தோட்ட உபகரணங்கள்

விதைகள் எப்படியோ அப்படித்தான் தோட்ட உபகரணங்களும் நமக்கு. விவசாய கண்காட்சிகளில் நம்மை விட்டால் ஏதாவது வாங்கியே ஆக வேண்டும். இல்லாவிட்டால் அன்றைய விசிட் ஏதோ குறையோடு முடிந்தது போலவே தோன்றும். அதிலும் புதிதாய் தோட்டம் ஆரம்பிக்கும் போது சொல்லவே வேண்டாம். கிடைக்கும் அத்தனையையும் வாங்கினால் தான் திருப்தி (பிறகு அதில் பாதி பரணில் தூங்கிக் கொண்டிருக்கும் 🙂 ). நண்பர் சுரேஷ் தோட்ட உபகரணங்கள் பற்றி ஒரு பதிவு எழுத முடியுமா என்று கேட்டிருந்தார். எனது பயன்பாட்டில் தெரிந்த தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

 Hand Sprayer

தோட்டம் என்றவுடன் முதலில் வருவது ஸ்ப்ரேயர்கள் தான். பஞ்சகாவ்யா, வேப்பம்புண்ணாக்கு கரைசல், மீன் அமிலம் என்று சகலமும் தெளிக்க உருப்படியாக ஒரு ஸ்ப்ரேயர் அவசியம். ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் அளவில் கிடைக்கும் சிறிய ஸ்ப்ரேயர்கள் சிறிது காலத்திருக்கு அப்புறம் சரியாக வேலை செய்வதில்லை. இந்த மாதிரி ஸ்ப்ரேயர்களில் இருக்கிற Nozzle சிறியதாக, அவ்வளவு தரமாக இருப்பதில்லை. சின்ன தூசி துகள் இருந்தாலும் அடைத்து கொண்டு கொஞ்ச நாளில் வீணாய் போய் விடுகிறது. கீழே பார்க்கும் Nozzle செட் இங்கே விவசாய கண்காட்சியில் வாங்கியது. நல்ல தரமாகவும், உறுதியாகவும் இருக்கிறது. விலை ரூ.100 தான். கோக் பாட்டில், பெப்சி பாட்டில் என்று எல்லா விதமான பெட் பாட்டில்களிலும் பொருத்தி பயன்படுத்தலாம். பஞ்சகாவ்யா, மீன் அமிலம் என்று ஒவ்வொன்றுக்கும் தனி தனி பாட்டில் வைத்துக் கொள்ளலாம். ஒரே ஸ்ப்ரேயரை வைத்தே எல்லாவற்றுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

1

 

நான் முன்பு ஒருமுறை பவர் ஸ்ப்ரேயர் பற்றி எழுதி இருக்கிறேன். நமது தோட்டம் ஓரளவுக்கு பெரிதாக இருந்தால், பவர் ஸ்ப்ரேயர் பயன்படுத்தினால் நமக்கு நிறைய நேரம் மிச்சமாகும். விலை ரூ. 2000-ல் இருந்தே கிடைக்கிறது.

Small Hand Fork & Small Trowel

மாடித் தோட்டத்தில் செடிகளை வைத்த பிறகு உரம் இடவோ, வளர்ப்பு பைகளில் ஏதும் கலந்து ஊற்ற கிளறி விட இந்த Small Hand Fork மிக பயனுள்ளதாக இருக்கிறது. வளர்ப்பு பைகளில் செடிகள் பெரிதாக வளர்ந்த பிறகு பெரிய Hand Fork வைத்து கிளறி விட முடியாது. அந்த சமயத்தில் இந்த சிறிய Hand Fork பயன்படும். இதுவும் இங்கே ஒரு கண்காட்சியில் வாங்கியது தான்.

