மீன் அமிலம் மற்றும் சீசன் விளைச்சல்

மீன் அமிலம்

இந்த சீசனில் முதன் முதலாய் மீன் அமிலம் முயற்சித்தேன். இதுவும் பஞ்சகாவ்யா மாதிரி ஒரு வளர்ச்சி ஊக்கி தான். பஞ்சகாவ்யா நாமே தயாரிக்க கொஞ்சம் கடினம் (நாட்டு மாட்டின் சாணம், கோமியம் என்று இங்கே நகரத்தில் எங்கே தேடுவது). நாமே தயாரிக்க கூடியது மாதிரி ஓன்று இருந்தால் நன்றாக இருக்குமே என்று தேடி கிடைத்த தகவல்களை பட்டியலிட்ட போது மீன் அமிலம் எளிதாக இருந்தது.

செய்முறை மிக எளிது தான். மீன் கடைகளில் கிடைக்கும் மீன் கழிவுகள் தேவையான அளவு (அரை கிலோ என்று வைத்துக் கொள்வோம்) வாங்கி அதன் கூட அதே அளவு (அரை கிலோ) பொடித்த நாட்டு வெல்லம் கலந்து ஒரு காற்று புகாத ஒரு பாத்திரத்தில் வைத்து நல்ல நிழலில் வைத்து விடவேண்டும் (சமையல் அறையில் பயன்படுத்தும் air tight container ஏதும் எடுத்துக் கொள்ளலாம்). வெறும் மீன் கழிவு, வெல்லம் மட்டும் தான். நீர் சேர்க்கக் கூடாது. இடையில் கலக்கி விட வேண்டிய அவசியம் இல்லை.

மூன்று வாரங்கள் (21 – 25 Days) கழித்து வெல்லமும் மீனும் கலந்து தேன் போல மாறி இருக்கும். இது செடிகளுக்கு சிறந்த வளர்ச்சி ஊக்கி. லிட்டருக்கு பத்து மி.லி அளவில் கலந்து செடிகளுக்கு தெளிக்கலாம். மீன் வாடை போய் கொஞ்சம் பழ வாடை இருக்கும் என்கிறார்கள். ஆனால் கொஞ்சம் மீன் வாடை இருக்கத் தான் செய்கிறது. மீன் அமிலத்தை ஒரு காற்றுப் போகாத பாட்டிலில் அடைத்து வைத்து ஆறு மாதங்கள் வரை பயன்படுத்தலாம் என்று சொல்கிறார்கள்.

இந்த சீசனில் பஞ்சகாவ்யா பயன்படுத்தவே இல்லை. மீன் அமிலம் தான் படுத்தினேன். அதனால் தான் விளைச்சல் கிடைத்ததா என்று முடிவு செய்ய முடியாது. விளைச்சலுக்கு பல காரணிகள் இருக்கிறது. வளர்ச்சி ஊக்கி என்பது நாம் செடிகளுக்கு ஒரு கூடுதல் பலமாக எல்லா சீசனிலும் தெளிக்கும் ஓன்று. அவ்வளவே.

இந்த சீசன் விளைச்சல்

ஜூன் ஆரம்பிக்கிறது. அடுத்த சீசனை ஆரம்பிக்க திட்டம் போய்க்கொண்டிருக்கிறது. மாடித்தோட்டம் முழுவதும் ரெடியாகி வரும் முதல் சீசன். இந்த சீசனில் இருந்து தேவைக்கு அதிகமாக இடம் இருக்கிறது. குறைந்த வகைகள் வைத்து தேவையான காய்கறிகளை கொண்ட ஒரு முழுமையான தோட்டமாய் இந்த சீசன் இருக்க வேண்டும். அங்கே அங்கே கொஞ்சம் சோதனை முயற்சிகளும் இருக்கும்.

அடுத்த சீசனுக்கு முன் போன சீசனின் விளைச்சல் பற்றி ஒரு சிறிய அலசல். இந்த சீசனின் முக்கிய விளைச்சல் வீட்டின் முன்னால் அமைத்த நிரந்தர மேட்டுப்பாத்தியில் இருந்து தான் கிடைத்தது. மாடியில் வேலை முடியவே மார்ச் ஆகிவிட்டதால் இனி தான் முழுவதும் ஆரம்பிக்க வேண்டும். மாடியில் நூல்கோல், பேபி/ஸ்வீட் கார்ன் மட்டும் வைத்து நன்றாக வந்திருந்தது.

