தோட்டம் 2.0 (பகுதி-2)

Part-1

ShadeNet அமைத்தல்

       ShadeNet பற்றி ஏற்கனவே ஓரளவுக்கு விவரங்கள் சேகரித்து வைத்திருந்தேன். பொதுவாக நிறைய பேர் 50% Shade தான் போடுகிறார்கள். இதை பொதுவாக எல்லா நர்சரிகளிலும் பயன்படுத்துகிறார்கள். செடி வளர்க மிக சிறந்ததாக இருக்கிறது (நர்சரிகளில் செடிகளை விளைச்சல் எடுக்கும் வரை வளர்க்க தேவை இல்லை).ஆனால் வீட்டுத் தோட்டம் என்று போகும் போது சிலர் 50% ShadeNet அமைத்தால் விளைச்சல் கிடைப்பதில்லை என்று கூறுகிறார்கள். காரணம் விளைச்சலுக்கு ஏற்ற வெயில் செடிகளுக்கு கிடைப்பதில்லை. அதனால் 35% Shade சிறந்ததாக இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். இதற்கு குறைவாக மார்க்கெட்டில் இருப்பதாக தெரியவில்லை.  அதற்கும் குறைவாக போனால் காற்றை கட்டுப்படுத்துவத்தில் பிரச்சனை வரலாம் (மொத்த காற்றும் ShadeNet-ஐயும் தாண்டி அடிக்கும்).

இங்கே விஜயன் அண்ணன் (Fabtech Engineers) மாமாவே ShadeNet விற்பனை நிறுவனம் வைத்து நடத்துகிறார்கள். இதுவும் தெரிந்த வட்டத்திலேயே அமைத்ததால் எளிதாக போய்விட்டது. எவ்வளவு பெரிய ShadeNet வேண்டுமென்றாலும் தைத்து வாங்கிக் கொள்ளலாம். நாங்கள் மொத்தமாய் இரண்டு, மூன்று துண்டுகள் வைத்தே ShadeNet அமைத்து விடலாம் என்று திட்டமிட்டோம். மொத்த கட்டமைப்பும் தயாரானதும், சுற்றளவை அளந்து போய் ஆர்டர் செய்து அடுத்த நாளே வாங்கி வந்துவிட்டோம். அதை வைத்து கட்ட UV Treated Thread-ம் அவரிடமே வாங்கிக் கொண்டோம்.

ShadeNet வைத்து கட்ட ஒவ்வொரு பக்கத்திலும் தேவையான அமைப்புகளை தொடக்கத்திலேயே அமைத்து வைத்திருந்தோம். தைத்து வந்த ShadeNet-ஐ கட்ட வேண்டியது தான் பாக்கி. ஒரு பக்கம் சுற்றி நன்றாக கட்டி, அப்படியே இழுத்து அடுத்த பக்கம் கட்டிவிட்டால் முடிந்தது. இதற்கென்று தனியாக யாரையும் வேலைக்கு அமர்த்தவில்லை. FabTech Engineering பசங்களே செய்து கொடுத்து விட்டார்கள். பக்காவாக அமைத்துக் கொடுத்தார்கள். இடை இடையே காற்று ஏதும் ShadeNet-ஐ தூக்காமல் இருக்க கம்பிகளை ShadeNet-டோடு இணைத்து Tag அடித்து விட்டோம்.

Painting

கட்டமைப்புக்கு பெயிண்டிங் வேலையை கூட FabTech Engineering பசங்களே செய்து கொடுத்துவிட்டார்கள். என் வீட்டிற்கும் பச்சை நிறம், மாடியில் குடோன் அறைக்கு அமைத்த Sheet-ம் மேட்ச்-ஆக பச்சை நிறமாகவே அமைத்தோம். ShadeNet-ம் பச்சை. உள்ளே கட்டமைப்புக்கும் பச்சை நிறம். பைகளும் பச்சை நிறம் எங்கும் பச்சை நிறமே.. பச்சை நிறமே தான் 🙂

டிசைன் போடும் போதே இந்த கட்டமைப்பால் வீடு பார்க்க வித்தியாசமாய் ஏதும் ஆகிவிட கூடாது என்று நினைத்தோம். விஜயன் அண்ணனும் ஒவ்வொரு விஷயத்தை செய்யும் போதும், வீட்டோட லுக் நன்றாக வரவேண்டும் என்று சொல்லியே செய்வார்கள். நான் கேட்ட சில அமைப்புகளை வேண்டாம் என்று சொல்லி அமைக்காமல் விட்டுவிட்டோம். எல்லாம் முடிந்த பிறகு தோட்டமும், வீடும் ஒருங்கே பார்த்தால் அருமையாக வந்திருக்கிறது.