2

 

Hand Trowel & Hand Fork

மாடித் தோட்டத்தில் ஒரு சீசன் அறுவடை முடிந்த பிறகு வைத்த செடிகளை எடுத்துவிட்டு அடுத்த சீசனுக்கான செடிகளை வைத்து விட இந்த Hand Fork தேவைப்படும். வளர்ப்பு பைகளில் ஊடகத்தை நன்கு கிளறி விட பயன்படும். தரையில் பாத்திகளில் கொத்தி கிளறி விட, சின்னதாய் ஏதும் தோண்ட இது உபயோகமாய் இருக்கும். இது விலை குறைவாக பிளாஸ்டிக் கைப்பிடி வைத்தும் வரும், கொஞ்சம் விலை அதிகமாக ரப்பர் கைப்பிடி வைத்தும் வருகிறது. வாங்கும் போது நல்ல தரமானதாக வாங்கினால் பயன்படுத்தவும் எளிதாக இருக்கும், நீண்டகாலம் உழைக்கவும் செய்யும்.

3

 

Pruners

தோட்டத்திற்கு மிக அவசியமான ஒரு உபகரணம். செடிகளில் இருந்து காய்கறிகள் அறுவடை செய்ய சிறிய ஒரு Pruner வைத்துக் கொள்ளலாம். இல்லையென்றால் பெரிய கத்தரிக்கோல் ஓன்று வைத்துக் கொள்ளலாம். கைகளால் பறிக்கிறேன் என்று கொடுமைக்கு செடியை ஆட்டி, கிளையை ஒடித்து எல்லாம் அறுவடை செய்யக் கூடாது.

Pruning செய்ய உறுதியாக இன்னொரு Pruner வேண்டும். இது கொடிகளை வெட்டி விட, செம்பருத்தி, மாதுளை, ஜாதி மல்லி போன்றவற்றின் கிளைகளை வெட்டி விட பயன்படும். பிளாஸ்டிக் கைப்பிடி இல்லாமல் முழுவதும் இரும்பில் கிடைத்தால் நீண்ட காலம் உழைக்கும். பெரிய கிளைகளை கூட எளிதாக வெட்டும்.

4

 

சிறிய மண்வெட்டி

சின்ன சின்ன தோட்ட வேலைகளுக்கு ரொம்பவே உதவியாக இருக்கும். நாற்று ஏதும் வைக்க சிறிய குழி பறிக்க, சின்னதாய் பாத்தி எடுக்க, களைகளை கொத்தி விட என்று தரை தோட்டத்திற்கு மிக அவசியமான ஒரு உபகரணம். மாடித் தோட்டத்திற்கு தேவை இல்லை. வாங்கும் போது முழுவதும் இரும்பில் செய்ததாய் வாங்கினால் பிடி மட்டும் நழுவி போவது போன்ற தொல்லைகள் வராது.

5

 

பூவாளி         

மாடித் தோட்டத்திற்கு பூவாளி தேவை இல்லை. இதை வைத்துக் கொண்டு மாடியில் நீர் ஊற்றினால் பாதி பையில் வெளியே தான் கொட்டும். தரை தோட்டத்திற்கு வேண்டும் என்றால் வாங்கிக் கொள்ளலாம். நேரடியாக விதைக்கும் பாத்திகளுக்கு தொடக்கத்தில் நீருற்ற பூவாளியை பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வப்போது வைக்கும் சிறிய செடிகளுக்கு தொடக்கத்தில் கொஞ்சமாய் நீரூற்ற பூவாளி பயன்படும். மற்றபடி பெரிதாய் தேவை இல்லை. வாங்கும் போது கொஞ்சம் உறுதியான பிளாஸ்டிக்கில் வாங்கினால் பல வருடங்கள் உழைக்கும். samruddhi brand plastic மாதிரி வாங்கினால் எந்த வெயிலுக்கும் பிளாஸ்டிக் தாங்குகிறது. என்னிடம் இருக்கும் பூவாளி ஐந்து வருடங்களுக்கு முன் வாங்கியது. இன்னமும் நன்றாக இருக்கிறது.

6

 

இது தவிர மண்வெட்டி, கடப்பாரை என்று தேவைக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம்.

இளையராஜாவின் இசை

என்னடா சம்பந்தம் இல்லாமல் தோட்ட உபகரணங்களில் இசை என்று குழம்ப வேண்டாம். உழைப்பவனுக்கு இசை தானே தாலாட்டு. தோட்ட வேலை என்றால் வார நாட்களில் ஒரு மணி நேரம் போகும், வார இறுதி என்றால் மூன்றில் இருந்து சில நேரம் ஐந்து மணி நேரம் கூட தோட்ட வேலை போகும். அப்போதெல்லாம் ராஜாவின் பாடலை போட்டு விட்டால் நாள் முழுக்க கூட வேலை செய்யலாம். (“சார். ஒரு பத்து நிமிடம் டெய்லி ஸ்பென்ட் பண்ணினா போதுமா” என்று கேட்கும் கப்பல் வியாபாரிகளுக்கு நேரம் எப்படி கிடைக்கும் என்று தனி ஒரு பதிவில் பேசலாம் 🙂 ).

