தோட்டம் 2.0 (பகுதி-1)

தோட்டம் இணையதளத்தை ஒரு புதிய தளத்தில் ஆரம்பித்த கையோடு தோட்டத்தையும் ஒரு புதிய தளத்திற்கு மாற்றி அமைத்திருக்கிறேன். இது ஒரு நீண்ட பயணமாகவே இருந்தது. அதை சில தொடர்களாக உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

ஐந்து வருடங்களுக்கு முன் கோவை வந்து நான் தோட்டம் தொடங்கிய மாடித் தோட்டம்  பெரிய அளவில் பேசப்பட்டது கிடையாது. எனக்கு தெரிந்த தோட்டம், தரையில் ஒரு பாத்தியை பிடிப்பது, விதைப்பது, அறுவடை செய்வது. அவ்வளவே. காலி இடம் நிறைய இருந்ததால் மாடியில் செடி வளர்க்க அவசியமும் வரவில்லை. 2014-ல் இருந்து தான் மாடித் தோட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. மாடியில் போட்டால் தான் அது வீட்டுத் தோட்டம் என்று மக்கள் நினைக்கும் அளவுக்கு விளம்பரங்களும், பயிற்சி வகுப்புகளும் ஆரம்பித்தன. நானும் இன்னும் கொஞ்சம் செடிகள் வளர்க்கலாம் என்று கற்றுக்கொள்ள ஆரம்பித்து ஓரளவுக்கு நன்றாகவே போய்க்கொண்டிருக்கிறது.

மாடித்தோட்டம் என்றால் மக்களுக்கு வரும் முதல் கேள்வி கண்டிப்பாக ShadeNet அமைக்க வேண்டுமா? என்பது தான். 36 வயதினிலே மாதிரி படங்களும் ShadeNet-க்கும் மாடித் தோட்டத்திற்கும் நெருங்கிய பந்தம் இருப்பதாகவே காட்டுகிறது. இன்னும் சில பேர், ShadeNet போட்டால் கீழே வீடு சும்மா ஏ.சி போட்ட மாதிரி குளுகுளுன்னு ஆகிரும்னு நெனைச்சி 50% Shade கூட வேண்டாம், முடிஞ்சா 90% Shade போடுங்க என்று அறிவியல் புரியாமலேயே தோட்டம் போட்டு வைக்கிறார்கள்.

நான் ShadeNet அமைக்க ஒரே காரணம் காற்று தான். இங்கே சில சீசன்னில் அடிக்கும் காற்று நம்மையே தள்ளிவிட்டு விடும். என் வீட்டை சுற்றி பின்னால் வெறும் காலி இடம் தான். பச்சை தென்னை ஓலையையே எதிர்திசையில் திருப்பி ஒடித்து தூக்கி தூர போட்டுவிடும் காற்று. உயரமாய் வரும் செடியோ (வெண்டை, கொத்தவரை மாதிரி), கொடியோ போட முடியாது. ஒருமுறை ஒரு சிமெண்ட் தொட்டியில் காங்ரீட் கலவை எல்லாம் போட்டு, புதிதாய் சவுக்கு கம்பு எல்லாம் வைத்து, அதில் ShadeNet எல்லாம் கட்டி கொடி போட முயற்சித்து, எல்லாவற்றையும் பிடுங்கி மூஞ்சிலேயே வீசி விட்டது. காற்றோடு போராட முடியாமல் தான் இவ்வளவு பெரிய ஏற்பாடு. சுற்றிலும் வீடு, காற்று பிரச்னை இல்லை என்றால் தாரளமாக ShadeNet இல்லாமலேயே மாடித்தோட்டம் அமைக்கலாம்.

வெயில் அதிகம் என்பது ஒரு பிரச்னையே இல்லை. செடி எவ்வளவு வெயில் படுகிறதோ, அவ்வளவு நன்றாக வரும். இரண்டாம் மாடி வரை ShadeNet இல்லாமலேயே தோட்டம் அமைக்கலாம். கோடையில் மட்டும் நீருற்றுவதில் தனி கவனம் தேவைப்படும். சிலர் ShadeNet அமைத்து விளைச்சல் சரியாக இல்லை என்று போட்ட ShadeNet-ஐ எடுத்து விட்டிருக்கிறார்கள். அது உண்மை தான். அதிகமாக நிழல் ஏற்படுத்தினால் (50% Shade-ம் அதற்கு மேலும்) செடி மட்டும் பச்சை பசேல் என்று வரும், விளைச்சல் வராது.