m1m2m3m4m5

பந்தல் அமைப்பு

நான் முதலில் கூறிய மாதிரி குடோனை ஒட்டி இருக்கும் பகுதியை கொடி அமைக்க சில கம்பி சட்டம் மட்டும் அமைத்து அப்படியே விட்டுவிட்டோம். அதன் மேல் பெரிய மூங்கில் கம்பு வாங்கி, பிளந்து தப்பையாக மாற்றி பந்தல் அமைத்து விட்டேன். இந்த பந்தலின் அளவு 20 அடி நீளம், 10 அடி அகலம். மூன்றில் இருந்து நான்கு கொடிகள் வரை விட முடியும் என்று நினைக்கிறேன்.

p1p2p3p4p5

Lighting

இரவிலும் நல்ல வெளிச்சமாக இருக்குமாறு Lighting அமைக்க திட்டமிட்டிருந்தேன். ஏதும் சின்ன தோட்ட வேலைகளை கூட பொழுது சாய்ந்தால் கூட செய்து கொண்டிருக்கலாம். வயரிங் வேலை ஆரம்பிக்கும் போது LED light மாதிரி அமைக்கலாம் என்று ஒரு ஐடியா கொடுத்தார்கள். எனக்கு LED light-ன் பவர் பிடிப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் ரொம்ப பிரகாசமாக இருக்கும். மொத்த இடத்திற்கும் வெளிச்சம் ஒரே மாதிரி காட்டுவதில்லை. அதனால் வழக்கமான Tube Light வைத்தே அமைத்து விட்டோம். குடோனுக்கு ஓன்று, தோட்டத்திற்க்கு நான்கு என்று மொத்தம் ஐந்து. இந்த வெளிச்சத்தில் இரவில் தோட்டம் ஜொலிக்கிறது.

light

 

Storage Area:

காயர் பித், நர்சரி ட்ரே மற்றும் இதர தோட்டம் பொருட்களை மாடியில் வைக்க கிட்டத்தட்ட இரண்டு அறைகளை சேர்த்தால் வரும் இடத்தை கொண்டு ஒரு சேமிப்பு கிடங்கு. மூன்று அடுக்குகளாய் இரும்பு சட்டம் அமைத்து, அதில் துரு பிடிக்காத metal தட்டுகளை பொருத்தி அமைத்தார்கள்.

s1s2s3s4

 

Grow bag racks:

மாடித் தோட்டத்தின் செடி வளர்க்கும் பகுதியில், சுற்றி இரண்டு அடுக்காக சட்டம் அமைத்து அதில் வளர்ப்பு பைகளை வைக்கலாம் என்று திட்டம். இதன் மூலம் குறைந்த இடத்தில் நிறைய பைகள்/செடிகள் வைக்க முடியும். இதை ஒரு step மாதிரி (கொலு அமைப்பில்) அமைக்கலாம் என்றார்கள். நான் இன்னும் கொஞ்சம் இடம் சேமிக்கலாம் என்று, ஒன்றின் மேலே ஓன்று வருவது மாதிரியே அமைக்கலாம் என்று, அதன் படியே அமைத்தோம். கீழ் அடுக்கில் வைக்கும் செடிக்கு உச்சி வெயில் ஒரு இரண்டு மணி நேரம் கிடைக்காது. மற்ற படி ஒரு ஆறு மணி நேரம் வெயில் கிடைக்கும் (அமைக்கும் சட்டம் வடக்கு-தெற்கு பக்கமாய் இருக்கும் பட்சத்தில்). கீழே உள்ள அடுக்கை இன்னும் கொஞ்சம் கீழே இறக்கி வைத்திருக்கலாம். சில பிரச்சனைகள் இருந்ததால் இன்னும் கீழே இறக்க முடியவில்லை. மேல் அடுக்கை பைகளை வைத்து கையாளுவது கடினமாகி விடும் என்பதால், அதற்கு மேல் உயர்த்த வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.