கடந்த இரண்டு மாதங்களாய் காய்கறி விலை கன்னாபின்னாவென்று ஏறி இருக்கிறது. வெண்டை கிலோ 60, புடலை கிலோ 70,  தக்காளி கிலோ 50, கத்தரியே கிலோ ஐம்பதுக்கு போய்விட்டது. இப்படிபட்ட தருணங்களில் நமது வீட்டுத் தோட்டத்தில் இருந்து விளைச்சலை அள்ளும் போது ஒரு சந்தோசம் இருக்கத் தான் செய்கிறது.

முதன்முதலாய் கொடியில் இருந்து ஓரளவுக்கு வெற்றி கிடைத்தது. நான் தான் திட்டமிடலில் சொதப்பி சின்ன பந்தலில் இரண்டு புடலையையும் விட்டு இடம் பற்றாமல் போய்விட்டது. குட்டை புடலையும், நீண்ட புடலையும் ஓரளவுக்கு நல்ல விளைச்சலையே கொடுத்தது. குட்டை புடலை ரொம்ப குட்டையாக இருந்தாலும், நல்ல தடிமன். நல்ல எடை இருந்தது. ஒரு புடலையே 600 கிராம் வரை இருந்தது. நீட்ட புடலை சாதாரணமாய் பார்க்கும் நீட்ட புடலை அளவுக்கு ரொம்ப நீளம் இல்லை.

வெண்டையும் கொத்தவரையும் நல்ல விளைச்சலை கொடுத்தது. மொத்தமாய் இருந்த பதினைத்து வெண்டை செடியில் தினமும் கால் கிலோ தாராளமாய் கிடைத்தது.

கத்தரியிலும் விளைச்சல் அள்ளியது. வெள்ளை, ஊதா நீளம், ஊதா உருண்டை, பச்சை முள் கத்தரி என்று மொத்தம் பன்னிரண்டு செடிகள். ஒவ்வொரு முறையும் பறிக்கும் போதும் ஒரு கிலோவாவது கிடைத்தது. முதலில் கொஞ்சம் சுமாராய் இருந்த தக்காளி கொஞ்சம் சாம்பல் எல்லாம் கரைத்து ஊற்றிய பிறகு நல்ல விளைச்சல் கொடுத்தது.

கூடவே சம்மர் ஸ்பெஷலாய் மா மரமும் விளைச்சலுக்கு குறைவு வைக்கவில்லை. இந்த வருடம் தொடக்கத்தில் எக்கச்சக்க பூ பூத்து கிட்டதட்ட ஐநூறு பிஞ்சுகளாவது வந்திருக்கும். வெயிலின் தாக்கமா என்னவென்று தெரியவில்லை. என்பது சதவீதம் உதிருந்து கடைசியில் ஒரு அறுபதில் இருந்து எழுபது மாங்காய் தான் தேறியது. பழம் ஒவ்வொன்றும் குறைந்தது அரைகிலோ இருக்கும் என்பதால் ஐம்பது காய் பறித்தாலும் நமது கோடை மாம்பழம் தேவை பூர்த்தி ஆகிவிடும்.

தக்காளி, வெண்டை, கொத்தவரை, புடலை காய்த்து ஓய்ந்து விட்டது. கத்தரி மட்டும் இன்னும் ஓரிரு மாதங்களுக்கு விளைச்சல் கொடுக்கும். கரணை கிழங்கும், சிறு கிழங்கும் விளைய இன்னும் கொஞ்சம் நாட்கள் ஆகும்.

மாடியில் இருந்து நூல்கோல், முள்ளங்கி, கீரை என்று கிடைத்துக் கொண்டிருந்தது.

இந்த சீசனில் விளைச்சலுக்கு முக்கிய காரணம் நான் அமைத்த மேட்டுப்பாத்தியும் அதில் எருவும், இலைசருகும் கலந்து போட்ட ஊடகமும் தான் என்று நினைக்கிறேன்.