தோட்டத்தில் வேலை செய்யும் போது சின்னதாய் ஒரு MP3 Player with Speaker இருந்தால் அருகிலேயே வைத்து பாட்டு கேட்டுக் கொள்ளலாம். பொதுவாய் லோக்கல் எலக்ரானிக் கடைகளில் கிடைக்கும் MP3 Player அவ்வளவு நன்றாய் இருப்பதில்லை. இணையத்தில் தேடித் பார்த்ததில் Portronics Pure Sound நன்றாய் தெரிந்தது. இதில் மெமரி கார்ட், பென் டிரைவ்-ம் பயன்படுத்தலாம். விலை ரூ. 1200 இருக்கும். மொபைல் போன் பேட்டரி தான் பயன்படுத்தி இருக்கிறார்கள். ஒரு முறை சார்ஜ் செய்தால் நாள் முழுக்க பாடிக் கொண்டிருக்கும். ஒலியின் தரம் இவ்வளவு சிறிய ஸ்பீக்கர்-ல் இவ்வளவு தரமான துல்லியமான இசையை நான் கேட்டதில்லை. அருமையாக இருக்கிறது. பாட்டுக் கேட்டுக்கொண்டே வேலை செய்ய யாருக்கு பிடிக்காது. அதனால் இதையும் இந்த பட்டியலில் சேர்த்து விடுகிறேன்.

7

 

வேலையை மாற்றி கோவை வந்த புதிதில் முதலில் நான் மட்டும் தான் வந்தேன். படிப்பு காரணமாக கொஞ்ச நாள் குடும்பம் சென்னையில் இருந்தது. அப்போதெல்லாம் பொழுது போகவில்லை என்றால் நேரே பஸ் ஸ்டாண்ட் போய் சத்தியமங்கலம் போகும் பாட்டு ஓடிக்கொண்டிருக்கும் பஸ் ஒன்றில் ஜன்னல் ஓரம் ஒரு சீட் பிடித்து பயணம் செய்வது ரொம்ப பிடிக்கும். நேரே சத்தி போய் ஏதாவது பரோட்டா கடையில் ரெண்டு பரோட்டா சாப்பிட்டுட்டு மறுபடி அதே போல கோவைக்கு திரும்பி வந்து விடுவேன். எந்த நோக்கமும் இல்லாத ஒரு பயணம், ஜன்னல் ஓரம் முகத்தில் வீசும் காற்று, எந்த யோசனையும் இல்லாத மனம், கூடவே ராஜாவின் இசை. இன்னும் கொஞ்சம் தொடராதா என்று ஏங்க வைக்கும் பயணம். அது போல தான், தோட்டத்தில் ஏதாவது வேலை செய்து கொண்டிருந்தாலே சந்தோசம் தான். கூடவே ராஜாவின் இசையும் சேர்ந்து கொண்டால் எனக்கு அது அலுப்பில்லாத ஜன்னல் ஓர பயணம் மாதிரி தான்.

 

 

45 thoughts on “தோட்ட உபகரணங்கள்

  1. சூப்பர் சிவா……

    என் கோரிக்கையை நிறைவேற்றியதற்கு நன்றி…..

    மிகவும் பயனுள்ள பதிவு….

    அதுவும் என்னைப்போல் புதிய வரவுகளுக்கு….

    இளையராஜா மிடில் ஏஜ் பாடல்கள் கேட்டுக்கொண்டிருந்தால் மரணம் கூட வலிக்காமல் நிகழும்……

    தகவல்களுக்கு நன்றி……

    வாழ்க வளமுடன்

    Like

    • நன்றி சுரேஷ். உடனே பர்சேசிங் கெளம்பிட்டீங்களா 🙂

      //இளையராஜா மிடில் ஏஜ் பாடல்கள் கேட்டுக்கொண்டிருந்தால் மரணம் கூட வலிக்காமல் நிகழும்// என்ன எழுதினாலும் கவிதையாய் ஒரு வரியை போட்டுவிட்டு போய் விடுறீங்க. அருமை சுரேஷ்.