கீழ் அடுக்கு இடைவெளி குறைவானதால் அதில் உயரம் குறைவான பைகளை வைத்து கீரைகளை வளர்க்கவோ, நர்சரி ட்ரே வைத்து நாற்று எடுக்கவோ பயன்படுத்திக் கொள்ளலாம். பெரிய செடிகளை வளர்க்க முடியாது. நான் கீரைகளை கீழ் அடுக்கில் மட்டும் வைத்து விளைச்சல் எடுக்க பைகளை அமைத்து இருக்கிறேன்.

மேல் அடுக்கில் கத்தரி, தக்காளி மாதிரி செடிகளை வளர்க்கலாம். சொல்லப்போனால் இதை மூன்றடுக்காக கூட பயன்படுத்தலாம். மாடி தரை தளத்தில் ஒரு அடுக்கு பைகளை வைத்து கொள்ளலாம். அதற்கும் நான்கு மணி நேரம் நல்ல வெயில் கிடைக்கும். கீரை, முள்ளங்கி மாதிரி அதில் வைத்து பார்க்கலாம்.

rac1rac2rac3rac4rac5

 

Hooks

 மேலே பூத்தொட்டிகள் ஏதும் தொங்க விட சில இடங்களில் கொக்கி அமைப்புகள் சிலவற்றை அமைத்தோம். அழகாய் பூந்தொட்டிகள் வாங்கி, பூச்செடிகள் உருவாக்கி தொங்க விட்டால் தோட்டம் அழகாக தான் இருக்கும். பிறகு நேரம் கிடைக்கும் போது முயற்சிக்க வேண்டும்.

hook

 

Big trays

 முக்கிய தோட்டப் பகுதியில் (மாடியின் தளம்) வெறும் வளர்ப்பு பைகளாக அடுக்கி செடி போடுவதை விட, கொஞ்சம் பெரிய பைகளாக அமைத்தால் (ஒரு பாத்தி அளவுக்கே) இடத்தை இன்னும் சரியாக பயன்படுத்தலாம் என்று தோன்றியது. இரும்பில் சட்டம் செய்து, அதில் பெரிய பைகளை அதில் வைத்து, வளர்ப்பு ஊடகத்தை நிரப்பி விட்டால் நமக்கு மாடியிலேயே பெரிய பாத்தி தயார். இங்கே சிறுதுளி சென்டரில் அது போல பார்த்திருக்கிறேன். விஜயன் அண்ணனிடம் (FabTech Engineering) பேசிப் பார்த்த போது பைகளை முதலில் தயார் செய்து அதற்கேற்றார் போல சட்டம் அமைத்துக் கொள்ளலாம் என்றார்கள். அர்ஜுன் சாரிடம் (சுபிக்க்ஷா ஆர்கானிக்) பேசி 3 அடி X 5 அடி அளவில் (1 அடி உயரம்) செவ்வகமாய் 12 பைகள் செய்து அதற்கேற்றார் போல இரும்பில் சட்டம் செய்தோம்.

3 அடி X 5 அடி எனும் போது மொத்தம் 15 சதுர அடி பரப்பு வரும். அடிக்கு ஒரு செடி என்றாலும் குறைந்தது பதினைந்து செடிகள் ஒரே பையில் வளர்க்க முடியும். 12 பைகள் எனும் போது மொத்தம் 150 செடிகள் வளர்க்கலாம். இதையே தனி தனி பையில் என்றால் 80 பைகளாவது தேவைப்படும். பராமரிப்பதும் கடினமாக இருக்கும். இது பெரிய பாத்தியாக இருப்பதால் உரம் போடுவது, கிளறி விடுவது எளிதாக இருக்கும். நீருற்றும் நேரமும் நிறைய மிச்சமாகும். தோட்டமும் ஒரு அமைப்பாக தெரியும். இந்த இருப்பு சட்டம் கொஞ்சம் விலை அதிகம் என்றாலும் (உறுதியாக செய்ததால் ஒவ்வொன்றும் சராசரியாக Rs.3000 ஆகும்), எத்தனை வருடம் ஆனாலும் பைகளை மட்டும் மாற்றி இதை நிரந்தரமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதில் சில ட்ரே மட்டும் தயார் செய்து செடிகளை வைத்து விட்டிருக்கிறேன். இதற்கு காயர்பித் தயார் செய்து நிரப்புவது பெரிய வேலை. என்னுடைய வழக்கமான முறை இதற்கு ஆகாது (ஒவ்வொன்றாய் உடைத்து பக்கெட்டில் போட்டு அலசுவது) என்று ஒரு பெரிய தண்ணீர் ஊற்றும் டிரம் (300 Liter) வாங்கி, மொத்தமாய் நான்கு காயர் பித் கட்டிகளை போட்டு ஒரு காய்கறி அலசும் சல்லடை ஓன்று வாங்கி அதை வைத்து அள்ளி போட்டு நிரப்பி விடுகிறேன். வைத்த செடிகள் எல்லாம் இந்த கோடையிலும் அருமையாக வந்து கொண்டிருக்கிறது.