அதிக விளைச்சலால் முதன் முதலாய் விளைச்சளில் கிடைத்த காய்கறிகளை அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு விற்றோம். வீட்டுத் தோட்டத்தில் இருந்து கொடுப்பதால் நிறையவே டிமான்ட் :). காய்கறி விலையும் உச்சத்தில் இருந்ததால் விற்றதில் கிட்டதட்ட ரூ.800 கிடைத்திருக்கும். வீட்டில் சந்தையில் வெங்காயம் போன்ற இதர பொருட்களை வாங்க அதை பயன்படுத்திக் கொண்டார்கள். மொத்தத்தில் கடந்த இரண்டு மாதங்களாக காய்கறியே வாங்க அவசியம் இல்லாமல் போனதில் பெரிய வெற்றி தான்.

12345678910111213

மாடியில் பேபி/ஸ்வீட் கார்ன்

c1c2c3c4

 

சம்மர் ஸ்பெஷல் 

m1m2m3m4

 

Advertisements

43 thoughts on “மீன் அமிலம் மற்றும் சீசன் விளைச்சல்

 1. ப்பா….அற்புதம் போங்க…..

  மாடி தோட்டத்தில் நீங்க டிகிரி….

  நாங்கல்லாம் நாலாங்கிலாஸ்…..

  வெறுமனே செடியையும்….
  விளைச்சலையும் பார்த்து விட்டு…எனக்கும் என மனம் ஆசைப்படுகிறது….

  ஆனால் அதற்கான கட்டமைப்பு…. செலவீனங்கள்…..

  வருவாயை மட்டும் எதிர்பார்ப்பவர்களால் இத்தனை தூரம் இறங்க முடியாது…..

  உங்களின் சம வயதுக்காரனான நான் நாட்டு நடப்போடு தொடர்பிலேயே இருப்பவன்தான்…..

  (பல்வேறு ஊடகங்கள் வாயிலாக)…..

  வீட்டு தோட்டத்திற்காக இத்தனை யோசித்து….

  அதன் கட்டமைப்பிற்காக
  பணத்தையும்..நேரத்தையும்..உழைப்பையும்…செலவிடும் வேறு தனி நபர் யாரைப் பற்றியும் இதுவரையில் நான் கேள்விப்படவில்லை….

  வாழ்க வளமுடன்……

  தோட்ட உபகரணங்கள் பற்றிய பதிவை விரைவில் எதிர்பார்க்கிறேன்…..

  Like

  • நன்றி சுரேஷ்.

   உங்கள் கமெண்ட் இணையத்திலேயே போட முடிகிறதா? நன்று.

   என்னை விட இன்னும் மாடித் தோட்டத்தில் நேரம் செலவிடுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். நமக்கு அது முதன்மை பொழுது போக்காக இருக்கும் வரை போகும் தூரம் என்று ஓன்று இங்கு இல்லை. போய் கொண்டே இருக்க வேண்டியது தான் 🙂

   நீங்களும் சொந்தமாய் ஒரு இடம் அமையும் போது ஒரு புதிய உயரத்தை அடைவீர்கள். காத்திருங்கள்.

   கண்டிப்பாக தோட்ட உபகரணங்கள் பற்றி சீக்கிரம் ஒரு பதிவிடுகிறேன்.

   Like

 2. வணக்கம் சிவா,

  உழைப்பு, விடாமுயற்சி, ஆக்கபூர்வமான அணுகுமுறை, புதிய யுத்திகளை செயல்படுத்துதல்!
  அதற்கேற்றாற்போல் பலனும் கைமேல் உண்டு என்பதற்கு உங்கள் தோட்டத்திற்கு மிக நன்றாக பொருந்தும்! ஜூன் சீசன் க்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் சிவா!

  அன்புடன்,
  மதன்
  தி நகர்

  Like

  • நன்றி நண்பரே. கற்றுக்கொள்ள தோட்டத்தில் இன்னும் நிறைய இருக்கிறது. நமது சொந்த முயற்சிகள் தானே தோட்டத்தை சுவாரசியம் ஆக்குகிறது 🙂

   Like

 3. அன்பருக்கு…

  தங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.

  சென்றமுறை தாங்கள் பயன்படுத்திய பஞ்சகவ்யாவின் தாக்கம் தான் இப்போது நீங்கள் பெற்ற விளைச்சல்.

