தோட்டம் – தகவல்-2 (விதைகள், பஞ்சகாவ்யா, மண்புழு உரம்)


இது ரொம்ப முக்கியமாய் பார்க்க வேண்டிய பகுதி. எந்த ஒரு பொழுது போக்கையும் எடுத்துக்கொண்டால், அது சம்மந்தமாக பொருட்களை சேர்ப்பதே ஒரு சந்தோசம். Painting செய்பவர்கள் என்றால் அது சம்மந்தமாக palette, paints, brush என்று சேர்த்துக்கொண்டே இருப்பார்கள். எதாவது ஒரு இசை அமைப்பாளர் ரசிகர் என்றால் எத்தனை சி.டி இருக்கிறதோ அத்தனையையும் சேர்த்துக் வைத்திருப்பார்கள் (என்னை போல் ராஜா ரசிகர்கள்). அப்படி தான் தோட்டம் என்றால், கிடைக்கும் அத்தனை வகை விதைகளையும் சேர்ப்பதே ஒரு சந்தோசம். அதை பயன்படுத்துகிறோமோ இல்லையோ, ஆனாலும் எந்த கண்காட்சி சென்றாலும் எதாவது விதை விற்பனை கடையை பார்த்து விட்டால் நம்ம மனசு தானாகவே அங்கு சென்று விடும். புதிதாக ஒரு ஐந்து பாக்கெட் விதைகளாவது வாங்கினால் தான் நமக்கு சந்தோசம். 
My Seed Box/Collection
விதைகள் என்று பார்த்தால் Hybrid மற்றும் நாட்டு விதைகள் என்று இரு வகைகள் கூறலாம். வீட்டுத் தோட்டம் என்று போகும் போது, முடிந்த அளவுக்கு ஹைப்ரிட் விதைகளை காய்கறி, பழ மரங்களுக்கு தவிர்க்கலாம். நாட்டு விதைகளில் வரும் செடிகள் பொதுவாய் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாய் இருக்கும். நீண்ட காலம் பலன் தரும். அடுத்த பருவத்திற்கு அதில் ஒரு காயை விதைக்கு விட்டு எடுத்து கொள்ளலாம். வருடா வருடம் விதை வாங்க வேண்டியதில்லை. வேண்டுமானால் பூ செடிகளுக்கு ஹைப்ரிட் போகலாம்.
நான் பொதுவாய் அடிப்படை காய்கறி விதைகள் (கத்தரி, தக்காளி, வெண்டை, அவரை) இங்கே அக்ரி யுனிவர்சிட்டியில் வாங்குவேன். அவைகள் ஹைப்ரிட் விதைகள் தான்.  நாட்டு கத்தரி (வெள்ளை) விதைகள் ஊரில் இருந்து வாங்கி வருவதுண்டு. முழுவதும் நாட்டு காய்கறிகளுக்கு மாறி பார்க்கலாம் என்று இந்த முறை வானகம் ஸ்டாலில் இருந்து வெண்டை, அவரை என்று எல்லாம் வாங்கி வந்திருக்கிறேன். நாட்டு விதைகள் வேண்டும் என்றால் (வானகம்) போன் செய்தால் கூரியரில் அனுப்பி வைப்பதாக அந்த ஸ்டாலில் இருந்தவர் கூறினார். விவரம் வேண்டுபவர்கள் எனக்கு gsivaraja@gmail.comக்கு ஒரு மடலை தட்டி விடுங்கள்.