o1tr1tr2tr3tr4tr5tr6

(தொடரும்)

Advertisements

51 thoughts on “தோட்டம் 2.0 (பகுதி-2)

 1. Really wonderful Siva. Niraya plan panni romba kachidamaga panniyirukinga. Naan Coimbatorela irundha kandipa ungaladhu veetuku oru visit adichirupen.. ungaladhu terrace garden planum ungaladhu thelivana vilakamum our arumaiya referral material.

  Like

  • Thanks Madam for your nice words.
   You can plan a visit to Coimbatore or tell me if you happen to visit Coimbatore. We can plan a garden visit 🙂

   Like

   • Sure Siva. Ungaladhu seed tray medium patri konjam solungalen. Few times I tried capsicum and chilly and did not sprout but when I threw my medium into soil it sprouted. I used coco peat and vermicompost mix.

    Like

    • seed tray medium பற்றிய ஒரு வீடியோ தொகுப்பு கொடுத்திருக்கிறேன். பாருங்கள்.

     நானும் காயர் பித் மற்றும் மண்புழு உரம் கலவை மட்டும் தான் பயன்படுத்துகிறேன். எந்த பிரச்னையும் இல்லை. எல்லா விதைகளையும் அதில் தான் விதைக்கிறேன். தினமும் நீருற்ற வேண்டும். நல்ல வெயிலில் இருக்க வேண்டும். வீடியோ பாருங்கள். ஏதும் சந்தேகம் இருந்தால் சொல்லுங்கள்.

     Like

  • Not sure about the timing. Let me check. I don’t think you can attach any image in comment. If you have anything to share with me, you can mail me.

   Like

 2. Arumayana work sir neata plan panerkeenga model terrace garden ippadithan itrukanum, avasarapattu work pannama nidhanama nalla pannerkeenga weldon sir

  Like

  • Thanks Madam. It took almost 3 months to get this completed (excluding the time I spent on planning and putting some design on what I need). With proper execution by fabtech engineers, everything was done exactly how we planned. Now it is time to experiment in my new garden to get some good yield 🙂

   Like

 3. Hi Siva,

  Really excellent and splendid job, professional work and master plan. Photo looks great, after this your home looks great view with the matching colour you hove chosen. Interior also very good, each & every one was well planned, i could feel how much effort you have taken to get this result. My long term plan you have executed with your own idea. I want to see your garden, really after seeing this tempting me to visit Coimbatore.

  Please share how much total cost for this, will be very helpful for others as well as me too. I am planning to make shade net like this on my terrace.

  Rgds
  Rajesh.

  Like

  • Thanks a lot Rajesh. Please let me know if you happen to come to Coimbatore. Will definitely plan for a garden visit 🙂

   Regarding cost, I am not sure how much it will help as most of the things are done with little extra (over done 🙂 than required. My plan is to have this set-up undisturbed atleast for next 10 years and considering the durability most of the things were done with little extra cost. If we wanted to do some basic set-up, the cost might greatly reduced. Let me check and try to give some cost figure

   Like

 4. மிகவும் அருமையாக இருக்கிறது சிவா… ஒவ்வொரு அமைப்பிலும் உங்கள் திட்டமிடுதல் நன்றாக உள்ளது.

  நல்ல முயற்சி வாழ்த்துக்கள் .

  Like

 5. அருமை..அருமை.. இயற்கையன்னையின் ஆசிகள் பரிபூரணமாக உமது தோட்டத்திற்கு

  கிடைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  தெளிவான திட்டமிடல்,சரியான செயல்பாடு, உமக்கு வெற்றி நிச்சயமையா.

  விளைச்சலையும் எடுத்து பதிவுசெய்து விட்டீர்களானால் California gardening

  தோற்றதுபோங்கள்.