அமைக்கப் போகும் தோட்டத்தில் வெறுமனே ShadeNet அமைப்பது மட்டும் இல்லாமல், என்னவெல்லாம் மாடியில் கொண்டு வரமுடியுமோ அதையெல்லாம் அமைக்க திட்டமிட்டேன் (கொஞ்சம் பெரிய பட்ஜெட் தான் 🙂 )

  • தோட்டம் பொருட்களை எல்லாம் மாடியில் வைக்க ஒரு குடோன்
  • மாடியில் கொடி வகைகள் போட பெரிய பந்தல் அமைப்பு
  • பைகளை இரண்டு அடுக்காக வைத்து குறைந்த இடத்தில் அதிக செடிகள் வளர்ப்பது (தரையையும் சேர்த்து மூன்று அடுக்கு பைகள்)
  • பெரிய அளவில் பைகள் வைத்து செடிகள் வளர்ப்பது (பெரிய பாத்தி அளவில்)
  • பூச்செடி தொட்டிகள் தொங்க விட (hanging baskets) அமைப்பு

இப்படி சில திட்டங்களோடு தொடங்கினேன்.

பொதுவாய் மாடித்தோட்டம் அமைத்து கொடுப்பவர்கள் sq.feet கணக்கில் தான் செலவை கணக்கிடுகிறார்கள். ஆனால் அது அப்பார்ட்மென்ட் மாதிரி sq.feet கணக்கு இல்லை. Running sq.feet என்று சொல்லப்படுகிற, ஐந்து பக்கமும் (சுற்று நான்கு பக்கம், மேல் பக்கம்) சேர்த்து மொத்தமாய் கணக்கு எடுத்து அதில் sq.feet இவ்வளவு என்று வாங்குகிறார்கள். அதனால் கேட்கும் போது sq.feet முப்பது ரூபாய் என்றால், நாம இருநூறு sq.feet (10 X 20) இடத்தில் செய்தால் வெறும் Rs.6000 ரூபாய் தானே வரும் என்று நினைக்கக் கூடாது.  இருநூறு sq.feet இடம் என்பது அவர்கள் கணக்கில் கிட்டதட்ட 700 sq.feet வரும். செலவு ரூ.21,000 வரும். ஒரு இன்ச் உருண்டை பைப் கொண்டு நான்கு மூலையிலும் வைத்து, ShadeNet-ஐ சுற்றிவிட்டு போய்விடுவார்கள். அடுத்த நாள் காற்று எல்லாவற்றையும் சுருட்டி என் வீட்டு  முற்றத்தில் போட்டுவிட்டு போய்விடும்.

எனக்கு தேவை, ரொம்பவே உறுதியாக கட்டமைப்பு. இதை டிசைன் போட்டு, வெளியே கொடுத்து செய்ய யோசனையாக இருந்தது. இப்போதெல்லாம் தெரியாத ஆளுங்களை வைத்து வீட்ல ஒரு தண்ணீர் பைப் மாட்டுவதற்குள் நம்மை சோதித்து விடுகிறார்கள். இவ்வளவு பெரிய வேலையை எல்லாம் கொடுத்து வாங்குவதற்குள் நம் கண்ணில் தண்ணி வந்துரும். இங்கே எனது நெருங்கிய குடும்ப நண்பர் ஒருவர் இன்ஜினியரிங் தொழிற்சாலை (Fabtech Engineering) ஓன்று நடத்தி வருகிறார். தொழிற்சாலைகளுக்கு engineering structural work அமைப்பது போன்று பெரிய அளவில் செய்து வருகிறார். அண்ணனிடமே எனது டிசைனை கொடுத்து கேட்டுப் பார்த்தேன், வீட்டுத் தோட்டம் அளவில் செய்து கொடுப்பார்களா என்று ஒரு சந்தேகத்தில். சில வேலைகளை முடித்து விட்டு இரண்டு வாரத்தில் ஆரம்பிக்கலாம் என்றார். அதன்படி டிசம்பர் 23-ல் ஆரம்பித்தோம் (ஆமாம். போன வருஷம் தான்.. 🙂 ). மொத்தம் இரண்டு மாதம் எடுத்துவிட்டது. இந்த வாரம் வரை சின்ன சின்ன வேலைகள் போய் கொண்டு தான் இருக்கிறது).