  மீன் அமிலம் பயிர் விளைச்சலை பெருக்கும். மற்றபடி செடிகளின் ஆதார தன்மை… வேரின் வலு மற்றும் வேரின் பரவல் போன்றன பஞ்சகவ்யா அல்லது அமுதக்கரைசல் மூலமே கிடைக்கும்.
  முடிந்த அளவு அவற்றையும் பயன்படுத்த முயற்சிக்வும்

  Like

  • இருக்கலாம் நண்பரே. வளர்ச்சி ஊக்கிகளை பொருத்தவரை நான் இதை தெளித்தால் இப்படி விளைச்சல் வரும் என்று முடிவு செய்வதில்லை. நீங்கள் கூறியது போல பஞ்சகாவ்யா, அமுத கரைசல் நாம் நீரில் கலந்து பாய்க்கும் போது செடிகளின் வேர் மற்றும் மண்ணின் உயிர் தன்மை பல மடங்கு அதிகமாகிறது.

   Like

 4. அருமை,அருமை,

  முயற்சி திருவினையாகியது.

  உழைப்பின் பலன் கண்டீர்,

  வாழ்க வளமுடன்.

  Like

  • நன்றி அக்கா 🙂 . உங்கள் வீட்டு தோட்டத்தின் விளைச்சல் எப்படி என்று பகிர்ந்து கொள்ளுங்கள்.

   Like

 5. அருமையாக வந்திருக்கிறது நண்பரே…

  எனக்கும் ஓரளவு நல்ல விளைச்சல்தான்…

  அடுத்த சீசனுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறேன் . நன்றி…..

  Like

  • நன்றி அண்ணா. உங்கள் ஜூன் சீசனில் புதிய முயற்சிகள் ஏதும் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

   Like

 6. nanum meen amilam ubayogithen nalla palan kidathathu anal ovvoruvar ovvoruvigitham sonnargal1:50, 1:10,1ltr water2ml , 1ltr 5mlamilam ippadi pala kelivipatten

  ithil ethu sari matrum sedimel thlikalama illai mannil utralama

  Like

  • நானும் கூகிள் செய்து பார்த்ததில் எல்லா அளவுகளிலும் சொல்கிறார்கள். பொதுவாய் தெளிக்க கொடுக்கும் அளவுகளில் நமக்கு சரி என்று படும் ஒரு அளவை எடுத்து கொள்ள வேண்டியது தான். பெரிதாய் யோசிக்க வேண்டியதில்லை. மீன் அமிலம் செடிகளில் தெளிக்க தான் பயன்படுத்துகிறார்கள்.

   Like

 7. enathu pothuvana kelvigal sila ingu

  1.thinamum neer utravenduma sedigaluku eg thotitil vaithathu,tharail vaithathu
  2.sedimel utravenduma illai mannil utravenduma
  3.media ready pannuvathu patri sonneergal anal vilainthu aruvadai seithapiragu marubadi athileye nadalama illai marubadium puthithaga set panna mathiri pannavenduma

  ivaanaithum enakum ennai pondravargalukaga pls sollunga

  Like

 8. oru pattiyal koduthal nalla irukum
  entha madham enna vithai vithaikalam matrum evvalavunal vilaichal ivai anaithum ore pathivil koduthal nalla irukumnu nan solren neenga enna solreenga

  Like

  • கணேஷ், உங்கள் பொதுவான கேள்விகளை எனக்கு உங்கள் மெயில் ஐடியில் இருந்து தனி மடலாய் அனுப்பினால் பதில் கொடுக்க எளிதாக இருக்கும்.

   Like

 9. Superb anna. have u tried amirthakaraisal?
  U have any idea about that,if so,plz guide us how many days we can use that after preparing amirthakaraisal.

  Like

  • நன்றி விவேக்.

   அமிர்த கரைசல் ஒரு முறை தெரிந்த நண்பர் ஒருவர் நாட்டு மாட்டின் சாணமும், கோமியமும் கொடுத்ததில் தயார் செய்து பயன்படுத்தினேன். அதன் பிறகு முயற்சிக்க வில்லை. அதனால் என்னிடம் விவரங்கள் இல்லை. உங்களுக்கு நாட்டு மாட்டின் சாணமும், கோமியமும் கிடைத்தால் செய்யலாம். கூகிள் செய்து பார்த்தாலே தயாரிக்கும் முறைகள் கிடைக்கும்.