  செடிகளையும்,அதன் பராமரிப்பு மற்றும் விளைச்சலையும் கான ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  Like

  • // உமக்கு வெற்றி நிச்சயமையா// 🙂 மிக்க நன்றி மேடம். மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பது மாதிரி தான். சில செடிகளின் விளைச்சல் இந்த கோடையிலும் நன்றாகவே இந்த நிழல் வலையில் வந்து கொண்டிருக்கிறது. சீக்கிரம் விளைச்சல் எடுத்து பதிவு செய்து விடலாம் 🙂

   California gardening என்று தேடி பார்த்தபோது ஒரு youtube channel கிடைத்தது. அதை தான் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அருமையாக இருக்கிறது. நிறைய கற்றுக்கொள்ளலாம் போல. நானும் பார்க்கிறேன். நீங்களும் நிறைய explore செய்கிறீர்க்ள. அருமை.

   Like

  • நன்றி நண்பரே

   சங்கர் படம் என்றால் இன்னும் கொஞ்சம் பெயின்ட் அடிக்கணும் 🙂

   Like

   • புதிய முயற்சி ஒன்றும் இல்லை.திருச்சியில் வெயில் அதிக அளவு இருப்பதாலோ என்னவோ தெரியவில்லை பூக்கள் அனைத்தும் கருகி காய்ப்பது இல்லை.கீரைகள் ஓரளவு பயன் தருகிறது. ஒட்டு மொத்ததில் எதிர் பார்த்த அளவு பலன் இல்லை.ஆனாலும் விடுவதாக இல்லை.

    Like

    • ஆமாம். ஜூன் வரை கொஞ்சம் தோட்டத்திற்க்கு ஓய்வு கொடுப்பது நல்லது அண்ணா.

     Like

 6. Very nice garden setup and come up very well siva. Very soon i will come and congrates you for your great work in person.

  N.Gopal

  Like

  • Thanks Anna. Waiting for your visit to Coimbatore. Please mail me once you are planned. Also share your recent garden photos and sharenet work also.

   Like

 7. Excellent , what is the total square feet and how much it cost. planning for shaded net on my terrace garden, few people says with fully covered shaded net pollunation will not happen.

  Like

  • The total sq including the storage area is around 700 Sq. Feet. Regarding cost, I am not sure how much it will help as I did lot of things which will not give a clear picture of cost for setting up a garden. Let me check and will try to share some details.

   You are right. Pollination might be challenging if it is completely closed. As of now, my garden still has lot of opening (in the storage room area) and few butterfly also comes inside. Need to check during flowering season once i have the complete garden and do something (providing more opening) if pollination has to be improved.

   Like

 8. நண்பர் சிவா அவர்களுக்கு முதலில் என் வாழ்த்துகள். அடுத்ததாக இதை நீங்கள் நினைத்த மாதிரி செய்து கொடுத்த FabEngg team க்கு என் வாழ்த்துகள் .

  அழகான, நேர்த்தியான வடிவமைப்பு. உங்கள் முன்று அடுக்கு சுற்று அமைப்பு எனக்கு மிகவும் பிடித்தது ஒன்று. ஒரு ஒரு அடுக்கும் எவ்வளவு உயர இடைவெளி என்று தெரியபடுத்தவும் , அதேமாதிரி சுற்று அடுகின் அகலம் எவ்வளவு என்றும் தெரியபடுத்தவும் .

  மாடியின் நடுவில் வடிவமைத்துள்ள 3x5x1 அமைப்பு அருமை, நானும் முயற்சிக்க வேண்டும் .

  வலை அமைப்பின் மோத்த உயரம் எவ்வளவு என்று கூரவும்.

  சில வேண்டுகோள்:
  1) எந்த கட்டமைப்பு (முக்கியமாக அளவுகள் ) குறித்து அடுத்த பகுதியில் எழுதவும்

  2) உங்கள் வலை தல நிழல் படங்கள் ஒரு கட்டத்துக்குள் வருவதால் முழுமையாக பார்த்த ஒரு உணர்வு வரவில்லை. முடிந்தால் அதை முழு படமாக பார்க்க வழிவகுக்கவும்

  3) அதே போல் நிழல் படங்களை கொஞ்சம் “high resolution” il முடிந்தால் பதிவு செய்யவும் . என்னை போன்றவர்களுக்கு நுணுக்கமாக பார்க்க வசதியாக இருக்கும்

  4) மாடி தோட்டத்தின் முழு நிழல் படம் சிலவற்றை பகிரவும்

  5) இந்த ஆடி பட்டத்துக்கு என்ன என்ன காய் கறிகள் விதிக்கலாம் என்று கூரவும் .

