதுகிறேன்.

  புதினா

ஒரு தோட்டக்காரனாய் எனது முதல் நோக்கம் நமக்கு தேவையான காய்கறி, கீரைகளை நமது தோட்டத்தில் இருந்தே வருடம் முழுவதும் எடுப்பது தான். எல்லா செடிகளும் அவ்வளவு எளிதாய் அமைத்து விடுவதில்லை. ஒவ்வொரு செடிக்கும் நல்ல ரகம் ஓன்று அமைத்து விட்டால் அதை வைத்து அப்படியே பிடித்துக் கொண்டு போய்விடலாம். இது வரை கத்தரி, தக்காளி, வெண்டை, அவரை, கொத்தவரை செடிகள் நல்ல சில வகைகள் கிடைத்து விதைகள் எடுத்துக் கொள்கிறேன்.

இந்த சீசனில் புதினாவும் அந்த பட்டியலில் சேர்ந்திருக்கிறது. புதினாவிற்கு கடையில் வாங்கும் கட்டில் இருந்து இரண்டு குச்சிகளை எடுத்து தரையில் வைத்து விட்டாலே போதும். நான் வைத்த பத்து குச்சிகளில் இரண்டு மட்டும் தளிர்த்து மடமடவென்று தரையில் படர ஆரம்பித்து விட்டது. அதை எடுத்து மாடியில் பெரிய ட்ரேயில் வைத்த பிறகு மிரட்டலாய் வளர ஆரம்பித்தது. நான் முன்பு கூறிய மாதிரி கீரை வகை செடிகள் காயர் பித் ஊடகத்தில் தரையை விட அருமையாக வளரும். கடந்த நான்கு மாதமாக இந்த ட்ரேயில் இருந்து தேவைக்கு அதிகமாகவே புதினா எடுத்து கொண்டிருக்கிறோம்.

சிவப்பு முள்ளங்கி

வாட்ஸ்-அப் குழு நண்பர்கள் ஒரு முறை இங்கே தோட்டம் பார்க்க வந்திருந்த போது இந்த சிவப்பு முள்ளங்கி விதைகளை கொடுத்தார்கள். முன்பு சிவப்பு உருண்டை முள்ளங்கி வளர்த்திருக்கிறேன். சிவப்பில் நீள வகை முயற்சித்தது இல்லை. சுமாராய் தான் வரும் என்று நினைத்திருந்தேன். ஆனால் வெள்ளை முள்ளங்கியை விட அருமையாக வந்திருக்கிறது. விதைக்கும் சில செடிகளை விட்டிருக்கிறேன்.

அறுவடை

பருவ மழை பொய்த்து போய் கோடையில் வெயில் கொடுமைக்கு அடிக்கிறது. சில செடிகள் என்ன முயற்சித்தாலும் வருவதில்லை (முக்கியமாக மிளகாய்). இருந்தாலும் முடிந்த அளவுக்கு வீட்டுக்கு தேவையாக காய்கறிகளை எடுக்க முயற்சிகளை செய்து கொண்டே தான் இருக்கிறேன்.

மிளகாய் ஒரு ஐந்தாறு நாட்டு வகை, ஹைப்ரிட் வகை (TNAU) என்று எதை வைத்தாலும் கொஞ்சம் இலைகள் வந்ததும் பல்லைக் காட்டிக் கொண்டு இலை எல்லாம் சுருண்டு போக ஆரம்பிக்கிறது. கொஞ்ச நாள் மிளகாவே போடாமல் விட்டு விடலாம் என்று நினைப்பதுண்டு. பிறகு ஒரு ஆசையில் சில செடிகளாவது ஒழுங்காக வந்து விடாதா என்று வழக்கம் போல எல்லா சீசனிலும் போட்டுக் கொண்டு தான் இருக்கிறேன்.

மாடியில் பந்தல் காய்கறிகள் சுமாராய் தான் காய்க்கிறது. தரையில் பந்தல் விட நிறைய இடம் இல்லை. அதனால் இந்த முறை கூட இரண்டு கொடிகளை வீட்டை சுற்றி சுற்று சுவற்றில் இருக்கும் கம்பியில் படர விட்டு அதில் இருந்தும் ஓரளவுக்கு விளைச்சல் எடுத்துக் கொண்டேன்.

Advertisements

17 thoughts on “தோட்ட உலா – ஏப்ரல் 2017

 1. ரொம்ப நாள் கழித்து உங்களுடைய பதிவு பார்க்க சந்தோஷமாக இருக்கிறது.கீரீன் ஹவுஸ் போட்டது உபயோகமாக இருக்கிறதா? பியர் தக்காளி சூப்பராக இருக்கிறது.

  Like

  • நன்றி மேடம். க்ரீன் ஹவுஸ் பயனுள்ளதாக இருக்கிறது. கொஞ்சம் பராமரிப்பு தேவைப் படுகிறது.

   Like

 2. Happy to meet you through this mail. I am learning more from your post. I want to speak through phone. May I know your phone no.

  Like

 3. Siva anna 6 matha idaivelikku piragu meendum thangal pathivugal parpatharku migavum santhosamaga irukkirathu.ungal valikattuthal padi enadhu maadi thoddathil kaikarihal arumaiyaga kaithu kondirikkirathu.varathil irandu allathu moondru natkal veetu kaikarithan.(singapore tomato super)

  Like

  • மிக்க மகிழ்ச்சி. உங்கள் தோட்டத்தை தொடர்ந்து விளைச்சல் எடுக்க வாழ்த்துகள். புதிதாக எதாவது முயற்சி செய்யுங்கள்.

   Like

 4. அருமையான பதிவு அண்ணா வரவேற்கிறேன்.வாழ்த்துக்கள்

  Like

  • WhatsApp Number கொடுத்திருக்கிறேன். என்னிடமும் ஒரு மல்லிகை செடி பெரிதாக பூக்காமல் நின்று கொண்டிருந்தது. நல்ல சத்தான மண்ணில் தான் இருந்தது. வெயில் சரியாக கிடைக்கவில்லை. உங்கள் செடிக்கு தினமும் எவ்வளவு நேரம் வெயில் கிடைக்கும். உரம் என்ன வைக்கிறீர்கள்?

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s