      Like

  2. சென்னை நியூ பெருங்களத்தூரில் 1 கிலோ 5.50 ரூபாய்க்கு மண்புழு உரம் கிடைக்கிறது என்பது correct adress

    theareyalayea anna. enga per Rs. 30 than athegama eruku. entha adress keadacha nalla erukkum. sareya நியூ

    பெருங்களத்தூரில் எங்கனு தகவல் இல்லை. thearenja sollunga anna

    Like

    • இப்பொழுது மண்புழு உரம்-ன் விலை கிலோ 10ரூபாய். 35 கிலோவாகத்தான்(1பேக் 35கிலோ) தருகிறார்கள்.

      Thanks with Regards,
      Vallamuthu M.

      Like

        • Hi Ramesh,

          Behind the perungalathur railway station, there is a place “GUNDU MEDU”. Over there, They are preparing manpulu uram(using only cow dung) its prize is 10rs perkg. Also, they are preparing the “Iyarkai Uram” from garbage. They are collect the garbage from perungalathur people and segregate it like compost thing and not compost thing and then they are preparing the “Iyarkai Uram”. It’s cost is rs5 perkg. now they are giving 1 kg also. Now they are growing the herbs like sarbagandhi, pei(Ghost) verati, adathodai etc. last week I went over there. they started to and show how to prepare the compost and show the herbs and explain the benefits. It’s very interesting one. Kindly find the employees number Rudhra:7402740591, Revathy:7402740586. I am working in office computer. so I am not able to type in Tamil.

          Like

    • Contact perungalathur town Panchayat office. You will get Number in Google. I visited long back. You will get vermi also per kg 6rs. they will give lot of ideas and information. That chairman have done a wonderful job.

      Sorry i’m using Office computer, so couldnt type in tamil.

      Like

    • Perugulathur to ssm school or gkm engineering college road.
      There left side Forest office is there. It’s within one km from Railway station.

      Like

  3. Super siva,

    Antha bus pauanam matrum music, Super!. The same thing I did many times.

    Thanks with Regards,
    Vallamuthu M.

    Like

  4. Dear Siva,

    Listening to Raja’s music or any music is not only good for the gardener but also good for the plants.

    Keep writing about gardening.

    Thanks

    S.Vasu
    S. Vasu

    Like

    • Super Vasu. There are researches went in how plant react to music. May be we should get more details and put a permanent music system in garden 🙂

      Like

  5. தோட்ட உபகரணங்கள உபயோகமுள்ள தகவல்கள் சார், உண்மையிலேயே பஸ்ஸில் பாடல்கள்

    கேட்டு பயணித்தது இனிய அனுபவம் கோவையில் வேலைக்கு செல்லும்போது ஆடியோ

    இருக்கும் plsm பஸ்ஸிற்காக காலியாக போகும் பஸ்ஸை விட்டு கூட்டத்தில் ஏறி போவதை

    ஞாபகபடுத்தி விட்டது உங்கள் பதிவு.

    நீங்கள் ரெகமண்ட் பண்ணிய nozzle ரொம்ப உபயோகமாக இருக்கிறது சார். இன்னும் 2

    வாங்கியிருக்கலாம் என்று தோன்றியது.

    Like

    • உங்கள் பழைய நியாபகங்களை கொண்டு வந்ததில் சந்தோசம் மேடம். தினசரி பஸ்ஸில் பயணம் செய்பவர்களுக்கு இந்த அனுபவம் நிறையவே இருக்கும்.

      அந்த Nozzle அங்கே லோக்கலில் கிடைக்கிறதா என்று பாருங்கள். வேண்டுமானால் நானும் இங்கே பார்த்து கூறுகிறேன்.

      Like

  6. வீட்டுத் தோட்டத்தில் புல் வெட்ட மின்சக்தியில் இயங்கும் சிறிய lawn mower பற்றி
    விபரம் தரக் கோருகிறேன். நன்றி.