   Like

 10. மதுரையில் மண்புழு உரம் , விதைகள், வேப்பம் புண்ணாக்கு

  குனசீலி ,மிஷின் காம்பௌண்டு , ஆண்டிபட்டி ,வாடிப்பட்டி தாலுகா , மதுரை மாவட்டம்
  போன் 938075 5629

  Like

 11. மாட்டு சாண உரம் 10 கிலோ 80 ரூ .
  அரசு தோட்டகலை பண்ணை ,மாதவரம் , சென்னை – 600 051.
  போன் : 044 -2555 333 / 94448 05265

  Like

  • தகவலுக்கு நன்றி கணேஷ். மற்ற நண்பர்களுக்கு இந்த தகவல்கள் நிச்சயம் பயன்படும்.

   Like

  • grow bags,cocopit,vermicompost,seeds ithelam madhavaram botanical garden la available ah Mr.Ganesh. If so then what is the cost of these ??

   Like

 12. Hai Siva sir.. Hats off to u.. Rempa porumai sir ungaluku. Unga thottathai parthal rempa poraamaiya eruku.. Great.

  En akka vettu thottathil kaai vara matingitham sir. Poo neraiya pookuthu but poo vilunthurutham. Ena seiyalam sir? Plz guide me

  Like

  • நன்றி சூரியா.

   நீங்கள் பஞ்சகாவ்யா, மீன் அமிலம் மாதிரி வளர்ச்சி ஊக்கிகளை தெளித்து வந்தால் காய் பிடிப்பதில் முன்னேற்றம் தெரியும். முயற்சித்து பாருங்கள்.

   Like

 13. அருமை சிவா சார்….நீங்க தான் எனக்கு ஒரு முன்னோடி. உங்களின் ஒவ்வொரு பதிவையும் படித்து விடுவேன். நான் சென்னையில் இருப்பதால் ஊருக்கு (மயிலாடுதுறை ) செல்லும் போதெல்லாம் சிறி சிறு முயற்சிகளாக செய்து கொண்டிருக்கிறேன். உங்களின் செயலும் ஆர்வமும் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. உங்களுடன் பேசுவதற்கு மிகவும் ஆர்வமாய் இருக்கிறேன். ஒரு சண்டே யில் உங்களுக்கு போன் செய்கிறேன். நிறைய சந்தேகங்கள் இருக்கிறது.
  வாழ்த்துக்கள் சிவா சார்.

  நன்றி
  ரமேஷ்

  Like

  • நன்றி ரமேஷ். எனது இந்த இணைய தளத்தில் நிறைய நேரம் செலவிட்டு இருப்பீர்கள் போல 🙂 . நன்றி. கண்டிப்பாக ஞாயிறு காலை அழையுங்கள். பேசலாம்.

   Like

 14. நான் மேட்டுப்பாளையத்தில் வசிக்கிறேன்.
  மாடி தோட்டம் அமைக்க ஆவலாக உள்ளேன்.அதற்கான பொருட்கள் வாங்க சில முகவரிகள் கொடுக்கிறீர்களா ?.

  Like

  • சுபிக்க்ஷா ஆர்கானிக் போய் வாங்கிக் கொள்ளுங்கள். (94433 83797 or 94422 12345).

   Like

  • மீன் அமிலம் தெளித்து செடிகள் கருகாது. வேறு ஏதும் பிரச்சனையாக இருக்கும். பாருங்கள்.

   Like

 15. I tried “MEEN AMILAM ” 2 TIMES…first time it was affected by fungus and the second time it was full of worms.. pls tell how to avoid this and get best results

  Like

 16. ஆசையிருந்தாலும் , இடவசதியில்லை. எனினும் உங்கள் படங்கள் மிகுந்த மகிழ்வைத் தருகிறது .

  Like

 17. சிவா Sir.. 4பேர் கொண்ட குடும்த்திற்கு எத்தனை வெண்டை, கத்திரி, தக்காளி,மிளகாய் செடி பயிரிட வேண்டும்????

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s