எனது டிசைன் இது தான். மாடியில் மொத்த இடம் 700 Sq.feet. (20 அடி அகலம்,  35 அடி நீளம்). இதை எட்டு அறைகளாக பிரித்துக் கொண்டேன். முதல் இரண்டு அறைகளை தட்டுகள் எல்லாம் வைத்து தோட்டம் பொருட்களை வைக்க குடோன் மாதிரி. இதன் இன்னொரு முக்கிய நோக்கம், காற்றின் தாக்கத்தை மொத்தமாக தடுப்பது. அந்த திசையில் இருந்து தான் காற்றின் 80% சதவீத தாக்கம் இருக்கும். அதை ஒரு உறுதியான கட்டமைப்பை கொண்டு தடுத்தாலே முக்கிய பிரச்சினை தீர்ந்து விடும். அதற்காக இதை ShadeNet இல்லாமல், metal sheet வைத்து ஒரு அறை போலவே மாற்றுவதாக திட்டம். அதற்கு அடுத்த இடத்தில் சூரியன் ஒரு சில மாதங்கள் ஓர் ஓரமாய் போகும் போது இந்த குடோனின் நிழல் விழும். அதனால் சில மாதங்கள் (நான்கு-ஐந்து மாதங்கள்) அதில் செடி வைத்தாலும் நிழலில் தான் இருக்கும். கொஞ்சம் உயரமாக கொடி போட்டுவிட்டால் வெயில் கிடைக்கும். நிழல் பிரச்சனை இல்லாமல் அந்த இடத்தை சரியாக பயன்படுத்தலாம். அதனால் அடுத்த இரண்டு இடத்தை பந்தல் அமைக்க திட்டமிட்டேன். மற்ற நான்கு பகுதிகளில் தான் முக்கிய காய்கறிகள் வளர்க்க சுற்றி ஓரத்தில் இரண்டு அடுக்காக பைகள் வைக்க Shelf அமைப்பும், நடுவில் பெரிய பைகள் வைக்க இடமும் விட திட்டம்.

இடத்தை சேமிக்க structure-ஐ மாடியில் சுற்று சுவற்றில் இருந்தே எழுப்பினோம் (உள்ளே மாடி தளத்தில் இருந்து எழுப்பாமல்). Structure support-க்கு நடுவில் எந்த தூணும் வராமல் செய்தார்கள். அதனால் தோட்டத்தின் நடுவே தூணோ, கம்பியோ இல்லாமல் நிறைய இடம் கிடைக்கும். Water Tank-ஐ மாடியில் இருந்து எடுத்து அடுத்த உயரத்தில் வைக்க குடோனின் ஒரு பகுதியில் உறுதியாக ஒரு தளத்தை ஏற்படுத்தி Water Tank-ஐ மேலே வைத்து விட்டோம். எதையும் factory-ல் இருந்து செய்து கொண்டு வரமால், எல்லாவற்றையும் இங்கே கொண்டு வந்து, தேவைக்கேற்ப அளந்து வெட்டி அங்கேயே அமைத்தோம்.

122a34567

(தொடரும்)

106 thoughts on “தோட்டம் 2.0 (பகுதி-1)

  1. you tried with technical knowledge about both structure & plants GOOD LUCK &

    ALL THE BEST.

    Pictures except 6th are very dull.

    in my experience metal sheet quickly absorbs heat(if the sheet exposed to sunlight) & spreads out. it affects nearby plants growth.

    Now a days TERRACE GARDENING is a trend & also a status symbol also.

    organic terrace gardening one of the fast moving business.

    Like

    • Thanks for your comment Madam. The pictures are taken without proper lighting. I didn’t bother much as they are just to show the structural work (not showing any plant or yield with so much color 🙂 ). That’s why they are dull. Few are taken using my mobile as I didn’t plan to take it properly while the work was going on.

      You might be correct on the heat factor on using metal sheet. But I don’t have a choice to block the air. Lets see how the plants (the creepers) coming and will update you.

      Like

  2. வாழ்த்துக்கள் சிவா அண்ணா…
    படங்களை பார்த்தால் மாடித்தோட்டத்திற்கான ஏற்பாடுகள் போல தெரியவில்லை.. ஏதோ புதிய கார் தொழிற்சாலைக்கான கட்டுமானம் போல் உள்ளது… அருமை..
    தோட்டம் அமைத்து கொடுப்பவர்களை கூப்பிட்டு காசை கையில் கொடுத்து ஏமாறாமல் நீங்களே இவ்வளவு தூரம் முயற்சி எடுத்து செய்வது அருமை அண்ணா..
    மாடியில் வெயில் ஒரு பிரச்சனையே இல்லை என்று சொல்லியிருக்கிறீர்கள்.. நேரடியாக செடியில் படும் வெயில் பிரச்சினை இல்லை.. ஆனால் மாடி காங்ரீட்டில் பட்டு எதிரொளிக்கும் வெப்பம் கண்டிப்பாக பாதிப்புதான் அண்ணா…
    50% க்கு மேல் நிழல் வலை அமைத்தால் விளைச்சல் வராது என்பது பயனுள்ள புதிய தகவல்.. நான் கூட ஒரு 75% போட்டுவிட்டால் செடிகள் நன்றாக விளைச்சல் கொடுக்கும் என்றுதான் நினைத்திருந்தேன்…
    மாடித்தோட்ட கட்டமைப்பு அருமையாக உள்ளது…. முழுவதுமாக வேலை முடிந்த பிறகு நேரில் வந்து ஒருநாள் பார்க்க வேண்டும்…
    நன்றி அண்ணா

    Like

    • ஆமாம் தம்பி. நெடுநாள் உழைக்கும் அளவுக்கு ரொம்ப உறுதியான கட்டமைப்பாகவே அமைத்து விட்டேன்.