  Like

  • மிக்க நன்றி நண்பரே.

   வலை அமைப்பின் மொத்த உயரம் பத்து அடி (நடுவில் பத்து அடி, ஓரங்களில் ஒரு அடி குறைவு). பந்தல் விட வசதியாக இந்த உயரம் வைத்தேன். மற்ற அளவுகள் ஏதும் பெரிதாய் அறிந்து கொள்ளவில்லை (நட்பின் அடிப்படையில் அமைத்ததால்). உங்களுக்கு குறிப்பிட்ட ஏதும் விவரம்/அளவு வேண்டும் என்றால் கூறுங்கள்.

   முழு நிழல்படம் என்றால் புரியவில்லை. சுற்றிலும் வலை அமைத்துவிட்டதால் இதற்கு மேல் கேமரா வியூ கிடைப்பதில்லை. high resolution போட கொஞ்சம் யோசனையாக இருக்கிறது. இதனால் வலைப்பக்கம் லோட் ஆக நேரம் எடுக்கலாம். தவிர hosting-ல் எவ்வளவு space/plan என்றும் பார்த்து திட்டமிட வேண்டும். சில முக்கிய படங்கள் வேண்டும் என்றால் போடலாம். இல்லாவிட்டால் Photo Gallery-ல் இதை ஒரு தொகுப்பாக போடுகிறேன்.

   ஆடி பட்டம் என்று பட்டம் பார்த்து பெரிதாக நான் விதைப்பதில்லை. கிடைக்கும் அத்தனையையும் போட்டு விடுவேன். கோடை என்றால் (தை பட்டம்) தர்பூசணி, முலாம்பழம் மாதிரி கூடுதலாக சேர்த்துக்கொள்ளலாம். ஆடிப் பட்டம் என்றால் முட்டை கோஸ், காலி ஃப்ளவர், கேரட் மாதிரி ஆங்கில காய்கறிகளை சேர்த்து கொள்ளலாம்.

   Like

 9. மாடி தோட்டம் அருமை
  எனக்கும் மிகவும்ஆர்வம் அதிகம்
  நான் இருந்தது வாடகை வீட்டில் அதனால் செய்ய முடிய வில்லை
  இப்போது தான் வீடு கட்டி விட்டு 2 மாதம் ஆயிற்று
  ஆர்வமாக அங்கு இங்கு என்று தேடி
  ஒரு நர்சரியில் 3000 ரூ என்று 20 சட்டி பிளாஸ்டிக் + சிமென்ட் சட்டியில் காய்கறிகள் செடி விதைகள் வைத்து கொடுத்தார்
  15 days achu
  My wife kku than Ithil viruppam thuliyum illai support kku yaarum illai enru irunthen
  Yesterday net la Unga post parthen santhosamaka irukiradhu

  Like

  • Hi Syed,

   உங்கள் புதிய தோட்டத்திற்கும் உங்கள் முயற்சிகளுக்கும் வாழ்த்துகள். வெளியில் இருந்து வந்து தோட்டம் அமைத்து கொடுத்திருக்கிறார்கள். முடிந்த அளவுக்கு நீங்கள் இனி களத்தில் இறங்கி கற்றுக்கொண்டு தொடருங்கள்.

   நீங்கள் நல்ல விளைச்சல் எடுத்து காட்டுங்கள். வீட்டின் ஆதரவு தானாக வரும் 🙂

   Like

 10. வணக்கம்.
  அருமையான முயற்சிகள்.
  வாழ்த்துக்கள்.

  Like

 11. Looks awesome, Sir!! I have visited your garden couple of years back. We have just started gardening now with tomatoes, coriander, brinjal, table rose and vendhaya keerai. All are doing fine so far 🙂 🙂
  Between, how much is the expense for this complete design in the terrace and the cost of bamboo shed in the front? 🙂

  Like

  • Hi, The complete work is done by my family friend and we didn’t workout much on the budget/cost. Approx it is little over a lakh 🙂 including the terrace garden, the storage room, the front arrangement (where I have grapes). But you can plan to do it within 30 – 50 thousand also if you customize it as per your need.

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s