    Liked by 1 person

    • நன்றி. பெரிய தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு பயன்படலாம். விவரங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

      Like

  7. @Siva: i’m following your articles and you are the inspiration for me. I have a small terrace garden at my house in chennai.

    Very useful information you are sharing.

    If you have any whatsapp group for your followers and share info then it will be grateful.

    Like

    • Thanks Nandhini. If you get time, please share any tips and details about your garden also.

      I am not in facebook or whatsapp. Will let you know if I happen to start/join anything of that sort 🙂

      Like

  8. Really Great Post Sir. Can anyone please tell me, where in Chennai, we can get cheap and quality gardening products. Address or name of the shop please. Thanks in advance.

    Like

  9. Hi Siva,

    Good post about garden tools. Ilayaraja music always good to hear and i like always mike mohan songs verymuch.

    Yet to start this season vegetables as chennai is still hot and of course with occasional rains.

    Like

    • Thanks Anna. You missed Ramarajan songs 🙂

      Here also no rain and going to be tough if this continues in Sep-Oct season also. Hoping for the best.

      Like

  10. Awesome writing SIVA….Especially ….Kovai to Sathyamangalam.. and Raja sir’s song …:-)

    I thing some same common habits for all of us who likes nature….

    Thanks Siva….for this articles.

    Keep going great….”-)

    Like

  11. Hi Siva, good one very useful & informative. Last time i missed to visit your garden, may be in future hopefully. Last visit i was enjoying the bus travel from Ukkadam to Aliyar Ilayaraja music & SPB voice it was awesome while travel & weather too. Thanks for the Mp3 player suggestion. Waiting for your new post. Rgds. Rajesh.

    Like

    • Thanks Rajesh. We couldn’t plan the garden visit during Agri Index visit. Lets plan during your next visit. Apart from Raja sir music, I too addicted to SPB voice (particularly his very old song – Jeisankar movies and other old songs).

      Like

  12. வணக்கம் சிவா,
    எப்போதும் போல அருமையான பதிவு ! என் வாழ்த்துக்கள் !

    இசைஞானி இசையை ஞாபகப்படுத்தி முடித்ததற்கு நன்றி!

    Like

  13. வணக்கம் அண்ணா,உங்கள் வலைபதிவை ஒன்று விடாமல் படித்து வருகிறேன்நான்

    மாடி தோட்டம் அமைப்பதற்க்கே நீங்கள் தான் மிக முக்கிய காரணம்.இன்று தொலைபேசியில்

    முதன்முறை பேசியது மிக்க மகிழ்ச்சி மிகவும் பொறுமையாகவும் தேவையான் தகவல்களை

    சொன்னீர்கள் நன்றி அண்ணா.கீரை புகைபடங்களை மின்னஞ்சல் செய்கிறேன் மீண்டும்

    தொடர்பு கொள்கிறென் நன்றி அண்ணா.

    திருப்பூர் சரவணக்குமார்.

    Like

    • நன்றி சரவணன். உங்கள் கீரை தோட்டம் படங்களை பார்த்தேன். நல்ல செழிப்பாக வந்திருக்கிறது. வாழ்த்துகள். தொடருங்கள். மெதுவாக புதிய முயற்சிகள், புதிய செடிகள் என்று விரிவாக்கம் செய்யுங்கள்.

      Like

  14. அருமை நண்பரே என் மாடியில் தோட்டம் அமைக்க தேடிய போது உங்கள் பதிவை படித்தேன்

    மிகவும் அருமை நன்றி

    Like

  15. Thanks Mr. Siva, it’s very useful massage for me, because I’m beginner in agriculture field. I’m going to start small gardening in my land, also need your kind assistance on this.

    Like

  16. சிவா சார் நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் வலைப்பதிவுக்கு வருகிறேன்….
    அருமையான பதிவு….இந்த வாரம் 15 ம் தேதி கொடிசியா வருகிறேன் வாய்ப்பு இருந்தால் சந்திகலாம் நன்றி…

    Like

  17. i am a seniar citizen .your detailedinformations are very useful for [10times] menellain manam therikirathu en oori n ninaivugal manathi thontru kirathu valarthanthu nellail valvathu chennail nantri

    Like

    • உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா. நானும் கொஞ்ச வருடம் சென்னையில் இருந்து பின் கோவை வந்து விட்டேன்

      Like

Leave a comment