      மாடியில் வெயில் பிரச்சனை ஓரளவுக்கு இருக்கும். ஆனால் கோடையை (இரண்டு மாதங்கள்) தவிர்த்து பெரிதாய் தாக்கம் இருக்காதென்று நினைக்கிறேன். நான் பார்த்த மாடித் தோட்டங்கள் பல நிழல் வலை இல்லாமல் அமைத்தது தான். நான் கூட போன வருடம் பெரிய அளவில் போட்டிருந்த தக்காளி, கத்தரி, மிளகாய் எல்லாம் எந்த பிரச்சினையும் இல்லாமல் வந்தது. ஒரு வேலை எனது வீட்டு மாடி தளம் முழுக்க தள ஓடு என்று சொல்லப்படுகிற ஓடு பதித்திருப்பதால் வெப்பம் குறைவாக இருக்கலாம் (பொதுவாக மாடிகளில் நீர் கசிவு தவிர்க்க ஓடு பதித்திருப்பார்கள்). இருந்தாலும் நிழல் வலை இல்லாமல் அமைத்து பார்த்து பிறகு பட்ஜெட் பொருத்து அமைத்துக் கொள்ளலாம்.

      கண்டிப்பாய் ஒரு நாள் வா. வார இறுதியில் நேரம் கிடைத்தால் அழைத்து விட்டு வரலாமே. நானும் நண்பர்களை அழைத்து ஒரு தோட்டம் விசிட் போடலாம் என்று நினைத்திருக்கிறேன். பார்க்கலாம்.

      Like

  3. பிரமிப்பாக இருக்கிறது சிவா… இந்த படங்களைப்பாா்த்த பிறகு எனக்கும் சில புதிய ஐடியாக்கள் வருகிறது

    நன்றி .

    Like

    • நன்றி நண்பரே. உங்கள் ஐடியாக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். நானும் ஏதாவது சிலவற்றை எடுத்து முயற்சிக்கிறேன் 🙂

      Like

  4. Hello அண்ணா
    நானும் உங்கள் blog kai 1 1/2 வருஷமா படிச்சிட்டு இருக்கேன்
    இப்போதான் உங்க கூட இனைந்திருக்கிறோன்
    மிக்க மகிழ்ச்சி

    Like

  5. அருமை நண்பரே ,

    கொஞ்சநாள எந்த வித விஷயமும் பகிர படவில்லையே என்று ஏன் என்று பார்த்தால் புதிய பரிமாணத்துடன் ப்ளாக் சூப்பர இருக்கு மாடி தோட்டத்தின் முழு முயற்சியும் சூப்பர் வாழ்த்துகள்….. மேலும் மேலும் சிரிப்புடன் சிறப்புடன் வளர்க

    Like

    • நன்றி மேடம்.

      உண்மை தான். கடந்த மூன்று மாதங்களாக தோட்டத்தில் என்னால் பெரிதாய் செய்ய முடியவில்லை. ஒரு பக்கம் இந்த வெப்சைட் உருவாக்குவதிலும், மறுபக்கம் மாடித்தொட்டம் வேலையிலும் நேரம் போய்விட்டது. எல்லாம் ஒரு ஒழுங்கில் வர இன்னும் ஒரு மாதம் ஆகலாம். ஜூன் சீசனில் இருந்து அசத்தலாக ஆரம்பிக்கலாம். புதிய பதிவுகள் நிறைய வர ஆரம்பிக்கும் 🙂

      Like

  6. மிகவும் அருமையான பதிவு அண்ணா மென் மேலும் வளர வாழ்த்துகள்!

    Like

  7. Siva sir,
    Super. You have finally decided to go for shaded roof.
    My friend asked me about the cost of gardening.
    I have replied as Rs100/- Kg of Kathari kaai.
    Even though its costly, the quality and happiness is incomparable.
    Appreciation to your consistent hard work.

    Like

    • Thanks Kalirajan.

      Why Rs.100/Kg for Kathari kai? We may not make profit in few cases (but few cases, we even can produce with lesser cost), but definitely not costlier than the marker prices ( I mean the average cost.. We cannot consider season when tomato sold at Rs.10 / Kg 🙂

      Like

  8. Superb sir. I started TG only after reading your blog on August 2015 I read all your posts Thank you so much Sir for your kind service.