கேரட், காலி ஃப்ளவர், கோஸ் என்றால் ஹைப்ரிட் விதைகள் தான் போக வேண்டும். ஹைப்ரிட் விதைகள் என்றால் பொதுவாய் கிடைப்பது Omaxe Brand விதைகளை கூறலாம். என் தோட்டத்தில் விளைந்த கேரட், காலி ஃப்ளவர், கோஸ் எல்லாம் Omaxe Brandவிதைகள் தான். இவை பொதுவாய் எல்லா பெரிய விதை கடைகளிலும் கிடைக்கும். அவர்கள் இணையத்திலும் கிடைக்கிறது. இது தவிர Kraft Seeds-ம் Omaxe Brand மாதிரி தான். 
Namdhari Seedsபோன டிசம்பரில் Coimbatore Shopping Festival-ன் போது, Gerbera, Carnation, Pansy விதைகள் தேடியபோது ஒரு கடையில் இந்த பிராண்டு விதைகள் கிடைத்தது. ஒவ்வொன்றும் விலை Rs. 45. வாங்கி வந்து முளைக்க போட்ட போது, அதன் முளைப்பு திறன் (Germination Rate) ஆச்சரியபட வைத்தது. Gerbera, Pansy விதைகளே 100% முளைத்தது. பிறகு Namdhari Seeds பற்றி தேட ஆரம்பித்த போது, Online-ல் அவர்கள் இணையத்தில் விற்பது இல்லை போல. இங்கே கோவையில் ஒரு கடையை (Sakthi Agro Service) Distributor List-ல் போட்டிருந்தார்கள். அந்த கடையை தேடி நேரில் போய் விசாரித்த போது Namdhari விதைகள் ஜூனில் தான் வரும் என்றார். Bhawani Seeds என்று ஒரு பிராண்டு தான் வைத்திருந்தார் (Rs.25 / pocket). Aster, Cosmos விதைகள் வாங்கி வந்தேன். இன்னும் முளைக்க போடவில்லை.இந்த கடை TNAU-kku போகும் போது தடாகம் ரோடு-வடவள்ளி சிக்னலின் அருகில் இருக்கிறது. Namdhari Seedsபெங்களூர் கம்பெனி. எனவே பெங்களூரில் எளிதாக கிடைக்கும். அங்கே Namdhari Fresh கடைகளில் கிடைக்கும் என்றும் இணையத்தில் சிலர் கூறி இருந்தார்கள். 
Map – Sakthi Agro Service
இங்கே கோவையில் எனக்கு கொடுத்த கம்பெனியை தேடி நேரில் போய் இன்னும் கொஞ்சம் விதை வாங்கி வந்தேன். அவர்கள் Namdhari flower Seeds collection கொஞ்சம் வைத்திருக்கிறார்கள். பெரிதாய் ஒன்றும் இல்லை. மற்ற பொருட்கள் எல்லாம் விலை ரொம்ப அதிகமாக இருக்கிறது. அதனால் இந்த நிறுவனம் பற்றி அறிமுகம் தேவை இல்லை. 
இணையத்தில் ஒரு Namdhari  Seeds collectionபார்த்தேன். அந்த Site எந்த அளவுக்கு நம்பகமானது என்று தெரியவில்லை. 
இணையத்தில் விதைகள் வேண்டும் என்றால், gardenguru.in ல் நிறைய வகைகள் பார்க்க முடிகிறது.
 