    Like

  9. வாழ்த்துக்கள் நண்பரே,
    புதிய தளம் சிறப்பான முயற்சி. மிக அருமையாக செய்துள்ளீர்கள். மாடித்தோட்ட் கட்டமைப்பும் சிறப்பாக உள்ளது. வேலை முடியும்போது மிகவும் பிரமாதமாக இருக்கும்.
    புதிய தளம், புதிய தோட்டம்… கலக்கல் தான்.
    மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்காவது ந்ழல்வலை அவசியம் என்று நினைக்கிறென். மாடியில் நானாக தற்காலிகமாக அமைத்திருந்த நிழல்வலையை சென்ற ஆகஸ்டில் க்ழற்றி வைத்துவிட்டேன். இந்த ஒரு மாத வெய்யிலில் செடிகள் த்ளர்ந்துவிட்டன. மாடியில் ஓடுகளும் பதிக்காத காரணத்தால் வெய்யிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. விரைவில் 20×20 நிழல்வலை அமைக்க இருக்கிறென்.

    Like

    • நன்றி நண்பரே 🙂

      நிறைய நண்பர்கள் கோடையில் நிழல் வலையின் அவசியம் இருப்பதாக கூறி இருக்கிறார்கள். மழை காலங்களில் வெயில் குறைவாக இருக்கும் போது செடிகளின் விளைச்சல் நிழல் வலை இருக்கும் போது கொஞ்சம் குறையலாம். உங்களை போல வலையை எடுத்துவிட்டு பின் மாட்ட வசதி இருந்தால் நன்றாக இருக்கும் போல.

      Like

  10. hello siva. Naan konjam kalamaga ungaladhu blogai thodarndhu varugiran. Arumaiyana thagavalgalai pagirndhu varukirirgal. Ungaladhu muyarchiku en vazthukal.

    Like

  11. நான் தங்களை போலவே ஒரு அமைப்பை (52*25*25) தரையில் இருந்தெ உருவாக்கி உள்ளேன். நான் தங்களை போல தோட்டம் அமைக்க முடியுமா?

    Like

    • தரையில் நிழல் வலை அமைப்பா? எதற்கு தரையில் தேவைப்பட்டது என்று கூறமுடியுமா? தாராளமாக இதே போல எல்லா செடிகளையும் கொண்டு தோட்டம் அமைக்கலாம் நண்பரே.

      Like

  12. Sir,

    I am from Vellore. I am following your blog since 3 months, its so informative. I have some doubt regarding organic and hybrid seeds. Please help sir.

    I sowed parampariya seeds (organic nattu seeds), but it didn’t give any yield. Please suggest from where or from whom to get organic seeds.
    I found that you sow many hybrid seeds, is it healthy sir? why don’t you prefer organic seeds than hybrid?

    Like

    • Thanks Madam for your comments. Regarding hybrid seeds in my garden, all my basic vegetables are native only (tomato, brinjal, chilli, vendai, avarai and all creepers). Wherever we don’t have native seeds (like capsicum, cabbage etc), I go with hybrid seeds. My aim also to have everything native plant only.

      Where you got the seeds (Your parampariya vithaigal)? Any idea about its expiry date? When you say, you didn’t get any yield, whether the plant growth was good and still we didn’t get any yield. What exactly happened? If you can tell me, we can check where the issue is.

      I am getting native seeds from some local shop here. Few information shared by friends about native seeds. Will have to check

      Like

  13. ஹாய் சிவா, நானும் உங்களை பாத்து என் வீட்டில் உள்ள கொஞ்சம் இடத்தில் தோட்டம் போடலாம் னு நினைத்து கஷ்டப்பட்டு லால்பாக்கில் போய் அந்த ப்ளாச்டிக் பை லாம் வாங்கிட்டு வந்து எல்லாம் ஆரம்பிச்சா என்னவோ திரியலை ஒன்னும் சரியா வரலை. எனக்கு அதற்குண்ட்டான விவரம் போதலையோ னு தெரியலை. ஆனா உங்க தோட்டத்தை பார்த்த சந்தோஷமா இருக்கு. பார்ப்போம் ஒரு வேளை நானும் கூட பின்னாளில் சரியாக கத்துகிட்டு பண்ணனும் னு நினைக்கிறேன். வாழ்த்துக்கள் சார் உங்களோட புதிய தளத்திற்கும் தோட்டத்திற்கும்.

    Like

    • நன்றி மேடம்.

      உங்கள் தோட்டத்தில் என்ன மாதிரி பிரச்னை வந்தது என்று கூற முடியுமா?. நான் என்னால் முடிந்த விவரங்களாய் கூறுகிறேன். தொடக்கத்தில் சில தோல்விகள் வரலாம், அப்படியே விட்டு விட வேண்டாம். தொடர்ந்து முயற்சியுங்கள். நன்றாய் வரும்.

      Like

  14. அருமை அண்ணா தங்களின் முயற்சிகளை பார்க்கும் போது நானும் விரைவில் தோட்டம் போட வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகின்றது.

    Like

    • நன்றி ரமேஷ். இடம் இருந்தால் உங்கள் தோட்டத்தை உடனே ஆரம்பிக்கலாமே 🙂

      Like

  15. Dear Mr. Siva

    Good day,

    When I am searching ideas and know how about Terrace Garden, it happened to read your blog. You are so dedicated and passionate in TG. Really your videos on preparing growing media and nursery are very useful. Your posts & videos are inducing us to set up TG and lead a healthy life with social responsibility. We have a plan to start TG in smaller level in our house at Theni.