பொதுவாய் காய்கறி விதைகளுக்கு பாக்கெட் பத்து ரூபாய்க்கு மேல் லோக்களில் வாங்க வேண்டாம் (Omaxe Hybrid seeds, Cherry tomato seed மாதிரி  போகும் போது முப்பதில் இருந்து நாற்பது ரூபாய் ஆகலாம்). இங்கே TNAU-ல் பத்து ரூபாய்க்கு ஒரு பாக்கெட் வெண்டை விதை வாங்கி பார்த்தால் அதன் அளவு தெரியும். அதையே நான்கு, ஐந்து பாகமாய் பிரித்து ஒவ்வொன்றும் பாக்கெட் இருபது முப்பது ரூபாய்க்கு லோக்களில் விற்கும் கம்பெனிகளும் இருக்கின்றன. அது நமக்கு தேவை இல்லை. கீரை எல்லாம் ஐந்து கிராம், பத்து கிராம் என்று உரக் கடைகளில் வாங்கலாம். 
   
விதை பற்றி கூறும் போது, இன்னொரு விசயத்தையும் கூற வேண்டும். பொதுவாய் எங்கு Exhibition போட்டாலும் அங்கே கலர் கலராய் பாக்கெட்டில், தக்காளி முதல் கேரட் வரை, செண்டு பூவில் இருந்து ஜெர்பரா வரை எல்லாம் பாக்கெட் பத்து ரூபாய் என்று விற்கும் ஒரு கடை கண்டிப்பாய் இருக்கும். பத்து ரூபாய் தான என்று நாமும் கிடைத்ததை எல்லாம் அள்ளி வருவது உண்டு. சில நேரம் கத்தரி பாக்கெட்டில் கத்தரிக்கு பதிலாக பூசணி விதை கூட இருந்திருக்கிறது. நான் Namdhari Seeds வாங்கிய போது, சும்மா Test  செய்து பார்க்கலாம் என்று அந்த பத்து ரூபா கையில் போய் ஜெர்பரா, Aster என்று சில பாக்கெட்டுகளை வாங்கி வந்து போட்டேன் (அவிங்க மட்டும் எப்படி பத்து ரூபாய்க்கு இந்த விதைகளை கொடுக்கறாங்க என்று ஒரு ஆர்வம் தான்). அதோட Result கீழே. போட்ட விதை போட்ட படியே இருக்கிறது. கொடுத்த காசு அந்த கடை காரருக்கு மொய் தான். அடுத்த முறை யோசிச்சி வாங்குங்க 🙂
Namdhari Seed Vs Rs.10 Seed 🙂
 மேலும் சில தகவல்கள். இங்கே கோவையில் TNAU-ல் நிறைய பொருட்கள் ரொம்பவே விலை குறைவாக கிடைக்கிறது. அவர்கள் பொதுவாய் இதை எல்லாம் விளம்பரம் செய்வது இல்லை. மண்புழு உரம் கிலோ ஆறு  ரூபாய்க்கே கிடைக்கிறது (வெளியே அதையே முப்பது-நாற்பது ரூபாய்க்கு விற்கிறார்கள்). மண்புழு உரம் வேண்டும் என்றால், திங்கள்-வெள்ளி மட்டும் (வெள்ளி அன்று மதியம் வரை மட்டும்) கிடைக்கும். நாம் தடாகம் ரோடு-வடவள்ளி சிக்னலில் இருந்து போகும் போது, இடது பக்கம் (Opp. To the Botanical Garden/Park Gate) போய் கேட்டால் கிடைக்கும்.
இன்னொரு முக்கியமான பொருள், பஞ்சகாவ்யா.TNAU-ல் லிட்டர் Rs.80-க்கே தரமான பஞ்சகாவ்யா கிடைக்கிறது. அதே இடப்பக்கம் போய் Environmental Science Department (ENS Department) என்று கேட்டால் சொல்வார்கள். நிறைய கம்பெனிகள் அரை லிட்டர் பஞ்சகாவ்யாவையை Rs.150 க்கு விற்க பார்த்திருக்கிறேன். TNAU தான் நிறைய கம்பெனி பஞ்சகாவ்யா தரத்தையே Certify செய்கிறது. நமக்கு TNAU தயாரிப்பே விலைகுறைவாக கிடைக்கிறது. நான் போனபோது சனிக்கிழமையே கிடைத்தது. திங்கள்-வெள்ளி கண்டிப்பாக கிடைக்கும்.
TNAU-ல் இப்போது விதைகளுக்காகவே ஒரு Vending Machine நிறுவி இருக்கிறார்கள் (at Botanical Garden/Part entrance). பத்து ரூபாய் நோட்டை சொருகி விதையை தேர்ந்தெடுத்தால் அதுவே கொடுத்துவிடுகிறது. ரொம்ப நல்ல முயற்சி (ஆனால் விதை தான் வெறும் தக்காளி,கத்தரி, வெண்டைக்காய், பாகல் என்று ரொம்ப குறைவான வகைகளையே நிரப்பி வைத்திருக்கிறார்கள்)
 

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், மற்ற ஊர்களில் (குறிப்பாக சென்னை) Coir Pith, விதை, Nursery Tray,  பஞ்சகாவ்யா, மண்புழு உரம் போன்ற பொருள்கள் தரமாக, விலை நியாயமாக உங்கள் ஊர்களில் எங்கு கிடைக்கும் என்று தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு பயன்படட்டும்.

21 thoughts on “தோட்டம் – தகவல்-2 (விதைகள், பஞ்சகாவ்யா, மண்புழு உரம்)

  1. தோட்டம் ஆரம்பிக்கிறவங்களுக்கு மிக பிரயோசனமான தகவல்கள்.நீங்க வாங்கிய பூக்களுக்கான விதைகளில் இங்கு pancy பூத்துவிட்டன. மற்றையவைகள் இனிபூக்கும் காலம். மிக்க நன்றி சிவா தகவல் பகிர்விற்கு.உங்களின் உதவும் மனப்பான்மைக்கு வாழ்த்துக்கள்.