    Hope you will help us, incase if we need any technical support or assistance.

    With Regards

    Karuppiah

    Like

    • Thanks Mr.Karuppiah. Happy to see your comments and words about my posts. Please let me know when you start your TG. Definitely will provide my input and help to the possible extend.

      Regards,
      Siva

      Like

  16. வணக்கம் சிவா சார், என் வீட்டு தோட்டத்தில் வைத்த பீர்க்கங்காய் கொடி மிகவும் ஆரோக்கியமாக எந்தவித நோய் தாக்குதலோ, பூச்சி தொற்றோ இல்லாமல் வந்துள்ளது. நிறைய பிஞ்சு வைத்துள்ளது, ஆனால் பிஞ்சுகள் பழுத்து வீழ்ந்துவிடுகின்றன, காரணம் தெறிந்தால் கூறுங்கள்

    Like

    • வணக்கம் நண்பரே.

      கொடிகள் கொஞ்சம் திணற தான் செய்கிறது. அதுவும் இந்த கோடை வெயிலுக்கு கொஞ்சம் கடினம் தான். நீங்கள் ஏதும் வளர்ச்சி ஊக்கி, பூ பிடித்து வர ஏதும் தெளித்து வருகிறீர்களா? பஞ்சகாவ்யா, மீன் அமிலம், அரப்பு மோர் கரைசல் மாதிரி முயற்சித்து பாருங்கள்.

      Like

      • நன்றி நண்பரே, பஞ்சகவ்யா தெரியும், மீன் அமிலம், அரப்பு மோர் கரைசல் பற்றி சொல்லுங்களேன், புதியதாக உள்ளன

        Like

    • Hello Mr.Jeevagan anna

      Koo mutootai (அழூகிய முட்டை ) try pannunga

      Oru mootaiyai eduthu beerkan chediyil வேர் பகுதியில் உடைத்து உற்றி நீர் விடவும்

      ஒரு வாரம் காத்திருந்து தெரியப்படுத்தவும்

      சிவா அண்ணா நான் ஏதேனும் தவறாக சொல்லிருந்தால் என்னை மன்னிக்கவும்

      Like

      • நன்றி கார்த்திக், வித்தியாசமான ஒன்று, முயற்சித்துவிட்டு கூறுகிறேன்.

        Like

      • Hello அண்ணா

        நான் kavi from kancheepuram. உங்கள் blog kai 4 மாதங்களாக படிச்சிட்டு இருக்கேன்.

        இப்போதான் உங்க கூட இனைந்திருக்கிறோன். நானும் உங்களை பாத்து என் வீட்டில் தோட்டம் அமைத்தேன்.

        ஆனால் இங்கு குரங்கு அட்டகாசத்தால் தோட்டம் சிறப்பாக பாதுகாக்க முடியவி ல்லை.

        Like

        • குரங்கு தொல்லைக்கு நிறைய பேர் தோட்டத்தை சுற்றி வலை போன்று அமைக்கிறார்கள். கொஞ்சம் செலவு செய்து நிரந்தரமாய் செய்ய சிலர் கம்பியில் வலை போன்று சுற்றி அமைக்கிறார்கள். கொஞ்சம் செலவு குறைவாக என்றால் நிழல்வலை அமைத்து பார்க்கலாமே?

          முடிந்தால் நாய் குட்டி வளர்க்கலாம். குரங்கை நெருங்க விடாமல் பார்த்துக் கொள்ளும் 🙂

          Like

      • hai அண்ணா. iam kavi. nan m.sc, b.ed mudecheruken. private’a school’la work panren. nan ug padekum bothelerunthea pu

        cheadi, marakannulam naraya vage vanthu veaipen. aana enga monkeys problem naraya. appo kuda neruththama naraya cheadi

        vage varuven. veetla thettuvaga waste panranu. yanaku cheadiyoda erukka, peasa romba pudekum. eppo entha maadi thottam

        famous’ a erukku. unga blog’a padeche um, pictures’a paathum yanaku oru idea vantheruku. monkey thottam kulla varama

        erukka vealelam poda ready pannetu eruken. thottam develop aaganum’nu romba aasaya eruku.

        Like

        • செடிகள் மீதான உங்களது ஆர்வம் உங்கள் எழுத்துகளில் தெரிகிறது. அருமை. வலை போன்று அமைத்தால் குரங்கு தொல்லையை கட்டுப்படுத்தலாம். முயற்சியுங்கள். உங்கள் புதிய தோட்டத்திற்கு வாழ்த்துகள்.