    Like

  2. Un believable price for PG and VC. Chennai it is Rs.150 & 40 minimum, seeds are Rs.50/60, 10 rs pkt moithan. Cherry tomato 600rs pkt, If you go to any organic shop you will have the effect of been to thirupathi or palani ( mottai ) you guys are lucky guys, happy gardening happy shopping.

    Like

  3. நன்றி ப்ரியா. pancy உங்கள் ஊருக்கு தான் சரி போல. நானும் விதை கிடைக்கிறது என்று ஒரு ஆர்வத்தில் வாங்கி முயற்சி செய்தேன். எல்லாம் ஓரளவுக்கு ஒரு நான்கு இலை வரும்வரை வளர்ந்தது. பிறகு கருகி விட்டது. அது எதிர்பார்த்தது தான். அது ரொம்ப மிதமான வெயிளுக்கே வரும். இங்கே அடிக்கும் வெயிலுக்கு கத்தரி, தக்களியே திணறுகிறது. இருந்தாலும் ஜூலை-டிசம்பர் பருவத்தில் ஒரு முறை முயற்சிக்க வேண்டும்.

    Like

  4. Yes Srinivaas. It is very cheap only in TNAU. In Vanakam stall also, they sold the native seeds as Rs.10 /pocket only. But other companies just selling even Ladies finger, brinjal seeds for Rs.30, 40. We have to spend some time and explore the options available to get the good seeds at reasonable price.

    Like

  5. நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்Tiruchy ல் Coir Pith,எங்கு கிடைக்கும் என்று தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    Like

  6. வணக்கம்இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகம்மாகியுள்ளது வாழ்த்துக்கள் பதிவை சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/05/blog-post_8.html?showComment=1399504745644#c2740972411937371345-நன்றி–அன்புடன்–ரூபன்-

    Like

  7. தெரிவித்ததற்கு நன்றி ரூபன். நானும் போய் தோட்டம் ப்வ்ற்றி மற்றவர்கள் வலைச்சரம் பற்றியும் தெரிந்து கொண்டேன்.

    Like

  8. Thanks Angelin. This seems to be in Chennai which is good. You got any product from them? How you got (in person or through shipping)? The contact details shows as below. Chennai friends can give a call and check63 ( New No.68 ) Cathedral Road,Gopalapuram,Chennai – 600 086. India.Tel : 91 – 44 – 2811 4236, 2811 4359Fax : 91 – 44 – 2811 4237Email : info@bloompeat.co.inWebsite :www.bloompeat.co.in

    Like

  9. நான் பஞ்சகாவ்யா இப்போதும் கூட பயன்படுத்துகிறேன். ரிசல்ட் எப்படி என்று கேட்டால், நான் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. கிடைக்கும் போது கொஞ்சம் தெளிப்பதுண்டு. நீரில் கலந்தும் ஊற்றி விடுவேன். கண்டிப்பாக நல்ல விளைச்சல் கிடைப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், இதை பயன்படுத்தி சரியாக வராத செடி ஏதும் சரியானதா என்று கேட்டால், அந்த அளவுக்கு இன்னும் பெரிதாய் பார்க்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

    Like

  10. Hello Sir, I’m Sabitharaja from Erode. I have started my garden only after seeing your article in Avalvikadan. You are my inspiration. In the past two years I learnt a lot by trial and error method. I don’t have any previous knowledge in garden. With the informations given by you and with the help of Google facebook and you tube I learned about gardening and still learning. Your channel is very informative. Keep it up and Thank you for sharing. I just want to give an information about the availability of Cocopeat, Vermicompost Neemcake, Pongamia cake, Bone meal, Fishmeal n Seaweed granules at Coimbatore . Just Grow 9566222386. You can get the address by Contacting this number. Rates are very reasonable. Whenever you find time plz visit my page Sabitharaja’s Garden in facebook. One more thing I wish to visit your garden once. Thank you

    Liked by 1 person

Leave a comment