          Like

          • Romba THANKS அண்ணா. school leave vettaga. ene ennum athega nearam thotta vealai than . seakram thootam

            pathugappanatha uruvakkeduven. entha athegamana veaiyel’ku yentha cheadigal thangumnu oru idea kuduga pls. nan

            muthal muraya inji’a nattu paththen compost+coco peat kalavaiyel. mulaiththu nanraga varugerathu. aana athu ennum

            nanraga valara thotti nallatha, man tharai nallatha?

            Like

            • நீங்கள் புதிதாய் விதைக்க திட்டம் என்றால் இந்த கோடை முடியும் வரை காத்திருந்து ஜூன் வாக்கில் ஆரம்பியுங்கள். நல்லது.

              தரையில் இடம் இருந்தால் அதில் வளர்ப்பது சிறந்ததாய் இருக்கும்.

              Like

  17. GROW BAGS (பச்சை நிறம்) விலை details கொஞ்சம் அனுப்ப முடியுங்கலா அண்ணா. இங்கு பாலிதீன் வகை bag

    (வெள்ளை நிறம்) விலை 50, பச்சை நிறம் விலை 300 என்கிறார்கள். chennai susi seeds ல்.

    Like

    • ஹாய் கவி,

      இங்கே பச்சை நிறம் ஒரு அடி அகலம் பை ரூ. 50 ஆகிறது. நீங்கள் சுபிக்ஷா ஆர்கானிக் (கோவை) அழைத்து பேசுங்கள். (94437 77778 / 94430 34667 / 94422 12345). எல்லா வகை பைகளும் கிடைக்கும். நல்ல தரமானவையாகவும் இருக்கும். சென்னைக்கும் அனுப்பி வைப்பார்கள்.

      Like

  18. சிவா அண்ணா

    உங்களுடைய மீன் தொட்டி water fillter பற்றி

    கொஞ்சம் தெளிவாக கூற மூடியுமா ?

    Like

    • மீன் தொட்டி பற்றி வேறு சில நண்பர்களும் கேட்டிருந்தார்கள். நான் மூன்று டஸ்ட் பின் வாங்கி ஒரு அடுக்காக செய்து ஒவ்வொரு அடுக்கிலும் filtering material போட்டு விட்டேன். ஒரு அடுக்கில் Bio Balls மேல் அடுக்கில் Ceramic Clay. Hardware Store-ல் இருந்து ஒரு Tank Nipple வாங்கி அடி தட்டில் மாடி அதை fish tank-ல் விட்டுவிட்டேன். மேல் அடுக்கில் ஒரு மெல்லிய sponge filter layer ஒன்றும் வைத்திருக்கிறேன் (தூசி, கடின அழுக்குகளை மேல் அடுக்கிலேயே filter செய்ய)

      Like

      • அண்ணா Nan sela flower seeds vaage vantheruken. yentha maathaththil vethaippathu sareyaga erukum. engu selar

        september maathathil vethaikka solgerarkal. ungal karuththai sollungal please. entha maatham vethaikka kudatha?

        Like

        • எனக்கு பூக்கள் பற்றி பெரிதாக விவரம் தெரியாது கவி. பொதுவாய் ஆடிபட்டம் எந்த விதைப்புக்கும் சிறந்ததாக இருக்கும் (ஆடி பெருக்கு அன்று). அது ஜூலையில் வரும். செப்டம்பர் என்பதன் காரணம் ஏதும் சொன்னார்களா?

          Like

          • சுபிக்ஷா ஆர்கானிக் (கோவை) இங்கே பச்சை நிற bag kancheepuram க்கு order kuduththa veetuku

            anupuvagala anna

            Like

            • நீங்கள் அழைத்து பேசுங்கள். ஆர்டர் செய்து பணம் அனுப்பி விட்டால் அனுப்பி வைப்பார்கள் (எண் – 9443383797)

              Like

            • Hello Kavi,

              The green bags are available in Pallavaram Santhai on every Friday. I bought 1 feet green bags for 50 Rupees only. You can get all the size and Earthwarm compost and Panchakavya…etc.

              Pallavaram Santhai is just opposite of Chennai Airport at every FRIDAY.

              Ramesh S

              Like

  19. நல்ல முயற்சி சிவா அய்யா, எனக்கும் தோட்டம் போட ஆசை உண்டு. இன்னும் கூடிவரவில்லை. இனி முயற்சிகாலம் என இணையத்தில் தேடியபோது எத்தனை பேர். உங்களிடம் நிறைய கற்கவேண்டும் எனும் ஆசை. நன்றி

    Like

  20. Dear Siva Sir,

    How are you? Your website looks very cute now. It has been divided very well….All the very best.

    I started to planting in my home town (Mayiladuthurai). I bought some of the seeds from Susi seeds Chennai(Tomato, Green Chilly, Ladies finger) and planted three months ago. All the plats grew very well more than 8 feets. Only 2 of 15 tomato plants gave little amount of tomato in small sizes. But all the tomato plats have lots of flowers but not giving anything. Chilly is OK. We got half kg chilly from more than 10 plants. Happy with Ladies finger and it gave more than 3 KG vegetables.

    But I am very disappointed from the tomato….:-)

    Thanks
    Ramesh S

    Like

  21. சிவா சார், பீர்க்கங்காய் செடி இலையில் வெள்ளை கோடுகள் விழுந்து கொண்டிருக்கிறது. இதை தடுக்க என்ன செய்வது ?

    Like

    • இலைகளில் கோடுகள் leaf miner என்னும் பூச்சிகள் இலைகளை சுரண்டி தின்பதால் வருகிறது. இதனால் பெரிய பாதிப்பு ஏதும் வராது. கட்டுப்படுத்த வேண்டும் என்றால் வேப்பம்புண்ணாக்கை (1:20 ratio) நீரில் கரைத்து இலைகளில் தேய்த்து விடுங்கள், தெளித்து விடுங்கள்.

      Like

  22. அருமை. பாம்பு வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் அண்ணா?

    Like

    • இது பற்றி விவரம் தெரியவில்லை ஜெயா. முடிந்த அளவுக்கு செடிகள் தரையோடு புதர் போல இல்லாமலும், செங்கல், குழாய்கள் மற்றும் இதர பொருட்கள் கூட்டாய், அவைகள் புகுந்து கொள்ளும் இடைவெளியோடு இல்லாமலும் பார்த்துக் கொள்ளலாம்.

      Like

  23. சிவா சார், pot mixing செய்து செடி வளர்ந்து வந்த பின் சில நாட்களில் மண் இருகி விடுகிறது. நான் செய்த pot mixing il பொருட்கள் மண் + தென்னை நார்க்கழிவு + காய்ந்த இலைகள். மண் சிறிதளவுதான் போட்டேன். மண் இருக்கமாக இருப்பதால், தண்ணீர் ஊற்றினால் சைடாக சென்று பைகளில் உள்ள துளை வழியாக தண்ணீர் வெளியேறி விடுகிறது. இதனால் செடி வாடி விடுகிறது. மண் லூசாக இருப்பதற்கு என்ன செய்யலாம் ?

    Like

    • நீங்கள் தேவையான இடைவெளி இல்லாமல் தாமதமாக நீர் விட்டார் இப்படி கட்டியாக பையில் மாறி நீர் ஊற்றும் போது ஓரத்தில் நீர் ஓடி ஒழுகும். சரியான இடைவெளியில் நீர் ஊற்றினால் சரியாக வரும். நீர் ஊற்றும் முன் பார்த்து கரையில் இடைவெளி இருந்தால் அதை உடைத்து நிரப்பி பின் நீர் ஊற்றுங்கள்.

      Like

  24. சிவா அண்ணா நீங்க சொன்ன மாதிரி குரங்கு

    பிரச்சனைக்கு சின்ன room மாதிரி வேலி அமைத்து

    அதில் சிறிது கத்தரி, வெண்டை, தக்காளி,

    பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தவரை, முள்ளங்கி

    செடிகள் நாற்று எடுத்து நட்டேன். நன்றாக வளருகிறது.

    Like

  25. சிவா சார், பீர்க்கங்காய் செடியில் காய் தோன்றி (சிறியதாக இருக்கும் போதே) உடனே வெம்பி விடுகிறது. தீர்வு என்ன ?

    Like

    • எனக்கு படங்களோடு ஒரு மடலை அனுப்புங்கள். பார்க்கலாம்.

      Like

  26. உங்களது தோட்டம் மிகவும் அருமை ….. வாழ்த்துக்கள்

    Like

  27. சிவா அண்ணா தோட்டத்தில் எலி வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் அண்ணா ?

    விதை நாற்று , சிறு செடிகளையும் வீணடிக்கிறது.

    Like

  28. சிவா சார், தங்களது மாடி தோட்ட வீடியோ பார்த்தேன். அருமை. மாடி தோட்டம் போட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறீர்கள். இது சம்பந்தமாக எனக்கு 2 கேள்விகள் : 1. செடிகள் வைப்பதற்கு bed போட்டிருக்கிறீர்களே அது என்ன சைஸ். அதன் விலை ? 2. Pot mixing (coir pith + vermicompost + redsand) செய்து செடி வைத்து விட்டீர்கள். அதன் பிறகு செடி ஆரோக்கியமாக வளர இடுபொருட்கள் என்ன பயன் படுத்துகிறீர்கள் ? வைரஸ் தாக்குதல் மற்றும் பூச்சி தாக்குதலை தடுக்க என்ன செய்கிறீர்கள். வருமுன் காத்தல், வந்த பின்காத்தல் எப்படி ? eg.: வெண்டை செடியில் yellow vein mosaic வைரஸ் தாக்குதல் போன்று வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ?

    Like

Leave a comment